பயனர் பேச்சு:Sivakumar

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
தொகுப்பு

தொகுப்புகள்


1|2



பொருளடக்கம்

[தொகு] 2009 த.வி வேலைத்திட்டம்

வணக்கம் சிவக்குமார்:

உங்களையும் உங்கள் நண்பர்களையும் இந்த ஆண்டு சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி.

அடுத்த ஆண்டு நமது வேலைத்திட்டம் என்னவாக அமையவேண்டும் என்ற உங்கள் பரிந்துரைகளை இங்கு பகிர்தால் நன்றி. மூன்று முக்கிய துறைகள், மூன்று சந்தைப்படுத்தல் வழிகள் பற்றியும் குறிப்பிட்டால் நன்று. --Natkeeran 03:50, 24 டிசம்பர் 2008 (UTC)

[தொகு] பாராட்டுக்கள்

சிவா, நீங்கள் அருமையாக வலைவாசல்:விலங்குகள் பகுதியைத் தொடங்கியுள்ளீர்கள். செய்யவேண்டிய ஒன்று. தேர்ந்து செயலாற்றத் தொடங்கியமைக்கு பாராட்டுகள்! இதே போல ஏற்கனவே உள்ள கணிதம் பற்றியதை விரிவாக்க வேண்டும், இன்னும் அறிவியல் போன்று பல தலைப்புகளுக்கு வலைவாயில்கள் அமைக்க வேண்டும். வலைவாயில் என்றோ, வாயில் என்றோ சீராக பெயர் சூட்டுமாறு வேண்டிக்கொள்கிறேன்.--செல்வா 19:25, 31 டிசம்பர் 2008 (UTC)

நன்றி செல்வா. இந்த ஆண்டு விலங்கியல் பகுதியை மேம்படுத்த வேண்டும். --சிவக்குமார் \பேச்சு 16:04, 1 ஜனவரி 2009 (UTC)


நல்வரவு சிவகுமார். உங்களை மீண்டும் இங்கு காண்பதில் மகிழ்ச்சி. --Natkeeran 00:00, 5 மார்ச் 2009 (UTC)
வாங்க, வாங்க, சிவா. இரு நாட்களுக்கு முன்னர்தான் என்ன ஆளைக் காணோம் என்று எண்ணிக் கொண்டிருந்தேன். :-) -- சுந்தர் \பேச்சு 14:52, 5 மார்ச் 2009 (UTC)
வாருங்கள் சிவா! நானும் தான்சானியாவில் இருந்து திரும்பி வந்த பொழுது பார்த்தேன். நீங்களும் ஒரு மாதமாக காணவில்லை என்று. உங்களை மீண்டும் பார்ப்ப்பதில் மகிழ்ச்சி.--செல்வா 15:59, 5 மார்ச் 2009 (UTC)

நன்றி நற்கீரன், சுந்தர், செல்வா. விரைவில் நானும் உங்களைப் போல் பங்களிக்க முயல்வேன். செல்வா, தாங்கள் தான்சானியா சென்றது குறித்து மகிழ்ச்சி. தங்கள் அனுபவங்களை எழுதுங்கள். ஆவலுடன் காத்திருக்கிறேன். --சிவக்குமார் \பேச்சு 17:48, 5 மார்ச் 2009 (UTC)

கிளிமஞ்சாரோ மலை ஏறினோம் (நானும் என் மனைவியும் மகளும்). ஆப்பிரிக்காவின் கூரை என்று புகழப்படும் உச்சியாகிய உஃகுரு (Uhuru) முகட்டை எட்டினோம். உயரம் 5895 மீ. எங்கு எப்படி எழுதுவது என்று இன்னும் முடிவு செய்யவில்லை, ஆனால் தமிழ் விக்கியில் குறைந்தது ஒரு 20-30 கட்டுரைகளாவது இதன் அடிப்படையில் எழுத எண்ணியுள்ளேன். குங்குரு, கொலோபசுக் குரங்கு, மூக்குக் கொம்பன் முதலியன இப்படி உந்தப்பட்டு எழுதியதுதான்.--செல்வா 17:56, 5 மார்ச் 2009 (UTC)

[தொகு] welcome

Thank you for your welcome but i cant understand Tamil. so please make an alternate English welcome -Lee2008 02:32, 10 மார்ச் 2009 (UTC)

[தொகு] Tamil Eelam

Please can you help us. We are students in London and we want to create awareness in Sri Lanka. We need to create a Tamil version of this website: http://www.tamileelamonline.com/en/Main_Page . Can you help us? Please we need your help.

