மில்ட்டன் ஃப்ரீட்மன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(மில்ட்டன் பிரீட்மன் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
மில்ட்டன் ஃப்ரீட்மன்
Milton Friedman
Portrait of Milton Friedman.jpg
பிறப்பு ஜூலை 31, 1912(1912-07-31)
பிறப்பிடம் நியூயார்க் நகரம், நியூயார்க் மாநிலம்,  அமெரிக்கா
இறப்பு நவம்பர் 16, 2006 (அகவை 94)
இறப்பிடம் சான் ஃபிரான்சிஸ்கோ, கலிபோர்னியா
வாழிடம்  அமெரிக்கா
தேசியம் அமெரிக்கர்
துறை பொருளியல்
பணி நிறுவனம் ஹூவர் நிறுவனம் (1977–2006)
சிக்காகோ பல்கலைக்கழகம் (1946–77)
கொலம்பியா பல்கலைக்கழகம் (1937–41, 1943–45, 1964–65)
தேசிய பொருளியல் ஆய்வு அமைப்பு (1937–40)
கல்வி கற்ற இடங்கள் கொலம்பியா பல்கலைக்கழகம் (Ph.D.)
சிக்காகோ பல்கலைக்கழகம் (M.A.)
ரட்கர்ஸ் பல்கலைக்கழகம் (B.A.)
ஆய்வு நெறியாளர்   சைமன் குஸ்னெட்ஸ்
குறிப்பிடத்தக்க 
மாணவர்கள்  
கேரி பெக்கர்
ஃபிலிப் டி. கேகன்
அறியப்படுவது பணத்தின் ஆய்வு
சிக்காகோ பள்ளியின் தலைவர்
விருதுகள் ஜான் பேட்ஸ் கிளார்க் விருது (1951)
Nobel prize medal.svg நோபல் பொருளியல் பரிசு (1976)
அதிபரின் விடுதலை விருது 1988
தேசிய அறிவியல் விருது 1988
சமயம் யூதர்

மில்ட்டன் ஃப்ரீட்மன் (ஆங்கிலம்: Milton Friedman) (ஜூலை 31, 1912நவம்பர் 16, 2006) 20ம் நூற்றாண்டின் அதி முக்கிய பொருளியல் நிபுணர்களில் ஒருவர். இவருக்கு 1976 ஆம் ஆண்டு பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு கிடைத்தது. இவரின் consumption analysis, monetary history and theory க்கும் பொருளாதாரத்தை நிலையாக வைத்திருப்பதில் இருக்கும் சிக்கல்களை விபரித்தற்காகவும் இந்தப் பரிசு கிடைத்தது. இவர் தீவிர திறந்த சந்தைப் பொருளாதாரம் சுதந்திரமான ஆரோக்கியமான சமூகத்துக்கு அவசியம் என்று முன்னிறுத்தினார்.

இவரே 70கள், மற்றும் 80களில் தென் அமெரிக்காவில் முன்னெடுக்கப்பட்ட திறந்த சந்தை பொருளாதாரக் கொள்கையின் கருத்தாளர். அர்ஜென்டினாவின் பொருளாதார வீழ்ச்சி, சிலியின் சர்வாதிகாரம் ஆகியவற்றால் இவரின் கொள்கைகள் கடும் விமர்சனத்து உள்ளாகியுளன. குறிப்பாக னொமி கிளைனின் கொள்கையை "Shock Doctrine" என்று விமர்சித்துள்ளார்.

இவர் காலனித்துவத்தின் தாக்கம் என்ன என்ற கேள்விக்கு, இந்தியாவை உதாரணம் காட்டி, அது எப்படி பிரித்தானியாவுக்கு வரவை விட செலவு மிக்கதாக இருந்த என்ற ஆய்வை சுட்டி, விடுதலைக்கு சற்றுப் பின் இந்தியாவின் ஏழ்மை நிலையை அதன் முன் நிலையோடு ஒப்பிட்டு காலனித்துவம் நாட்டைப் பாதிக்கவில்லை என்று கருத்துப்பட பதிலளித்தார்[1]. மேலும் இந்தியா பிரித்தானியாவின் ஆட்சிக்கு உட்பட்டு விடுதலைப் போராட்டம் தீவிரமாக முன்னர் (1920க்கு முன்னர்) இந்தியா பொருளாதார வளர்ச்சி பெற்றதென்றும், அதன் பின்னர் தோய்வு கண்டது என்று குறிப்பிட்டார். இது பல ஆய்வுகளுக்கு முரணான தகவல் ஆகும்[மேற்கோள் தேவை].

கொள்கைகள்[தொகு]

  • அரசுப்பங்களிப்பு மிகக்குறைவாகவும், தனிமனித சுதந்திரம் விரிவாகவும் அமையவேண்டும்.
  • உற்பத்தியாளருக்கு வழங்கப்படும் பணஉதவி முற்றாக நிறுத்தப்படவேண்டும். குறிப்பாக அமெரிக்கா தமது விவசாயிகளுக்கு வழங்கும் பண உதவிகள்.
  • போதையையும், விபசாரத்தையும் குற்றச்செயல்களாகக் கருதக்கூடாது.
  • கல்வியை திறந்த சந்தையில் விட வேண்டும். வேண்டுமானால் அரசு மாணவர்களுக்கு உதவித்தொகை கொடுத்து, கல்வி நிலையத் தெரிவை அவர்களிடம் விட்டுவிட வேண்டும்.
  • எல்லாவிதமான தொழிலாளர் ஒன்றியங்களும் (union) தேவையில்லை. குறிப்பாக ஆசிரிய ஒன்றியம் அரசியல், கல்விச் செல்வாக்கு அதிகூடியது.

மேற்கோள்கள்[தொகு]

  1. Milton Friedman on Slavery and Colonization
"https://ta.wikipedia.org/w/index.php?title=மில்ட்டன்_ஃப்ரீட்மன்&oldid=2027856" இருந்து மீள்விக்கப்பட்டது