கொலோபசுக் குரங்கு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.

தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
வெள்ளை-கறுப்பு கொலோபசுக் குரங்கு[1]
Mantled Guereza (Colobus guereza)
Mantled Guereza (Colobus guereza)
உயிரியல் வகைப்பாடு
திணை:
(இராச்சியம்)
விலங்குகள்
தொகுதி: முதுகுநாணிகள்
வகுப்பு பாலூட்டிகள்
வரிசை: முதனிகள்
குடும்பம்: Cercopithecidae
துணைக்குடும்பம்: Colobinae
பேரினம்: கொலோபசு (Colobus)
Illiger, 1811
மாதிரி_இனம்
Simia polycomos
Schreber, 1800
(= Cebus polykomos Zimmermann, 1780)
Species

Colobus satanas
Colobus angolensis
Colobus polykomos
Colobus vellerosus
Colobus guereza

கொலோபசுக் குரங்கு என்று அழைக்கப்படும் வெள்ளை-கறுப்பு கொலோபசுக் குரங்கு ஆப்பிரிக்காவில் வாழும் குரங்கு இனம்.இது ஆப்பிரிக்காவில் கிழக்கு, நடு, மேற்கு ஆப்பிரிக்கப் பகுதிகளில் இயற்கையாக காடுகளில் வாழ்கின்றது. இக்குரங்குக்கு கட்டைவிரல் ஏறத்தாழ இல்லாமல் இருப்பதால்

கொலோபசுக் குரங்கு. முகத்தைச் சுற்றி வெள்ளையான முடியும், தோளிலும் உடலின் அள்ளைப் பக்கங்களிலும் வெண்மையான முடி இருப்பதைப் பார்க்கலாம். போர்வை குவேரேசா என்னும் கொலோபசு வகைக் குரங்கு. இது ஐந்து வகையான கொலோபசுக் குரங்குகளில் ஒரு வகை

இதற்கு கொலோபசு என்று பெயர். கிரேக்க மொழியில் ekolobóse (எக்கொலோபொசெ) என்றால் அவன் ஒட்ட வெட்டிக்கொண்டான் ("he cut short") என்று பொருள். இதனால் தமிழில் இதனை கூழைக் குரங்கு அல்லது கட்டைவிரல் கூழைக்குரங்கு என்றும் கூறலாம் (கூழை = குட்டையாக அல்லது அறவே இல்லாமல் இருப்பது). இதன் உடல் பட்டுநூல் போன்ற மழமழப்பான, மென்மையான கறுப்பு வெள்ளை முடியால் போர்த்தப்பட்டுள்ளது. தலை, முதுகுப்புறம், மற்றும் கை கால்கள் கறுப்பாகவும், தோளில் இருந்து உடலின் இருபுறமும் அள்ளைப்புறத்தில் இருந்து நீண்ட வெண்முடியும் கொண்டுள்ளது. உடலைவிட வால் சற்று நீளமாக இருக்கும். வாலும் வெள்ளையாக உள்ளது. இக் குரங்கின் குட்டிகள் பிறந்தவுடன், முகம், உள்ளங்கை உள்ளங்கால்கள் தவிர மற்றபடி உடல் முழுவதும் வெள்ளையாக இருக்கும். பின்பு ஏறத்தாழ 3-4 மாதங்களுக்குப் பிறகு வளர்ந்த குரங்குக்கான கருப்பு-வெள்ளை முடி அமைப்பைப் பெறுகின்றது[2]. கூழைக்குரங்குகள் (கொலோபசுக் குரங்குகள்) கூட்டமாக வாழ்கின்றன, பெரும்பாலும் ஒரு குழுவில் 5-10 குரங்குகள் இருக்கும். இவை வாழ்நாள் முழுவதும் மரங்களின் கிளைகளிலேயே வாழ்கின்றன. தரையில் இறங்குவது கிடையாது. கூழைக் குரங்கு (கொலோபசுக் குரங்கு) வகையில் ஐந்து இனங்கள் உள்ளன. கறுப்பு-வெள்ளை கொலோபசுக் குரங்கு, சிவப்புக் கொல்லொபசு என்னும் வேறு ஒரு குரங்கினத்துக்கும் உறவான உயிரினம்.