Our Email is sachein2000@hotmail.co.uk

Sachein 11:21, 10 ஏப்ரல் 2009 (UTC)

[தொகு] வாழ்த்துக்கள்

சிவா, நீங்கள் 10,000 தொகுப்புக்களைத் தாண்டியதையிட்டு மகிழ்ச்சி. உங்கள் பணி மென்மேலும் தொடர எனது வாழ்த்துக்கள். மயூரநாதன் 00:58, 7 மே 2009 (UTC)

வாழ்த்துகள் சிவா. நல்லதொரு படிமத்தை உங்கள் 10,000-மாவது தொகுப்பில் சேர்த்துள்ளீர்கள். -- சுந்தர் \பேச்சு 03:38, 7 மே 2009 (UTC)
நன்றி மயூரநாதன், சுந்தர். பத்தாயிரத்தை நெருங்கியதைச் சுட்டிக்காட்டிய செல்வாவுக்கும் நன்றிகள். :)--சிவக்குமார் \பேச்சு 18:53, 7 மே 2009 (UTC)

10,000 தொகுப்புகள் செய்து ஆக்கம் அளித்த உங்களுக்கு வாழ்த்துகள், சிவக்குமார். விரைவில் 1000 கட்டுரைகளைத் தாண்டி ஆயிரவர் நிலையை எய்த வாழ்த்துகள். 1000 ஐ எட்ட இன்னும் 299 கட்டுரைகள் எழுத வேண்டும் தேவயானி உங்கள் 700 ஆவது யயாதி 701 ஆவது. உங்களைப் பின் தொடர்ந்து நானும் வந்து கொண்டிருக்கின்றேன் :) --செல்வா 23:24, 7 மே 2009 (UTC)

[தொகு] புதிய திட்டம்

சிவா. விக்கிப்பீடியா:விக்கித் திட்டம் இந்தியத்துணைக்கண்ட பாலூட்டிகள் திட்டபக்கத்தை பாருங்கள் உங்களின் கருத்துக்களை கூறுங்கள். இத்திட்டத்தில் உங்களின் பங்களிப்பு மிகவும் தேவை--கார்த்திக் 19:40, 3 ஆகஸ்ட் 2009 (UTC)

[தொகு] வரவேற்புக்கு நன்றி!

வரவேற்புக்கு மிக்க நன்றி! :) --Vegpuff 13:56, 19 ஆகஸ்ட் 2009 (UTC)

[தொகு] கீழ்பவானி திட்டம்

சிவா கீழ்பவானி திட்டம் (கால்வாய்) பற்றி ஏதாவது செய்தி தெரியுமா?. என்னிடம் படம் உள்ளது (பெருந்துறை அருகே எடுத்தது) ஆனால் 5 வரி அளவு கூட தகவல் இல்லை. --குறும்பன் 00:45, 17 நவம்பர் 2009 (UTC)

[தொகு] 2010 த.வி வேலைத்திட்டம்

2010 இல் தமிழ் விக்கிப்பீடியாவின், தமிழ் விக்கித் திட்டங்களில் செயற்பாடுகள் எவ்வாறு அமைய வேண்டும் என்பது தொடர்பான உங்கள் எண்ணக்கருக்களை பகிர்ந்தால் உதவியாக இருக்கும். குறிப்பான செயற்படுத்தக்கூடிய பரிந்துரைகளாக இருந்தால் நன்று. நன்றி.

