அரபு நாடுகள் கூட்டமைப்பு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(அரபு லீக் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
جامعة الدول العربية
Jāmaʻat ad-Duwal al-ʻArabiyya
அரபு நாடுகள் கூட்டமைப்பு
கொடி சின்னம்
தலைமையகம் கெய்ரோ, எகிப்து1
அதிகாரபூர்வ மொழிகள் அரபு மொழி
அங்கத்துவம்
Leaders
 •  செயலாளர் நாயகம் அமர் மூசா (2001 இலிருந்து)
 •  அரபு லீக்கின்
சபை

சிரியா
 •  அரபு நாடாளுமன்றத்தின்
அவைத் தலைவர்

நாபி பெரி
உருவாக்கம்
 •  அலெக்சாந்திரியா Protocol மார்ச் 22, 1945 
பரப்பு
 •  மேற்கு சகாராவின் மொத்தப் பரப்பு 1,39,53,041 கிமீ2 (2ம்2)
53,82,910 சதுர மைல்
 •  மேற்கு சகாரா தவிர்ந்த பரப்பளவு 13,687,041 கிமீ2 ( 5,280,291 ச. மை)
மக்கள் தொகை
 •  2007 கணக்கெடுப்பு 339,510,535 (3ம்2)
 •  அடர்த்தி 24.33/km2
63/sq mi
மொ.உ.உ (கொஆச) 2007 கணக்கெடுப்பு
 •  மொத்தம் $2,364,871 மில்லியன் (6th2)
 •  தலைவிகிதம் $11,013 (70ம்)
நாணயம்
நேர வலயம் (ஒ.அ.நே+0 to +4)
Website
(அரபு மொழி) http://arableagueonline.org/
1. 1979 இலிருந்து 1989 வரை: துனிஸ், துனீசியா.
2. If ranked among nation states.

அரபு லீக் எனவும் அழைக்கப்படும் அரபு நாடுகள் கூட்டமைப்பு என்பது, தென்மேற்கு ஆசியா, வடக்கு ஆபிரிக்கா, வடமேற்கு ஆபிரிக்கா ஆகிய பகுதிகளைச் சேர்ந்த அரபு நாடுகளின் கூட்டமைப்பு ஆகும். 1945 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 22 ஆம் தேதி கெய்ரோவில் இது அமைக்கப்பட்டது. தொடக்கத்தில் எகிப்து, ஈராக், டிரான்ஸ்ஜோர்தான் (1946 க்குப் பின் ஜோர்தான் எனப் பெயர் மாற்றப்பட்டது), லெபனான், சவூதி அரேபியா, சிரியா ஆகிய நாடுகள் இக் கூட்டமைப்பில் உறுப்பினராக இருந்தன. 1945 மே 5 ஆம் நாள் யேமன் இதில் இணைந்தது. தற்போது இக் கூட்டமைப்பில் 22 நாடுகள் உள்ளன.

இக் கூட்டமைப்பின் முக்கிய நோக்கம் பிவருமாறு:

உறுப்பு நாடுகளிடையே நெருக்கமான தொடர்புகளைப் பேணலும், அவற்றிடையே ஒத்துழைப்புக்கு வழி வகுத்தலும், அவற்றின் சுதந்திரத்தையும் இறைமையையும் பாதுகாத்தலும், பொதுவாக அரபு நாடுகளின் விவகாரங்களிலும், நலன்களிலும் அக்கறை செலுத்துதலும்.

அரபு லீக், அதன் உறுப்பு நாடுகளின் நலன்களை மேம்படுத்தும் நோக்கில், அரசியல், பொருளாதார, பண்பாட்டு, சமூகத் திட்டங்களை ஏற்படுத்தியுள்ளது. தமது கொள்கை நிலைகளில் ஒருமைப்பாடு காண்பதற்கும், பொதுவான பிரச்சினைகள் பற்றி ஆராய்வதற்கும், அரபு நாடுகள் இடையேயான பிணக்குகளைத் தீர்ப்பதற்கும், முரண்பாடுகளைக் குறைப்பதற்குமான ஒரு களமாகச் செயல்படுகிறது.

கல்வி[தொகு]

Arab literacy rate.svg
தரவரிசை நாடு எழுத்தறிவு சதவீதம்
1  குவைத் 94.5[1]
2  பலத்தீன் 94.1[2]
3  கட்டார் 93.1[3]
4  யோர்தான் 92.2[1]
5  பாகாரேயின் 90.8[3]
6  ஐக்கிய அரபு அமீரகம் 90.0[3]
7  லெபனான் 89.6[2]
8  லிபியா 88.4[1]
9  ஓமான் 86.7[2]
10  சவூதி அரேபியா 85.5[1]
11  சிரியா 83.6[4]
12  துனீசியா 78[1]
13  ஈராக் 77.6[2]
14  கொமொரோசு 73.6[4]
15  அல்ஜீரியா 72.6[1]
16  சூடான் 69.3[2]
17  ஜிபுட்டி 67.9[5]
18  எகிப்து 66.4[4]
19  யேமன் 60.9[4]
20  மூரித்தானியா 56.8[4]
21  மொரோக்கோ 56.4[4]
22  சோமாலியா 51.6[4]

