கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பிறந்தது நெய்தல் நிலத்தில்
வளர்ந்தது வைகைக்கரை மருத நாட்டில்
வாழ்வது காவிரி பாயும் குறிஞ்சி நிலத்தில்[1]
உவப்பது முல்லை, அஞ்சுவது பாலை
பெற்றவர் கல்வியாளர்
மணந்தது தமிழ்
பெற்றது முகில்[2]
கற்றது கணி
உற்றதும் செய்வதும் மொழி
உவப்பது உயிர்
விழைவது தமிழ்[3]
சுந்தர்,
தேடுபொறித் துறையில் பணியாற்றும் தகவல் பெறுநுட்ப வல்லுனர். 2004-ஆம் ஆண்டு முதல் ஆங்கிலம், தமிழ் விக்கிப்பீடியாக்களில் பங்களித்து வருகிறார்.
மொழியியல்,
உயிரியலில் ஆர்வம் கொண்டவர். இவர் எழுதியுள்ள கட்டுரைகளில்
வெண்பா,
மௌடம்,
புணர்ச்சிப் பரவசநிலை,
கிப்பன் பண்டம்,
பகடிப்பட இயற்பியல்,
கேண்டரின் கோணல்கோடு நிறுவல்முறை,
மாந்தவுருவகம் போன்றவை குறிப்பிடத்தக்கவை.
தமிழ் விக்சனரி தானியங்கித் திட்டம் மூலம் ஒரு இலட்சத்துக்கும் மேற்பட்ட சொற்களைத் தமிழ் விக்சனரியில் சேர்த்தது சுந்தரின் ஆகச் சிறந்த பங்களிப்பு ஆகும். மேலும் இவர், மீடியாவிக்கி நுட்பப் பணிகள், விக்கிப்பீடியா பயிற்சிப் பட்டறைகள்,
கூகுள் மொழிபெயர்ப்புத் திட்டச் சீரமைப்பு,
விக்கிப்பீடியா கட்டுரைப் போட்டி ஒருங்கிணைப்பு முதலிய திட்டங்களிலும், விக்கிமீடியா உறவுத் திட்டங்களுடனான தொடர்பிலும் ஈடுபட்டு வருகிறார். 2009-ஆம் ஆண்டு நடைபெற்ற விக்கிமேனியாவில், தமிழ் விக்கிப்பீடியாவின் வளர்ச்சி நிலைகளைப் பற்றிய
ஆய்வறிக்கை ஒன்றைப்
படித்துள்ளார்.
[தொகு] தொடர்புடைய இணைப்புகள்
 |
இந்தப்பயனர் தமிழ் விக்கிப்பீடியாவில் இணைந்து
7 ஆண்டுகள், 6 மாதங்கள் 8 நாட்கள் ஆகின்றன. |
| தமிழ்99 |
இப் பயனர் தமிழ்99 விசைப்பலகையைப் பயன்படுத்துகிறார். |
[தொகு] தமிழ் விக்கிபீடியாவில்
சிலர் ஆழ உழுவார்கள், நான் அகல உழுபவன். இரண்டுமே தமிழ் விக்கிபீடியாவிற்கு இன்றியமையாதவை. கோடையில் மழை இல்லாதபோது மண்ணைக் கிளறி அகல உழுவதன்மூலம் மழைநீரை ஈர்க்க முடியும், அதுபோல புதுப்பயனர்கள் தேடுபொறிகள் மூலமும் பிற வழிகளிலும் வரும்பொழுது அவர்களுக்கு எந்தத்துறையினரானாலும் ஈடுபாடு ஏற்படுத்துபவை பல்துறைக் கட்டுரைகள். அதே நேரம் மயூரநாதன் போன்றோர் சிறந்த ஒருமித்த கட்டுப்பாட்டுடன் முழுமையான கட்டுரைகளை உருவாக்குகின்றனர். அவை நமக்கு ஏற்றமளிப்பவை. நற்கீரன் போன்றோர் தொழில்நுட்பக் கட்டுரைகளை உருவாக்குவதிலும் வாய்க்கால் வரப்புகளாம் கொள்கைப் பக்கங்கள் உருவாக்குவதில் முனைப்புக் காட்டுகிறார்கள். இரவி, சிவகுமார் போன்றோர் கொள்கை அளவிலும், தர அளவிலும், விக்கி குறியீடு அளவிலும் களை எடுக்கின்றனர். செல்வா, கனகர், மற்றும் பல புதிய பயனர்களும் சிறப்புத் திறன்கள் பெற்று உரமிட்டு வருகின்றனர். தவிர இங்கு கணேசால் இயக்கப்படும் தானுந்துக் கலப்பையைப் பயன்படுத்தலாமா கூடாதா என்பது பற்றிய கலந்துரையாடல் நடந்து வருகிறது. இந்த கூட்டு வேளாண்மையின் விளைச்சலை ஒட்டுமொத்த தமிழ்ச் சமுதாயமும் பெற வேண்டும்.