விக்கிப்பீடியா:2009 தமிழ் விக்கிப்பீடியா ஆண்டு அறிக்கை/2009 Tamil Wikipedia Annual Review
விக்கிப்பீடியா பேச்சு:2009 தமிழ் விக்கிப்பீடியா ஆண்டு அறிக்கை/2009 Tamil Wikipedia Annual Review

--Natkeeran 03:07, 26 டிசம்பர் 2009 (UTC)

[தொகு] நன்றிகள்

சிவக்குமார், உங்கள் பாராட்டுக்களுக்கு நன்றி. நீண்ட காலம் தமிழ் விக்கிப்பீடியாவுக்குப் பங்களிக்க வேண்டும் என்பதுதான் எனது விருப்பமும். உடன் பங்களிப்பாளர்கள் அனைவரதும் ஆதரவுடன் இது நிறைவேறும் என்பது எனது நம்பிக்கை. மயூரநாதன் 18:40, 11 ஜனவரி 2010 (UTC)

[தொகு] வணக்கம்

நடுவில் உள்ள சிவப்பு நிற சட்டைதான் நான் சிவகுமார் ஐயா--Msudhakardce 08:50, 5 பெப்ரவரி 2010 (UTC)

[தொகு] தமிழ் விக்கிப்பீடியாவின் சார்பாளர்கள் சேர்ந்தெடுப்பு

சிவா உங்கள் ஒப்புதலுக்கு மிக்க நன்றி. உங்கள் பெயரைச் சார்பாளர்கள் (பிரதிநிதிகள்) பட்டியலில் (பார்க்க விக்கிப்பீடியா:ஆலமரத்தடி#சேர்ந்தெடுப்பு வேண்டுகோள்) சேர்த்துள்ளேன். மயூரநாதன் உங்கள் பெயரைச் சேர்க்கப் பரிந்துரைத்தார். நானும் சேர்க்க நினைத்திருந்தும் ஏனோ விடுபட்டுப்போனது. மன்னிக்கவும்.--செல்வா 23:27, 18 பெப்ரவரி 2010 (UTC)

[தொகு] முதற்பக்கம்

ஐயா, முதற்பக்கம் உள்ள உங்களுக்கு தெரியுமா பகுதியில் நம் கருத்துகளை இடம் பெறச்செய்வது எப்படி?--Msudhakardce 11:16, 8 மார்ச் 2010 (UTC)

[தொகு] தேவைப்படும் கட்டுரைகள்

வணக்கம். வலைவாசல்:கட்டுரைப்போட்டி/தலைப்புகள் பட்டியல் பக்கத்தில் தேவைப்படும் கட்டுரைத் தலைப்புகளைக் குவிக்க உதவ முடியுமா? நடக்க இருக்கும் கட்டுரைப் போட்டியை முன்னிட்டு இயன்ற அளவு வழமையை விடக் கூடுதலாக உங்களால் பங்களிக்க முடிந்தால் நன்றாக இருக்கும். நன்றி--ரவி 11:49, 8 மார்ச் 2010 (UTC)

[தொகு] கூகுள் திட்டம் குறித்த வாக்கும் கருத்தும் தேவை.

வணக்கம். கூகுள் மொழிபெயர்ப்புத் திட்டம் குறித்து ஆலமரத்தடியில் உங்கள் வாக்கையும் கருத்தையும் தெரிவித்தால் நன்றாக இருக்கும். நன்றி--ரவி 03:52, 22 ஏப்ரல் 2010 (UTC)

[தொகு] முதற்பக்க அறிமுகம்

வணக்கம் சிவா. உங்களைப் பற்றிய அறிமுகத்தை முதற்பக்கத்தில் தர விரும்புகிறோம். உங்களைப் பற்றிய சிறு குறிப்பை விக்கிப்பீடியா:பங்களிப்பாளர் அறிமுகம்/சிவா பக்கத்தில் சேர்க்க முடியுமா? விக்கிப்பீடியா:பங்களிப்பாளர் அறிமுகம் பக்கத்தில் உள்ள அறிமுகங்களை எடுத்துக்காட்டாக கொள்ளலாம். --ரவி 05:55, 25 மே 2010 (UTC)

[தொகு] பறவைகள் பற்றிய நூல் குறிப்பு

நீங்கள் என் உரையாடல் பக்கத்தில் ரத்னம் அவர்களின் பறவைகளைப் பற்றிய நூலை தமிழம் வலைப்பக்கத்தில் பதிவு செய்திருந்தததைச் சுட்டிக்காட்டியமைக்கு மிக்க நன்றி சிவக்குமார். மிகவும் பயனுடைய நூல்.--செல்வா 03:24, 26 மே 2010 (UTC)

