உள்ளடக்கத்துக்குச் செல்

சைமன் கஸ்நெஸ்ட்ஸ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சைமன் கஸ்நெஸ்ட்ஸ் (1971)

சைமன் ஸ்மித் கஸ்நெட்ஸ் (Simon Smith Kuznets உருசியம்: Семён Абра́мович Кузне́ц ; ஏப்ரல் 30, 1901 - ஜூலை 8, 1985) ஓர் அமெரிக்கப் பொருளாதார மற்றும் புள்ளியியலாளர். இவர் 1971 ஆம் ஆண்டிற்கான பொருளாதாரத்திற்கான நோபல் நினைவுப் பரிசு பெற்றவர் ஆவார்.

கஸ்நெட்ஸ்சினுடைய பங்களிப்பானது பொருளாதாரத்தை ஒரு புலனறிவாதமாகமாற்றுவதற்கும் அளவு பொருளாதார வரலாற்றை உருவாக்குவதற்கும் உதவியது. [1]

சுயசரிதை

[தொகு]

ஆரம்ப கால வாழ்க்கை

[தொகு]

சைமன் ஸ்மித் குஸ்நெட்ஸ் 1901 ஆம் ஆண்டில் லிதுவேனியன்-யூத பெற்றோருக்கு மகனாக பின்ஸ்க் நகரில் உள்ள பெலாரஸில் பிறந்தார். அவர் தனது பள்ளிப்படிப்பை முதலில் ரிவ்னேயில், பின்னர், இன்றைய உக்ரைனின் கார்கீவ் ரியால்சுலேவில் கற்றார் . 1918 ஆம் ஆண்டில், கஸ்நெட்ஸ் கார்கிவ் இன்ஸ்டிடியூட் ஆப் காமர்ஸ் நிறுவனத்தில் சேர்ந்தார். அங்கு பேராசிரியர்கள் பி. ஃபோமின் (அரசியல் பொருளாதாரம்), ஏ. ஆண்டிசிஃபெரோவ் ( புள்ளிவிவரங்கள் ), வி. லெவிட்ஸ்கி ( பொருளாதார வரலாறு மற்றும் பொருளாதார சிந்தனை ), எஸ். பெர்ன்ஸ்டீன் (நிகழ்தகவு கோட்பாடு), வி. டேவட்ஸ் (கணிதம்) ஆகியோரின் வழிகாட்டுதலில் இவர் கல்வி கற்றார்

1920-1921 ஆண்டுகளின் தொடக்கத்தில், உருசிய உள்நாட்டுப் போரின் நிகழ்வுகள் மற்றும் உயர் கல்வித் துறையில் சோவியத் அதிகாரிகள் மேற்கொண்ட மறுசீரமைப்புகளால் நிறுவனத்தில் வழக்கமான கற்றல் நிகழ்வுகளில் தடை ஏற்பட்டது. கஸ்நெட்ஸ் அந்தக் கல்வி நிறுவனத்தில் தனது படிப்பைத் தொடர்ந்தாரா என்பது குறித்த துல்லியமான தகவல்கள் எதுவும் இல்லை.

அமெரிக்காவிற்கு குடியேற்றம்

[தொகு]

1922 ஆம் ஆண்டில் கஸ்நெட்ஸ் குடும்பம் அமெரிக்காவிற்கு குடியேறியது . பின்னர் கஸ்நெட்ஸ் கொலம்பியா பல்கலைக்கழகத்தில் வெஸ்லி கிளெய்ர் மிட்சலின் வழிகாட்டுதலின் கீழ் கல்வி கற்றார். 1923 ஆம் ஆண்டில் பி.எஸ், 1924 ஆம் ஆண்டில் முதுகலை பட்ட்டம் பெற்றார், மற்றும் முனைவர் பட்டத்தினை 1926 ஆம் ஆண்டில் பெற்றார். [2]1925 முதல் 1926 வரை, கஸ்நெட்ஸ் சமூக அறிவியல் ஆராய்ச்சி மன்றத்தில் பொருளாதார முறைகளைப் பற்றி அறிவதில் தனது நேரத்தினைச் செலவிட்டார். இதுவே பின்னர் உற்பத்தி மற்றும் விலைகளில் மதச்சார்பற்ற இயக்கங்களின் பங்கு என்ற நூலிற்கு வழிவகுத்தது.

1927 ஆம் ஆண்டில், அவர் தேசிய பொருளாதார ஆராய்ச்சி பணியகத்தின் (NBER) உறுப்பினரானார், அங்கு அவர் 1961 ஆம் ஆண்டு வரை பணியாற்றினார். 1931 முதல் 1936 வரை, கஸ்நெட்ஸ் பென்சில்வேனியா பல்கலைக்கழகத்தில் பகுதிநேர பேராசிரியராக இருந்தார். 1937 இல் அவர் அமெரிக்க புள்ளிவிவர சங்கத்தின் உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். [3] அங்கு நிரந்தரப் பேராசிரியராக 1936 ஆம் ஆண்டு முதல் 1954 வரை பணியாற்றினார். 1954 ஆம் ஆண்டில், கஸ்நெட்ஸ் ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகச் சேர்ந்தார். அங்கு அவர் 1960 ஆம் ஆண்டு வரை அரசியல் பொருளாதாரத்தின் பேராசிரியராக இருந்தார். 1961 முதல் 1970 இல் ஓய்வு பெறும் வரை, கஸ்நெட்ஸ் ஆர்வர்டு பல்கலைக் கழகத்தில் பேராசிரியராக பனியாற்றினார்.

விருது

[தொகு]

இவர் 1971 ஆம் ஆண்டிற்கான பொருளாதாரத்திற்கான நோபல் நினைவுப் பரிசு பெற்றவர் ஆவார்.

இது தவிர கஸ்நெட்ஸ் பல ஆராய்ச்சி நிறுவனங்கள் மற்றும் அரசு நிறுவனங்களுடன் இணைந்து பணியாற்றினார். 1931-1934 ஆம் ஆண்டில், மிட்சலின் உத்தரவின் பேரில், அமெரிக்க தேசிய வருமானக் கணக்குகளில் NBER இன் பணிகளை கவனித்தார்.

சான்றுகள்

[தொகு]
  1. Abramovitz, Moses (2009). "Simon Kuznets 1901–1985". The Journal of Economic History 46: 241–246. doi:10.1017/S0022050700045642. 
  2. Weyl, E. Glen (2007). "Simon Kuznets: Cautious Empiricist of the Eastern European Jewish Diaspora" (PDF). Harvard University Society of Fellows; Toulouse School of Economics. p. 8. Archived from the original (PDF) on 2013-10-17. பார்க்கப்பட்ட நாள் 2012-02-04.
  3. View/Search Fellows of the ASA பரணிடப்பட்டது 2016-06-16 at the வந்தவழி இயந்திரம், accessed 2016-07-23.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சைமன்_கஸ்நெஸ்ட்ஸ்&oldid=3357895" இலிருந்து மீள்விக்கப்பட்டது