உச்சி மாநாடுகள்[தொகு]

 1. _எகிப்தின் கொடி கெய்ரோ: 13–17 சனவரி 1964.
 2. எகிப்தின் கொடி அலெக்சாந்திரியா: 5–11 செப்டம்பர் 1964.
 3. மொரோக்கோவின் கொடி கசபிளங்கா: 13–17 செப்டம்பர் 1965.
 4. சூடானின் கொடி கார்த்தூம்: 29 ஆகத்து 1967.
 5. மொரோக்கோவின் கொடி ரெபாட்: 21–23 திசம்பர் 1969.
 6. எகிப்தின் கொடி கெய்ரோ (முதல் அவசர மாநாடு): 21–27 செப்டம்பர் 1970
 7. அல்ஜீரியாவின் கொடி அல்ஜியர்ஸ்: 26–28 நவம்பர்.1973.
 8. மொரோக்கோவின் கொடி ரெபாட்: 29 அக்டோபர் 1974.
 9. சவூதி அரேபியாவின் கொடி ரியாத் (இரண்டாவது அவசர உச்சி மாநாடு): 17–28 அக்டோபர் 1976.
 10. எகிப்தின் கொடி கெய்ரோ: 25–26 அக்டோபர் 1976.
 11. ஈராக்கின் கொடி பாக்தாத்: 2–5 நவம்பர்.1978.
 12. துனீசியாவின் கொடி துனிசு: 20–22 நவம்பர் 1979.
 13. யோர்தானின் கொடி அம்மான்: 21–22 நவம்பர் 1980.
 14. மொரோக்கோவின் கொடி Fes: 6–9 செப்டம்பர் 1982.
 15. மொரோக்கோவின் கொடி கசபிளங்கா (3வது அவசர மாநாடு): 7–9 செப்டம்பர் 1985
 16. யோர்தானின் கொடி அம்மான் (4வது அவசர மாநாடு): 8–12 நவம்பர் 1987.
 17. அல்ஜீரியாவின் கொடி அல்ஜியர்ஸ் (5வது அவசர மாநாடு): 7–9 சூன் 1988.
 18. மொரோக்கோவின் கொடி கசபிளங்கா (6வது அவசர மாநாடு): 23–26 சூன் 1989.
 19. ஈராக்கின் கொடி பாக்தாத் (7வது அவசர மாநாடு): 28–30 மார்ச் 1990.
 20. எகிப்தின் கொடி கெய்ரோ (8வது அவசர மாநாடு): 9–10 ஆகத்து 1990
 21. எகிப்தின் கொடி கெய்ரோ (9வது அவசர மாநாடு): 22–23 சூன் 1996.
 22. எகிப்தின் கொடி கெய்ரோ (10வது அவசர மாநாடு): 21–22 அக்டோபர் 2000.
 23. யோர்தானின் கொடி அம்மான்: 27–28 மார்ச் 2001.
 24. லெபனானின் கொடி பெய்ரூட்: 27–28 மார்ச் 2002.
 25. எகிப்தின் கொடி Sharm el-Sheikh: 1 மார்ச் 2003.
 26. துனீசியாவின் கொடி துனிசு: 22–23 மே 2004.
 27. அல்ஜீரியாவின் கொடி அல்ஜியர்ஸ்: 22–23 மார்ச் 2005.
 28. சூடானின் கொடி கார்த்தூம்: 28–30 மார்ச் 2006.
 29. சவூதி அரேபியாவின் கொடி ரியாத்: 27–28 மார்ச் 2007.
 30. சிரியாவின் கொடி தமாஸ்கஸ்: 29–30 மார்ச் 2008.
 31. கட்டார் கொடி தோஹா: 28–30 மார்ச் 2009.
 32. லிபியாவின் கொடி Sirte: 27–28 மார்ச் 2010.
 33. ஈராக்கின் கொடி பாக்தாத்: மார்ச் 2012 தள்ளிவைக்கப்பட்டது.
 • Two summits are not added to the system of Arab League summits:
  • Anshas, எகிப்து: 28–29 மே 1946
  • பெய்ரூட், லெபனான்: 13 – 15 நவம்பர் 1956
 • Summit 14 in Fes, மொரோக்கோ, occurred in two stages:
  • 25 நவம்பர் 1981ல் ஐந்து மணிநேரம் நடைபெற்ற மாநாட்டில் முடிவு எதுவும் எட்டப்படவில்லை:
  • On 6–9 செப்டம்பர் 1982

மேற்கோள்கள்[தொகு]