சிவா, நீங்கள் இணைப்புக் கொடுத்திருந்த பறவைப் பெயர்கள் பற்றிய நூல் மிகவும் பயனுள்ளது. இரண்டு மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் இந்த நூலை சென்னையில் ஒரு புத்தக நிலையத்தில் கண்டு ஒரு பிரதி வாங்கினேன். தவியில் பறவைகளைப் பற்றிக் கட்டுரைகள் எழுதியபோது பயன்பட்டது. மயூரநாதன் 20:02, 26 மே 2010 (UTC)
ஆமாம், மயூரநாதன் சில உரையாடல் பக்கங்களில் குறிப்பிட்டும் எழுதியிருந்தார். --செல்வா 20:12, 26 மே 2010 (UTC)

[தொகு] அடையாள அட்டைக்கான தகவல்கள்

சிவக்குமார்,

  • நீங்கள் செம்மொழி மாநாட்டில் கலந்து கொள்கின்றீர்கள் அல்லவா? உங்களுக்கு அடையாள அட்டை உள்ளதா? இல்லையென்றால், மிகவும் வேகமாகச் செய்ய வேண்டிய வேலை ஒன்று உள்ளது.
  • கீழே கொடுக்கப்பட்டுள்ள URL-ஐ ஒற்றி இன்னொரு புதிய URL-இல் அதை ஒட்டவும். பிறகு Enter செய்யவும். இப்போது ஒரு Member Details படிவம் வரும். அதில் சில புலங்கள் ஏற்கனவே நிரப்பப்பட்டும் சில காலியாகவும் இருக்கும். காலியானவற்றை உடன் நிரப்பி (உங்கள் குருதி வகையும், புகைப்படமும் அவசியம்) Update செய்யுங்கள்.
  • URL - [ http://www.wctc2010.org/idcards/updatedetails.php?a=bWVtYmVyIHVwZGF0ZSBpbmZvMTI3Njg0ODY0NA%3D%3D&z=Mjc0MV8xMjc2ODQ4NjQ0 ]
  • இன்று மாலைக்குள் செய்ய வேண்டிய வேலை இது.
  • மின்னஞ்சல் முகவரி என்னுடையதாக இருக்கும். Don't bother.

நன்றி. --பரிதிமதி 08:32, 19 ஜூன் 2010 (UTC)

[தொகு] நலமா?

உங்கள் பங்களிப்புகளைக் கண்டு மகிழ்ந்தேன், சிவக்குமார். எப்படி இருக்கின்றீர்கள்? பணியழுத்தம் அதிகமா? அவ்வளவாகக் காண முடிவதில்லையே? இம்முறை கோவை வந்தபொழுது உங்களைக் காண முடியவில்லை.--செல்வா 18:13, 21 ஜூலை 2010 (UTC)

[தொகு] நன்றி

நிருவாகி அணுக்கம் வாக்கெடுப்பில் ஆதரவாக வாக்களித்தமைக்கு மிக்க நன்றி --ஜெ.மயூரேசன் 04:03, 18 ஆகஸ்ட் 2010 (UTC)

[தொகு] விக்கி மாரத்தான்

விக்கி மாரத்தானில் கலந்து கொள்ள வாருங்கள்--இரவி 09:21, 27 அக்டோபர் 2010 (UTC)

[தொகு] பாராட்டு

விக்கிப்பீடியாவுக்கு உங்கள் பங்களிப்புகளைக் கண்டேன். வியப்பும் மகிழ்ச்சியும். பாராட்டுக்கள். என் இணையப் பயிற்சி சமீபகாலத்தில் தான். சில விஷயங்களை விக்கிப்பீடியாவுக்குச் செய்ய நினைக்கிறேன். பார்க்கலாம். --Perumalmurugan 05:58, 1 திசம்பர் 2010 (UTC)

