கிறிஸ்டோபர் அந்தோனி பிசாரைட்ஸ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சர் கிறிஸ்டோபர் அந்தோனி பிசாரைட்ஸ்
பேராசிரியர் சர் கிறிஸ்டோபர் அந்தோனி பிசாரைட்ஸ்
பிறப்பு20 பெப்ரவரி 1948 (1948-02-20) (அகவை 75)[1]
நிகோசியா, சைப்பிரசு
தேசியம்பிரித்தானியர், சைபிரியாட்
நிறுவனம்லண்டன் பொருளியல் பள்ளி 1976–
செளத்தாம்ப்டன் 1974–76
சைப்ரசு பல்கலைகழகம் 2011–[2]
ஹாங் காங் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பல்கலைகழகம் 2013–[3]
துறைதொழிலாளர் பொருளாதாரம்
பயின்றகம்லண்டன் பொருளியல் பள்ளி
எசக்ஸ் பல்கலைகழகம்
தாக்கம்தாலே தோமஸ் மார்டென்சென்
பங்களிப்புகள்Macroeconomic search and matching theories of unemployment,
matching function,
structural growth
விருதுகள்தொழிலாளர் பொருளியலுக்கான IZA பரிசு (2006)
நோபல் பரிசு
(2010)
ஆய்வுக் கட்டுரைகள்

கிறிஸ்டோபர் அந்தோனி பிசாரைட்ஸ் (Sir Christopher Antoniou Pissarides, பிறப்பு: பிப்ரவரி 20, 1948 [1] ) ஒரு பிரித்தானிய-சைபிரியாட் பொருளியல் நிபுணர். இவர் பொருளாதாரம் மற்றும் அரசியல் அறிவியல் போராசிரியர் மற்றும் லண்டன் மேலாண்மை பள்ளியில் ரிகுஸ் பேராசிரியர். இவரின் ஆராய்ச்சிகள் பருபொருளியல், பொருளாதார வளர்ச்சி, தொழிலாளர் பொருளாதாரம் மற்றும் பொருளாதார கொள்கை பற்றியதாக இருந்தது. 2010 ஆம் ஆண்டின் பொருளாதாரத்திற்கான நோபல் பரிசுபீட்டர் ஆர்தர் டயமண்ட் மற்றும் தாலே தோமஸ் மார்டென்சென் உடன் இணைந்துப் பெற்றார்.[4]

ஆரம்ப வாழ்க்கை[தொகு]

பிசாரைட்ஸ் நிகோசியா, சைப்பரஸ் ஒரு கிரேக்க குடும்பத்தில் பிறந்தார்.[5][6] அவர் பான்சைபிரியன் ஜிம்னாசிய்ம், நிகோசியாவில் பயின்றார். இவர் எசக்ஸ் பல்கலைகழகத்தில் 1970 ஆம் ஆண்டில் இளங்கலை (BA ) பொருளியல் பட்டமும் மற்றும் 1971 ஆம் ஆண்டில் முதுகலை பொருளியல் (MA) பட்டமும் பெற்றார். இதனை தொடர்ந்து லண்டன் மேலாண்மைப் பள்ளியில் 1973 ஆம் ஆண்டில் மிசியோ மோரிசிமா மேற்பார்வையில் முனைவர் பட்டம் (PhD) பெற்றார்.

ஆசிரியர் பணி[தொகு]

இவர் லண்டன் மேலாண்மைப் பள்ளியில் ரிகுஸ் பேராசிரியாராக 1976 ஆம் ஆண்டு முதல் இருந்தார் [7] மற்றும் பருப்பொருளியல் துறையின் ஆசிரியராகவும் இருந்தார். 1974 முதல் 1976 வரையில் செளத்தாம்டன் பல்கலைகழகத்தில் பேராசிரியராக இருந்தார். 1979 முதல் 1980 வரை ஹார்வர்டு பல்கலைக்கழகம் மற்றும் 1990 முதல் 1991 வரை கலிபோர்னியா பல்கலைக்கழகம் (பெர்க்லி) வருகை பேராசிரியராகவும் இருந்திருக்கிறார்.

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 Prof Christopher Pissarides பரணிடப்பட்டது 14 அக்டோபர் 2010 at the வந்தவழி இயந்திரம் at debretts.com
  2. "Archived copy". 12 மே 2013 அன்று மூலம் பரணிடப்பட்டது. 26 ஜனவரி 2013 அன்று பார்க்கப்பட்டது.CS1 maint: archived copy as title (link)
  3. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". 2015-05-18 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2018-01-11 அன்று பார்க்கப்பட்டது.
  4. The Sveriges Riksbank Prize in Economic Sciences in Memory of Alfred Nobel 2010 Peter A. Diamond, Dale T. Mortensen, Christopher A. Pissarides, official web site
  5. "Christopher A. Pissarides – Biographical". Nobelprize.org. 11 October 2010 அன்று பார்க்கப்பட்டது.
  6. CHRISTOPHER A. PISSARIDES
  7. "News". Salome.lse.ac.uk. 14 ஜூன் 2007. 15 சூலை 2012 அன்று மூலம் பரணிடப்பட்டது. 11 அக்டோபர் 2010 அன்று பார்க்கப்பட்டது.

வெளி இணைப்புகள்[தொகு]