உள்ளடக்கத்துக்குச் செல்

கொமொரோசு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கொமொரோசு ஒன்றியம்
Union des Comores
Udzima wa Komori
الإتّحاد القمريّ
Al-Ittiād Al-Qumuriyy
கொடி of கொமொரோசின்
கொடி
சின்னம் of கொமொரோசின்
சின்னம்
குறிக்கோள்: "Unité - Solidarité - Développement"  (பிரெஞ்சு)
"Unity - Solidarity - Development"
நாட்டுப்பண்: Udzima wa ya Masiwa  (Comorian)
"The Union of the Great Islands"
கொமொரோசின்அமைவிடம்
தலைநகரம்மொரோனி
பெரிய நகர்தலைநகரம்
ஆட்சி மொழி(கள்)கொமொரியம், அரபு, பிரெஞ்சு
அரசாங்கம்கூட்டாட்சிக் குடியரசு
• அதிபர்
அகமது அப்துல்லா எம். சாம்பி
விடுதலை 
• Date
யூலை 6 1975
பரப்பு
• மொத்தம்
2,235 km2 (863 sq mi) (178வது)
• நீர் (%)
சிறியது
மக்கள் தொகை
• 2005 மதிப்பிடு
798,000 (159வது)
• அடர்த்தி
275/km2 (712.2/sq mi) (25வது)
மொ.உ.உ. (கொ.ஆ.ச.)2004 மதிப்பீடு
• மொத்தம்
$1.049 பில்லியன் (171வது)
• தலைவிகிதம்
$1,660 (156வது)
மமேசு (2007)Increase 0.561
Error: Invalid HDI value · 134th
நாணயம்கொமொரிய பிராங்க் (KMF)
நேர வலயம்ஒ.அ.நே+3 (EAT)
• கோடை (ப.சே.நே.)
ஒ.அ.நே+3 (கடைபிடிக்கப்படுவதில்லை)
அழைப்புக்குறி269
இணையக் குறி.km

கொமொரோசு அல்லது அதிகாரப்பட்சமாக கொமொரோசு ஒன்றியம் இந்தியப் பெருங்கடலில் ஆப்பிரிக்காவின் கிழக்குக் கரையில் வட மடகசுகாருக்கும் வடகிழக்கு மொசாம்பிக்குக்கும் இடையே அமைந்துள்ள தீவுகளால் ஆன நாடாகும். மொசாம்பிக், மடகாஸ்கர், சிஷெல்ஸ், தன்சானியா என்பன கொமொரோசுக்கு அண்மையில் அமைந்துள்ள நாடுகளாகும். 2002 ஆம் ஆண்டுக்கு முன்னதாக இந்நாடு கொமொரோசு இசுலாமிய கூட்டாட்சிக் குடியரசு என அழைக்கப்பட்டு வந்தது. 2,235 சதுர கி.மீ. (863 சதுர மைல்)[1] பரப்பளவைக் கொண்டக் கொமொரொசு பரப்பளவின் படி ஆப்பிரிக்காவின் மூன்றாவது சிறிய நாடும் மக்கள்தொகை அடிப்படையில் ஆப்பிரிக்காவில் ஆறாவது சிறிய நாடுமாகும். இருந்த போதிலும் ஆப்பிரிக்காவின் மக்கள்தொகை அடர்த்திக் கூடிய நாடுகளில் கொமொரோசும் ஒன்றாக திகழ்கிறது. கொமொரோசு என்ற பெயர் அரபு மொழியின் சந்திரனைக் குறிக்கும் பதமான கொமார் என்பதிலிருந்து தோன்றியதாகும்.[2]

நாடு அதிகாரப் பட்சமாக கொமொரோசு தீவுக்குழுமத்தில் அமைந்துள்ள நிகசிட்சா (Ngazidja), மவாளி (Mwali), நிசவாணி (Nzwani) மவோரே (Mahoré) என்ற நான்கு முக்கியத் தீவுகளைடும் மற்றும் சில சிறிய தீவுகளையும் கொண்டது.[3][4] இருப்பினும் கொமொரோசு ஒன்றியமோ அல்லது அதற்கு முன்பிருந்த அரசுகளோ மவோரே தீவை ஆட்சி செய்யவில்லை. பிரான்சின் அடிமை நாடுகளாக கொமொரோசு இருந்தப்போது பிரான்சிடமிருந்து விடுதலையடைய வேண்டுமா எந்பதை அறிய நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் மவொரே தீவு விடுதலைக்கு எதிராக வக்களித்ததாலும், மவோரேயின் கட்டுப்பாட்டை கொமொரோசிடம் வழங்குவதற்கான ஐ.நா.வின் தீர்மானத்தை பிரான்சு தனது வீட்டோ அதிகாரத்தைப் பயன்படுத்தி[5][6] நிரகரித்தமையாலும் மவொரேயின் ஆட்சி கொமொரோசிடம் கையளிக்கப்படவில்லை.

கொமொரோசு பல காலாச்சராங்களில் கலப்புக் காரணமாக ஏற்பட்ட தேசியமாதாலால் கலாச்சாரப் பல்வகைமையைக் கொண்டுள்ளது. இங்கு கொமொரிய மொழி, பிரெஞ்சு மொழி, அரபு மொழி என்பன அதிகாரப்பட்ச மொழிகளாகும். இது ஆப்பிரிக்க ஒன்றியம், அரபு லீக், இந்திய மாக்கடல் ஆணயம் போன்ற பன்னாட்டு அமைப்புகளிலும் அங்கத்தவராக உள்ளது.

உசாத்துணைகள்

[தொகு]
  1. "UN Demographic Yearbook" (PDF).
  2. "Comores Online.com - reference to the history of the name". Archived from the original on 2007-10-13. பார்க்கப்பட்ட நாள் 2008-04-07.
  3. The first UN General Assembly Resolution regarding the matter, "Question of the Comorian island of Mayotte பரணிடப்பட்டது 2008-04-08 at the வந்தவழி இயந்திரம் (PDF)," United Nations General Assembly Resolution A/RES/31/4, (21 October 1976) states "the occupation by France of the Comorian island of Mayotte constitutes a flagrant encroachment on the national unity of the Comorian State, a Member of the United Nations," rejecting the French-administered referendums and condemning French presence in Mayotte.
  4. As defined by the Organization of African Unity, the Movement of Non-Aligned Countries, the Organisation of the Islamic Conference, and the United Nations General Assembly: the most recent UN General Assembly Resolution regarding the matter, "Question of the Comorian island of Mayotte," United Nations General Assembly Resolution A/RES/49/18, (6 December 1994) states "the results of the referendum of 22 December 1974 were to be considered on a global basis and not island by island,...Reaffirms the sovereignty of the Islamic Federal Republic of the Comoros over the island of Mayotte". Several resolutions expressing similar sentiments were passed between 1977 (31/4) and 1994 (49/18). பரணிடப்பட்டது 2008-01-06 at the வந்தவழி இயந்திரம்
  5. "Subjects of UN Security Council Vetoes". Global Policy Forum. பார்க்கப்பட்ட நாள் 2008-03-27.
  6. "Article 33" (PDF). UN Treaty.


"https://ta.wikipedia.org/w/index.php?title=கொமொரோசு&oldid=4181219" இலிருந்து மீள்விக்கப்பட்டது