[தொகு] மகிழ்ச்சி

சிவக்குமார், உங்களை மீண்டும் விக்கியில் பார்ர்ப்பது பெரு மகிழ்ச்சியாய் உள்ளது. பணிச்சுமைகளால் அதிகம் பங்களிக்க முடியாமல் இருந்தீர்கள் என அறிந்தேன், எனவேதான் தொந்தரவு தரவில்லை :) கலிபோர்னியாவில் ஒற்றை உவரேரியைப் பற்றிய குறுங்கட்டுரை எழுதும் பொழுதும், பறவை, நீர்நிலைகள் பற்றிய கட்டுரைகள் எழுதும்பொழுதும் உங்கள் நினைவு தவறாமல் வந்து நீங்கள் ஆற்றிய நற்பணிகள் நினைந்து உள்ளம் இனிக்கும் :) இயன்றபொழுது மீண்டும் வந்து உதவுங்கள் சிவக்குமார். விரைவில் நாம் 50,000 கட்டுரைகளை எட்ட வேண்டும் :)--செல்வா 21:59, 7 திசம்பர் 2010 (UTC)

மிக்க நன்றி, செல்வா. வரும் கிழமைகளில் விக்கிக்கு பங்களிப்பை அதிகரிக்க எண்ணியுள்ளேன். தங்களின் அன்பு எனக்கு இன்னும் அதிகமாக ஊக்கத்தைத் தருகிறது. --சிவக்குமார் \பேச்சு 17:00, 10 திசம்பர் 2010 (UTC)
நன்று! நன்று!! சிவக்குமார்! இரட்டிப்பு மகிழ்ச்சி. --செல்வா 20:12, 10 திசம்பர் 2010 (UTC)
சிவா, வாங்க வாங்க. :) -- சுந்தர் \பேச்சு 12:42, 17 திசம்பர் 2010 (UTC)

[தொகு] விக்கிப்பீடியர் அறிமுகம்

  • தமிழ் விக்கிப்பீடியாவின் முதற்பக்க அறிமுகத்திற்கேற்றவாறு விக்கிப்பீடியா பங்களிப்பாளர் அறிமுகம் பக்கத்தில் தங்கள் படத்தையும் தகவல்களையும் பதிவேற்றம் செய்திட வேண்டுகிறேன்.--தேனி.எம்.சுப்பிரமணி./உரையாடுக. 01:34, 2 ஏப்ரல் 2011 (UTC)

[தொகு] மீண்டும் விக்கிப் பணிக்கு வர வேண்டுகோள்

வணக்கம் சிவா. நலமா? கடந்த சில மாதங்களாகத் தமிழ் விக்கிப்பீடியா நன்கு வளர்ந்து வருகிறது. மூன்றே வாரங்களில் புதிதாக ஆயிரம் கட்டுரைகளை எழுதுகிறோம் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன் :) விரைவில் 50,000+ கட்டுரைகள் என்ற இலக்கை முன்வைத்து உழைக்க விரும்புகிறோம். இந்நேரத்தில் ஏற்கனவே தமிழ் விக்கியில் ஈடுபாடு காட்டிய உங்களைப் போன்ற பலரும் அவ்வப்போதாவது மீண்டும் வந்து விக்கிப்பணியில் இணைந்து கொண்டால் உற்சாகமாக இருக்கும். உங்களால் பங்கு கொள்ள இயலாவிட்டாலும், உங்கள் நண்பர்கள் வட்டத்தில் தமிழ் விக்கிப்பீடியாவைப் பற்றி எடுத்துச் சொல்லி புதிய பங்களிப்பாளர்களை ஈர்க்க உதவ இயலுமா? நன்றி--இரவி 13:18, 2 மே 2011 (UTC)

வணக்கம் ரவி. நலமே. விக்கி நன்கு வளர்ந்து வருவது கண்டு மிக்க மகிழ்ச்சி. வரும் நாட்களில் பங்களிப்பேன். நானும் நண்பர்களிடம் வலை விரித்துத்தான் பார்க்கிறேன். மீன்கள் தான் சிக்க மாட்டேன் என்கின்றன :)--சிவக்குமார் \பேச்சு 14:48, 5 மே 2011 (UTC)

