ஓக்காப்பி
| ஓக்காப்பி | ||||||||||||||
|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
ஓக்காப்பி
|
||||||||||||||
| காப்பு நிலை | ||||||||||||||
| உயிரியல் வகைப்பாடு | ||||||||||||||
|
||||||||||||||
| இருசொற்பெயர் | ||||||||||||||
| Okapia johnstoni (P.L. Sclater, 1901) |
||||||||||||||
| Range map | ||||||||||||||
ஓக்காப்பி என்பது ஒட்டகச் சிவிங்கி வகையைச் சேர்ந்த ஒரு பாலூட்டி. இது மத்திய ஆபிரிக்காவிலுள்ள காங்கோ நாட்டின் வடகிழக்கே உள்ள இட்ரு (itru) மழைக்காட்டை பூர்வீகமாகக்கொண்டது.
ஓக்காப்பியின் உடலில் வரிக்குதிரை யைப் போன்று கோடுகள் இருப்பினும், இது ஒட்டகச்சிவிங்கி இனத்திற்கு நெருக்கமானதாகும்.
ஓக்காப்பி பற்றி மேற்குலகம் அறிந்துகொண்டது, 1887 இல் பத்திரிகைகள் மூலம் பிரபலப்படுத்தப்பட்ட திரு ஹென்ரி மொர்டொன் ச்டான்லி அவர்களின் பயணக்குறிப்பேடுகளின் மூலமே. 1901 இல் இங்கிலாந்தை சேர்ந்த திரு ஹரி ஜொன்ச்டொன் இறந்த ஓக்காப்பியின் உடலை லண்டன் நகரத்துக்கு அனுப்பிவைத்தார். இது பத்திரிகைகளில் முக்கிய செய்தியாக வெளிவந்து மக்கள் மத்தியில் ஓக்காப்பி இனத்தை பற்றிய ஆர்வத்தை தூண்டியது.
2011 ஆம் ஆண்டு கணக்கெடுப்பின் படி, கிட்டத்தட்ட 20,000 ஓக்காப்பிகள் இட்ரு காடுகளில் உயிர் வாழ்கின்றன. 42 நாடுகளின் மிருகக்காட்சி சாலைகளிலும் காணப்படுகிறது.
ஓக்காப்பிகள் மிக நீண்ட நாக்கினைக் கொண்டுள்ளதால் எட்டியுள்ள இலை தழைகளை இழுத்து உண்ண ஏதுவாகிறது. நாக்கு நீளமாக இருப்பதால் கண் வரை எட்டும். தனது கண்களை தானே நக்க இயலும் விலங்கு இது ஒன்றே.
ஓக்காப்பி 1.9 முதல் 2.5 மீட்டர் உயரம் வரை வளரும். 200 முதல் 270 கிலோ எடை வரை இருக்கும். இது ஒரு தாவர உண்ணி விலங்கு.
[தொகு] மேற்கோள்கள்
- ↑ IUCN SSC Antelope Specialist Group (2008). Okapia johnstoni. 2008 சிவப்புப் பட்டியல். IUCN 2008. Retrieved on 10 April 2009. Database entry includes a brief justification of why this species is of near threatened.