சாரசு கொக்கு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.

தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
சாரசு கொக்கு
Sarus Crane
Grus antigone antigone
Grus antigone antigone
காப்பு நிலை
உயிரியல் வகைப்பாடு
திணை:
(இராச்சியம்)
விலங்கினம்
தொகுதி: முதுகுநாணி
வகுப்பு பறவை
வரிசை: Gruiformes
குடும்பம்: Gruidae
பேரினம்: Grus
இனம்: G. antigone
இருசொற்பெயர்
Grus antigone
(லின்னேயசு, 1758)
Subspecies
Synonyms

Ardea antigone Linnaeus, 1758
Grus sharpei

சாரசு கொக்கு (மாற்று வழக்கு:சாரஸ் கொக்கு) என்பது இந்தியாவில் நடுப்பகுதியிலும், கங்கையாற்றுப் படுகையிலும் வட பாக்கித்தான், நேபாளம், தென்கிழக்கு ஆசியா, ஆத்திரேலியா ஆகிய பகுதிகளிலும் காணப்படும் ஒரு வகைப் பெரிய கொக்கு. இது 5 அடி உயரம் வரை இருக்கும்.

[தொகு] தோற்றம்

நன்கு வளர்ந்த சாரசு கொக்குகள், சிவப்பு நிறத்தலையையும் வெளுத்த உச்சந்தலையையும் கொண்டு இருக்கும். அலகுகள் கருத்தவை. இறக்கையின் நுனிப்பகுதி கருப்பாகவும் உடல் வெண்சாம்பல் நிறத்திலும் இருக்கும். ஆண் பறவைகளும் பெண் பறவைகளும் ஒத்த தோற்றம் கொண்டன. ஆண் பறவை பெட்டையை விடப் பெரியது. ஆண் பறவைகள் அதிக அளவாக 6.6 அடி உயரம் வரை வளரக்கூடும். இப்பறவையே உலகில் எஞ்சியுள்ள இனங்களில் உயரமான பறக்கும் பறவை ஆகும். சராசரியாக 6.3 முதல் 7.3 கிலோ எடை வரை இருக்கும்.

[தொகு] பழக்கவழக்கங்கள்

மற்ற கொக்குகளைப் போல் இவை நெடுந்தொலைவு வலசை போவதில்லை. இரண்டு முதல் ஐந்து கொக்குகள் வரை கொண்ட சிறிய குழுக்களாக (சிறு தொழுதிகளாக) வாழ்கின்றன. சாரசுகள் அனைத்துண்ணிகள். பூச்சிகள், நீர்த்தாவரங்கள் முதலானவற்றை உணவாகக் கொள்கின்றன. இப்பறவை தரையிலேயே கூடு கட்டுகிறது. இக்கொக்கு இரண்டு அல்லது மூன்று முட்டைகள் இடும். ஆண், பெண் (பெட்டை) இருபறவைகளுமே முட்டைகளை அடைகாக்கும். இப்பறவைகள் வாழ்நாள் முழுவதும் ஒரே இணையுடனே வாழ்கின்றன.

[தொகு] படிமங்கள்

"http://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81_%E0%AE%95%E0%AF%8A%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81" இணைப்பிலிருந்து மீள்விக்கப்பட்டது
சொந்தப் பயன்பாட்டுக் கருவிகள்