[தொகு] மலாக்கா முத்துக்கிருஷ்ணன்

வணக்கம். மறுபடியும் வணக்கம் சொல்லலாமா. உங்களை முன் பின் பார்ததது இல்லை. இருந்தாலும் பாருங்கள். தமிழ் மொழி உங்களையும் என்னையும் இணைத்து வைக்கிறது. அதுதான் ஓர் அற்புதமான நிகழ்ச்சி. நீங்கள் எங்கே இருக்கிறீர்கள் என்பதுவும் எனக்குத் தெரியாது. நம்முடைய நல்ல நினைவுகள் நிறைந்து வாழும். மலேசியாவில் இருந்து அடுத்த ஒரு கட்டுரை வருகிறது. நன்றி.--ksmuthukrishnan 16:29, 5 மே 2011 (UTC)

[தொகு] முதற்பக்க அறிமுகம்

முதற்பக்கத்தில் “பங்களிப்பாளர் அறிமுகம்” பகுதியில் இடம் பெறுவதற்காக உங்களைப் பற்றிய சிறு அறிமுகக் குறிப்பைப் பின் வரும் இணைப்பில் இட வேண்டுமிறேன்.

Siv.JPG

சிவக்குமார், தமிழகத்தின் ஈரோட்டைச் சேர்ந்தவர். கணினிப் பொறியியலில் முதுநிலைப் பட்டம் பெற்று, தற்போது பதிகணினியியல் துறையில் பணிபுரிகிறார். பன்னிரெண்டாம் வகுப்பு வரையில் தமிழ்வழியில் படித்துள்ளார். 2005-ஆம் ஆண்டு முதல் தமிழ் விக்கிப்பீடியாவில் பங்களித்து வருகிறார். மேலும் விக்சனரி தொடங்கப்பட்ட காலத்தில் அங்கும் சிறிது காலம் பங்களித்துள்ளார். உயிரியல், புவியியல் முதலிய துறைகளில் ஆர்வமுள்ள இவர் இதுவரை 750-க்கும் அதிகமான கட்டுரைகளைத் தொடங்கியுள்ளார். யானை, இந்திய இரயில்வே, பொடா-பொடா, ஓக்காப்பி முதலிய கட்டுரைகளில் குறிப்பிடத்தக்க பங்களிப்புச் செய்துள்ளார். தமிழ் விக்கிப்பீடியாவில் கட்டுரைகள் எழுதுதல், உரை திருத்தம், கலைச் சொல்லாக்கம், கட்டுரை பேச்சுப் பக்கங்களில் கருத்துக் கூறல், புதுப்பயனர்கள் வரவேற்பு முதலிய பணிகளில் ஈடுபட்டு வருகிறார்.

--சோடாபாட்டில்உரையாடுக 14:17, 21 சூன் 2011 (UTC)

இன்னும் ஓரிரு நாட்களில் செய்கிறேன், சோடாபாட்டில். நன்றி.--சிவக்குமார் \பேச்சு 14:27, 21 சூன் 2011 (UTC)
மீண்டும் நச்சரிக்கிறேன் :-) --சோடாபாட்டில்உரையாடுக 14:50, 27 சூன் 2011 (UTC)
ஆச்சு :)--சிவக்குமார் \பேச்சு 15:11, 27 சூன் 2011 (UTC)
நன்றி. நாளை இரவு முதற்பக்கத்தில் காட்சிப்படுத்தப்படும் :-)--சோடாபாட்டில்உரையாடுக 15:13, 27 சூன் 2011 (UTC)
நன்றி.--சிவக்குமார் \பேச்சு 15:15, 27 சூன் 2011 (UTC)

[தொகு] வாழ்த்துக்கள்

சிவகுமார், உங்கள் முதற்பக்க அறிமுகம் கண்டு மகிழ்ச்சி. வாழ்த்துகள்.--Kanags \உரையாடுக 08:24, 29 சூன் 2011 (UTC)
நன்றி, கனகரே! :)--சிவக்குமார் \பேச்சு 08:37, 29 சூன் 2011 (UTC)
இப்போதுதான் உங்கள் அறிமுகத்தை தமுல் பக்கத்தில் பார்த்து மகிழ்ந்தேன், சிவா. :) -- சுந்தர் \பேச்சு 09:45, 29 சூன் 2011 (UTC)