விக்கி கூட்டம் ஒன்றில் ஜிம்போ வேல்ஸும் நானும்
[மேலே குறிப்பிடப்பட்டுள்ளவர்களைத் தவிர மேலும் பல பயனர்கள் சீரிய பங்களிப்புக்களையளித்து வருகிறார்கள். அவர்கள் பெயர்கள் இங்கு இல்லாதது இற்றைப்படுத்த முடியாததால் மட்டுமே, அவர்கள் இங்குள்ளவர்களுக்குச் சளைத்தவர்களல்ல.]
தமிழ் மொழியையும், தமிழர் பண்பாட்டையும் பற்றி புவியறியும் வகையில் ஆங்கிலத்தில் ஆவணப்படுத்துவதும் இன்ன பிறவற்றைப் பற்றி தமிழில் இங்கு ஆவணப்படுத்துவதும் எனது வழக்கம். தமிழரைப் பற்றி தமிழில் எழுதக் கூடாது அல்லது தேவை இல்லை என்றில்லை, அவற்றைப் பலர் ஏற்கெனவே செவ்வனே செய்து வருகின்றனர்.
[தொகு] உருவாக்கப்பட வேண்டிய கட்டுரைகள்
மூலம்: தமிழ்நாட்டுப் பாடநூல் கழகத்தின் பதினோராம் வகுப்பிற்கான அறிவியல் தமிழ் பாடப் புத்தகம்.
- அதிர்வெண் - en:Frequency
- அண்டம் - en:Universe
- அணு ஆற்றல் - en:Atomic energy
- அணு எரிபொருள் - en:Atomic fuel
- அறுவை சிகிச்சை- en:Surgery
- இங்கிலாந்து அரசவை சான்றோன் - en:Fellow of Royal Society of England
- இயற்கை உரம் - en:Manure
- இயற்கை வாயு - en:Natural gas
- இரத்த உறைதல் - en:Blood clotting/en:Coagulation
- இரத்தம் உறையாமை - en:Hemophilia
- இரத்தச் சிவப்பணு - Red blood corpuscles
- இரத்தத் தட்டு - en:Platelets
- இரத்த வெள்ளையணு - en:White blood corpuscles
- இன்சாட் செயற்கைக் கோள் - INSAT en:Satellite
- ஈர்ப்பு விசை - en:Gravitational force
- ஈரப்பசை - en:Moisture
- உயிர்ப்புவியியல் - en:Biogeography
- உயிரினம் - en:Organism
- உலோக உப்புக்கள் - en:Metallic salts
- உள் உற்றுநோக்கும் கருவி - en:Endoscopy
- உற்பத்தி வாயு - en:Producer gas
- எக்ஸ் கதிர்கள்/ஊடுகதிர் - en: X ray
- எரிபொருள் - en:Fuel
- எரிபொருள் கலம் - en:Fuel cell
- ஐன்ஸ்டீன் போஸ் கோட்பாடு - en:Einstein Bose hypothesis
- ஒளிச்சேர்க்கை - en:Photosynthesis
- ஒளி மின் விளைவு - en:Photoelectric effect
- ஒளியின் திசைவேகம் - en:Velocity of light
- ஓராண்டுத் தாவரம் - en:Annual
- கணிக்கப்பட்ட குறுக்குவெட்டு வரைவி வரிக் கண்ணோட்டம் - en:Computed tomography scan
- கால நீட்டிப்பு - en:Time dilation
- கூழ்ம வேதியியல் - en:Colloidal Chemistry
- கொழுப்பு - en:Fat