கொலோபசுக் குரங்கு இலை தழைகளையும், பூக்களையும் பழங்களையும் உண்கின்றது. துளிர் இலைகளை விரும்பி உண்கின்றது. பகலில் உணவுண்டு நடமாடும் இனம். இது சிறு குழுக்களாக மரங்களுக்கு மரம் தாவி உணவு உண்டு வாழ்கின்றன. குழுக்களில் உள்ள குரங்குகளின் எண்ணிக்கை பெரும்பாலும் 8-10 ஆக இருக்கும். அவற்றுள் ஒன்றோ இரண்டோதான் கடுவன்களாக(ஆண் குரங்குகளாக) இருக்கும். கடுவன்கள் தங்கள் வாழிட வலையத்துக்கான உரிமையை நிலைநாட்டவும் பிற கடுவன்களை எச்சரிக்கவும் உரக்க குரலெழுப்பிக்கொண்டு கிளைகளில் மேலும் மிகக் கீழுமாகத் தாவி தன் வல்லமையைக் காட்டும். கூழைக்குரங்கு இனத்தில் இனப்பெருக்கத்திற்கென்று தனியான காலப்பகுதி ஏதும் இருப்பதாகத் தெரியவில்லை, ஆனால் சில இடங்களில் (ஈக்குட்டோரியல் கினீயாவில்) நிறைய பழங்கள் கிடைக்கும் காலமாகிய டிசம்பர் முதல் ஏப்ரல் வரையான காலத்தில் கறுப்புக் கொலோபசு இனத்தில் இனப்பெருக்கம் நிகழ்வதாக ஓட்டுசு (Oats) என்பார் குறித்துள்ளார்[3] [4]. கொலோபசு கருவுற்று இருக்கும் காலம் 175 நாட்கள். பிறக்கும் பொழுது குட்டிகளின் எடை 820 கிராம். ஆறுமாதம் தாய்ப்பால் உண்கின்றது. இரண்டாண்டு்களில் இனப்பெருக்கத்திற்கான வளர்ச்சியைப் பெறுகின்றது. [5]


ஐந்து இனங்களும் எட்டு உள்ளினங்களும் உள்ளன.[6] [1]

[தொகு] அடிக்குறிப்புகளும் மேற்கோள்களும்

  1. 1.0 1.1 Groves, Colin (16 November 2005). Wilson, D. E., and Reeder, D. M. (eds). ed. Mammal Species of the World (3rd edition ed.). Johns Hopkins University Press. பக். 167-168. ISBN 0-801-88221-4. http://www.bucknell.edu/msw3. 
  2. Napier, J. R., Napier, P.H., The Natural History of Primates, MIT Press, 1985, pp. 200
  3. Oates, J. F., The guereza and the man, Rannier III and Bourne, 1977, pp.419-67.,
  4. Nowak, Ronald M., Walker's Mammals of the World, Sixth Edition, Volume I, John Hopkins University Press, Baltimore and London 1999. page 604-605,
  5. Oates, J. F.,Social life of a black and white colobus monkey, Colobus guereza. Z. Tierpsychol. 45, pp.1-60
  6. Nowak, Ronald M., Walker's Mammals of the World, Sixth Edition, Volume I, John Hopkins University Press, Baltimore and London 1999. page 604-605,

[தொகு] வெளி இணைப்புகள்

Wikimedia Commons logo
விக்கிமீடியா காமன்சில் இத்தலைப்பு தொடர்புடைய மேலும் பல ஊடகக் கோப்புகள் உள்ளன:
Wikispecies-logo.svg
விக்கியினங்கள் தளத்தில் பின்வரும் தலைப்பில் தகவல்கள் உள்ளன:

வார்ப்புரு:C.Colobinae navbr:Colobus de:Schwarz-weiße Stummelaffen en:Black-and-white colobus eo:Blank-nigraj stumposimioj es:Colobus fr:Colobus it:Colobus ko:콜로부스 lt:Kolobai nl:Franjeapen pl:Colobus pt:Colobus sv:Colobus zh:疣猴屬

சொந்தப் பயன்பாட்டுக் கருவிகள்