முதற்பக்க அறிமுகம் கண்டு மகிழ்ச்சி, சிவா. மூத்த விக்கிப்பீடியராக முயலாமல் ;) தொடர்ந்தும் மீண்டும் பங்களிக்க வேண்டுகிறேன் :) --இரவி 14:58, 29 சூன் 2011 (UTC)

2005-ஆம் ஆண்டு முதல் தமிழ் விக்கிப்பீடியாவில் பங்களித்து வரும் தங்களின் முதற்பக்க அறிமுகம் கண்டு மகிழ்ந்தேன். வாழ்த்துக்கள் சிவா--P.M.Puniyameen 16:14, 29 சூன் 2011 (UTC)

சிவக்குமார், உங்கள் முதற்பக்க அறிமுகம் கண்டு மகிழ்ந்தேன்! நல்வாழ்த்துகள்  :) --செல்வா 16:22, 29 சூன் 2011 (UTC)

நன்றி இரவி, புன்னியாமீன், செல்வா, சுந்தர். --சிவக்குமார் \பேச்சு 07:01, 30 சூன் 2011 (UTC)

[தொகு] நிர்வாக அணுக்கம் - நன்றி

தமிழ் விக்கிப்பீடியாவின் நிர்வாக அணுக்கப் பணிக்கு நடைபெற்ற வாக்கெடுப்பில் எனக்கு வாக்களித்து உதவிய தங்களுக்கு என் இதயப்பூர்வமான நன்றிகள்...--தேனி.எம்.சுப்பிரமணி./உரையாடுக. 01:47, 28 சூன் 2011 (UTC)

[தொகு] உங்களுக்குத் தெரியுமா











[தொகு] முதற்பக்கக் கட்டுரை அறிவிப்புத் திட்டம்





[தொகு] ஒரு கேள்வி

உங்கள் முதற்பக்க அறிமுகத்தில் "பதிகணினியல்" என்று உள்ளது, அது பதிகணினியியல் அல்லது பதிகணியியல் என்று இருந்தால் சரியாக இருக்கும் என்று நினைக்கின்றேன். வேறு ஏதேனும் காரணம் பற்றி பதிகணினியல் என்று எழுதியுளீர்களா என்று தெரியாததால், மாற்றவில்லை. --செல்வா 16:29, 29 சூன் 2011 (UTC)

சுட்டிக்காட்டியமைக்கு நன்றி செல்வா. அது ஒரு எழுத்துப்பிழையே. திருத்தி விட்டேன்.--சிவக்குமார் \பேச்சு 07:00, 30 சூன் 2011 (UTC)

இந்திய விக்கி மாநாடு -- மும்பை -- நவம்பர் 18-20 2011

WCI banner.png

வணக்கம் Sivakumar,

முதல் இந்திய விக்கி மாநாடு மும்பையில் 2011 நவம்பர் 18 முதல் 20 வரை நடைபெறவுள்ளது.

மாநாட்டு உரலிகள்: மாநாட்டு இணையபக்கம், ஃபேசுபுக் நிகழ்ச்சி பக்கம் , உதவித் தொகை விண்ணப்பம்(கடைசி : ஆகஸ்ட் 15) மற்றும் ஆய்வுக் கட்டுரை சமர்பிக்க (கடைசி : ஆகஸ்ட் 30).

மாநாட்டுக்கான 100 நாள் பரப்புரை தொடங்கவுள்ளது.

நீங்கள் தமிழ் விக்கி சமூகத்தின் அங்கத்தினராக இருப்பதால், மாநாட்டிற்கு வருகை தந்து உங்களின் விக்கி அனுபவத்தை பகிர்ந்துகொள்ள அழைக்கிறோம். உங்களின் பங்களிப்புகளுக்கு நன்றி.

உங்களை 18-20 நவம்பர் 2011 இல், மும்பையில் ஆவலுடன் எதிர்பார்க்கிறோம்.

[தொகு] Invite to WikiConference India 2011

WCI banner.png

Hi Sivakumar,

The First WikiConference India is being organized in Mumbai and will take place on 18-20 November 2011.
You can see our Official website, the Facebook event and our Scholarship form.

