உள்ளடக்கத்துக்குச் செல்

புதுவலசை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

புதுவலசை என்னும் ஊர், தமிழ்நாட்டின் இராமநாதபுரம் மாவட்டத்தில் அமைந்துள்ளது. இந்த ஊர் தெற்குத் (ரோட்டு) தெரு, மேற்குத் தெரு, கிழக்குத் தெரு, வடக்குத் தெரு, காயிதே மில்லத் நகர், நாடார் தெரு, தாவுகாடு, கடற்கரை சத்திரம் ஆகிய பகுதிகளை உள்ளடக்கியது.


இயற்கை அமைப்பு

[தொகு]

இந்த ஊரின் வடக்கே மன்னார் வளைகுடா கடலும், தெற்கே வைகையாறும், மேற்கே தேர்போகி கிராமமும் கிழக்கே பனைக்குளம் கிராமமும் அமைதுள்ளன.. இங்கே பனை மரங்களும், தென்னை மரங்களும் அதிக அளவில் காணப்படுகின்றன.

கல்வி கூடங்கள்

[தொகு]
  1. . அரபி ஒலியுல்லா நர்சரி பள்ளி
  2. . அரபி ஒலியுல்லா தொடக்கப்பள்ளி
  3. . அரபி ஒலியுல்லா நடுநிலைப்பள்ளி
  4. . மதரஸத்துல் தாருல் இஸ்லாம்
  5. . தவ்ஹீத் மதரஸா

மக்கள்

[தொகு]

முஸ்லீம் மக்களும், இந்து சமுதாய மக்களும் ஒன்றாக சேர்ந்து வாழக்கூடிய அழகான கிராமம்.

வழிபாட்டுத் தலங்கள்

[தொகு]

முஸ்லீம் சமுதாயம்

  1. . மஸ்ஜித் ஜாமியா
  2. . மஸ்ஜித் அக்பர்
  3. . மஸ்ஜிதுல் இஹ்லாஸ் - தவ்ஹீத் மர்கஸ்

இந்து சமுதாயம்

  1. . அம்மன் கோயில்
  2. . நாடார் தெரு அம்மன் கோயில்
  3. . சத்திரம் கோயில்

போக்குவரத்து

[தொகு]

இந்த கிராமம் சித்தார்கோட்டை - ஆற்றாங்கரை சாலையில் அமைந்துள்ளது.

பேருந்து வழித்தடம்

  • 6B - இராமநாதபுரம் - புதுவலசை
  • 6A - இராமநாதபுரம் - அழகன்குளம்
  • 6 - இராமநாதபுரம் - அழகன்குளம்
  • நிஜாம் பஸ் - இராமநாதபுரம் - அழகன்குளம் - இராமநாதபுரம்
  • சுல்த்தான் பஸ் - இராமநாதபுரம் - அழகன்குளம்
  • M1 - இராமநாதபுரம் - அழகன்குளம் - இராமநாதபுரம்

தொழில்

[தொகு]

இங்கு வாழும் மக்கள் மீன்பிடித் தொழிலை மேற்கொள்கின்றனர். பனை மரத் தொழில் செய்வோரும் உள்ளனர்.

சான்றுகள்

[தொகு]

கடற்கரை சத்திரம்

"https://ta.wikipedia.org/w/index.php?title=புதுவலசை&oldid=2620927" இலிருந்து மீள்விக்கப்பட்டது