உள்ளடக்கத்துக்குச் செல்

தாலே தோமஸ் மார்டென்சென்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாலே தோமஸ் மார்டென்சென்
2010 இல் மார்டென்சென்
பிறப்பு(1939-02-02)பெப்ரவரி 2, 1939
ஓரிகன், அமெரிக்கா
இறப்புசனவரி 9, 2014(2014-01-09) (அகவை 74)
வில்லாமேடே, இலினொய், அமெரிக்கா
தேசியம்அமெரிக்கர்
நிறுவனம்வடமேற்குப் பல்கலைகழகம்
துறைதொழிலாளர் பொருளாதாரம்
பயின்றகம்கார்னீகி மிலோன் பல்கலைகழகம்
வில்லாமேடே பல்கலைகழகம்
தாக்கமுள்ளவர்கிறிஸ்டோபர் அ. பிசாரைட்ஸ்
விருதுகள்தொழிலாளர் பொருளாதாரம் IZA பரிசு (2005)
நோபல் பரிசு
2010
ஆய்வுக் கட்டுரைகள்

தாலே தோமஸ் மார்டென்சென் (பிப்ரவரி 2, 1939 - சனவரி 9, 2014) ஒரு அமெரிக்க பொருளியலாளர் மற்றும் 2010 ஆம் ஆண்டின் பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு பீட்டர் ஆர்தர் டயமண்ட் மற்றும் கிறிஸ்டோபர் அ. பிசாரைட்ஸ் உடன் இணைந்துப் பெற்றார்.

கல்வி

[தொகு]

மார்டென்சென் ஓரிகன் மாநிலத்தில் பிறந்தார்.[1] வில்லாமேடே பல்கலைகழகத்தில் இளங்கலை பட்டம் பொருளியலில் பெற்றார் மற்றும் பொருளாதாரத்தில் முனைவர் பட்டம் கார்னீகி மிலோன் பல்கலைகழகத்தில் பெற்றார்.[2]

ஆராய்ச்சிப்பணி

[தொகு]

1965 ஆம் ஆண்டு முதல் வடமேற்கு பல்கலைகழகத்தில் ஆசிரியாராக இருந்தார் மற்றும் கெலாக் மேலாண்மை பள்ளியில் மேலாண்மை பொருளியல் மற்றும் முடிவெடுக்கும் அறிவியல் துறையில் 1980 ஆம் ஆண்டு முதல் பேராசிரியாரக இருந்துருக்கிறார். 2006 முதல் 2010 வரை ஆரஸ் பல்கலைகழகத்தில் நீல்ஸ் போர் கெளரவ பேராசிரியராக பொருளியல் மற்றும் மேலாண்மை துறையில் இருந்துருக்கிறார். 2011 ஆம் ஆண்டு வில்லாமேடே பல்கலைகழகத்தில் அவருக்கு கெளரவ முனைவர் பட்டம் வழங்கப்பட்டது.

மார்டென்சென் ஆராய்ச்சி முழுவதும் தொழிலாளர் பொருளியல், பகுபொருளியல் மற்றும் பொருளாதார கோட்பாடுகளில் இருந்தது. இவர் பிறழ்ச்சி வேலையின்மைக்கான பொருந்தும் கோட்பாடு மற்றும் தேடல் பற்றிய ஆராய்ச்சிக்காக அறியப்படுகிறார்.

மேற்கோள்கள்

[தொகு]

வெளிப்புற இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=தாலே_தோமஸ்_மார்டென்சென்&oldid=2717510" இலிருந்து மீள்விக்கப்பட்டது