But the activities start now with the 100 day long WikiOutreach.

Call for participation is now open, please submit your entries here. (last date for submission is 30 August 2011)

As you are part of Wikimedia India community we invite you to be there for conference and share your experience. Thank you for your contributions.

We look forward to see you at Mumbai on 18-20 November 2011


[தொகு] நன்றி

ஓ! தெளிவுபடுத்தியமைக்கு மிக்க நன்றி சிவக்குமார்! உங்கள் மறுமொழி உவகை ஊட்டுகின்றது. நீர்நிலைகள், விலங்குகள், என்று நீங்கள் பங்களித்தக் கட்டுரைகளைப் பார்க்கும் பொழுதெல்லாம் உங்கள் நினைவு வரும்! :) −முன்நிற்கும் கையொப்பமிடப்படாத கருத்து செல்வா (talkபங்களிப்புகள்) என்ற பயனரால் பதிக்கப்பட்டது. .

[தொகு] பதக்கம்

DYK Medal.svg உங்களுக்குத் தெரியுமா பங்களிப்புப் பதக்கம்

நீங்கள் ஐந்துக்கும் மேற்பட்ட உங்களுக்குத் தெரியுமா கட்டுரைகளில் பங்களித்ததன் காரணம் பற்றி இப்பதக்கத்தை உங்களுக்கு வழங்குகிறோம். தென்காசி சுப்பிரமணியன் 05:26, 15 பெப்ரவரி 2012 (UTC) விக்கியன்பு மூலம் வழங்கப்பட்டது

[தொகு] மீண்டும் காண மகிழ்ச்சி

சிவா, உங்களை மீண்டும் காண மகிழ்ச்சி. :) -- சுந்தர் \பேச்சு 10:18, 24 பெப்ரவரி 2012 (UTC)

நன்றி, சுந்தர். --சிவக்குமார் \பேச்சு 13:54, 27 பெப்ரவரி 2012 (UTC)

[தொகு] சிறுநவ்வி

உங்களுக்காக புதிய தகவல்கள் உள்ளன
வணக்கம், Sivakumar. உங்களுக்கான புதிய தகவல்கள் மதனாஹரன் இன் பேச்சு பக்கத்தில் உள்ளன.
நீங்கள் இந்த அறிவிப்பை {{பேச்சு}} வார்ப்புருவை நீக்குவதன் மூலம் நீக்கலாம்.
--மதனாகரன் (பேச்சு) 12:51, 17 மே 2012 (UTC)

[தொகு] குதிரை

பல்வேறு விலங்கினங்கள் பற்றி ஆர்வமுடைய நீங்கள் இவ்வார கூட்டு முயற்சிக் கட்டுரையான குதிரையை மேம்படுத்தி உதவினால் நன்றாக இருக்கும். விலங்குகள் / பறவைகள் பற்றிய ஒரு வலைவாசல் தொடங்கினாலும் நன்றாக இருக்கும். நன்றி--இரவி (பேச்சு) 15:07, 21 மே 2012 (UTC)

கட்டாயம் செய்கிறேன், இரவி :)--சிவக்குமார் \பேச்சு 16:11, 21 மே 2012 (UTC)

[தொகு] நன்றி

நன்றி.jpg
நன்றி!
நிருவாகி அணுக்கத்திற்காக எனக்கு வாக்களித்தமைக்கு மிக்க நன்றி.

-பார்வதிஸ்ரீ


-- பார்வதிஸ்ரீ (பேச்சு) 11:09, 26 மே 2012 (UTC) Google plus one.jpg மிக்க நன்றி--சண்முகம் (பேச்சு) 11:48, 26 மே 2012 (UTC) Google plus one.jpg ஸ்ரீகாந்த் (பேச்சு) 14:11, 30 மே 2012 (UTC)

"http://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்_பேச்சு:Sivakumar&oldid=1123469" இருந்து மீள்விக்கப்பட்டது
சொந்தப் பயன்பாட்டுக் கருவிகள்
பெயர்வெளிகள்

மாற்றுக்கள் மாற்றுருவங்கள்
செயல்கள்
வழிசெலுத்தல்
அச்சு/ஏற்றுமதி
கருவிப் பெட்டி