- சந்திரசேகர் வரையரை - en:Chandrasekhar limit
- சாண வாயு - en:Gobar gas
- சிறப்புச் சார்பியல் கொள்கை - en:Special theory of relativity
- சிறுசெடி - en:Herb
- மூச்சு - en:Breathing
- தசைப்பிடிப்பு - en:Muscular dystrophy
- தடுப்பூசி - en:Vaccine/en:Immunization
- தண்டு - en:Stem
- தண்டு வடம் - en:Spine
- தாது உப்புக்கள் - en:Mineral
- தொல்லுயிர் எச்சங்கள் - en:Fossil
- நிலக்கரி - en:Coal
- நிலநடுக்கம் - en:Earthquake
- நிலநடுக்கப் பதிவுக் கருவி - en:Seismograph
- நிறக்குருடு - en:Color blindness
- நுண்ணுயிர் - en:Microorganism
- நுரையீரல் - en:Lungs
- பச்சையம் - en:Chlorophyll
- படிம எரிபொருள் - en:Fossil fuel
- பாறை - en:Rock
- பாறைத்திட்டு - en:Rock plate
- பிரௌனியன் இயக்கம் - en:Brownian movement
- புரதம் - en:Protein
- பூச்சிக்கொல்லி - en:Insecticide
- பெருவெடிக் கொள்கை - en:Big bang theory
- பொதுச் சார்பியல் கொள்கை - en:General relativity theory (http://www.bbc.co.uk/tamil/highlights/story/2005/02/050207_einstein.shtml)
- போஸ் புள்ளியியல் - en:Bose statistics
- போஸான் - en:Boson
- மஞ்சள் காமாலை - en:Jaundice
- மரபியல் - en:Genetics
- மரபியல் கலந்தாய்வு - en:Genetic counseling
- மரபியல் நோய் - en:Genetic disease
- மின்கல அடுக்கு - en:Battery
- மீயொலி வரிக் கண்ணோட்டம் - en:Ultra sound scan
- முன்கழுத்துக் கழலை - en:Goitre
- முப்பரிமாணம் - en:Three dimensions
- மூளைக் கழலை - en:Brain tumour
- மூளையில் நீர்க்கோர்வை - en:Hydrocephalus
- விண்மீன் - en:Star
- வினைவேக மாற்றி - en:Catalyst
- வெளி - en:Space
- வேதிப்பொருள் - en:Chemical
[தொகு] நினைவிற்காக சில குறிப்புகள்
[தொகு] அடிக்குறிப்புகள்
- ↑ பிறப்பு: தூத்துக்குடி/எட்டயபுரம், வளர்ப்பு: சோழவந்தான், இருப்பு: பெங்களூர்
- ↑ தாயார் ஆங்கிலம் கற்பிக்கும் ஆசிரியை, தந்தையார் வணிகவியற் பேராசிரியர், மனைவி தமிழரசி, மகன் முகிலன்
- ↑ கல்வி: கணிப்பான் பொறியியல் இளநிலை, தகவல் நுட்பம் முதுநிலை; பணி: தகவல் பெறுநுட்பமும் (information extraction and retrieval) இயல் மொழி ஆய்வும் (natural language processing); ஆர்வம்: விலங்கியல், தன்னார்வப்பணி: விசைநெறி மற்றும் இன்ன பிற