தவுலத் பெக் ஓல்டி
தவுலத் பெக் ஓல்டி (DBO) | |
---|---|
இராணுவ தளம் | |
நாடு | இந்தியா |
மாநிலம் | லடாக், ஒன்றியப் பகுதி |
மாவட்டம் | லே |
ஏற்றம் | 5,100 மீட்டர் m (Bad rounding hereFormatting error: invalid input when rounding ft) |
மொழிகள் | |
• அலுவல் மொழி | உருது, லடாக்கி |
நேர வலயம் | ஒசநே+5:30 (இசீநே) |
தவுலத் பெக் ஓல்டி (Daulat Beg Oldi) இந்தியாவின் லடாக் பிரதேசத்தில் லே மாவட்டத்தில் உயரமான இடத்தில் அமைந்துள்ளது. இதன் கிழக்கே திபெத், தெற்கே லாகால், மேற்கே காஷ்மீர் பள்ளத்தாக்கு, வடக்கில் காரகோரம் மலையும் அமைந்துள்ளது. இதன் அருகில் சுரு என்ற பள்ளத்தாக்கும் அமைந்துள்ளது. இங்கு உலகின் உயரமான விமான ஓடுதளம் உள்ளது. இதனை துர்புக்-சியோக்-தவுலத் பெக் ஓல்டி சாலை, லே நகரத்துடன் இணைக்கிறது.
லடாக்கின் லே நகரத்திலிருந்து தர்புக், சியோக் ஆறு வழியாக தவ்லத் பேக் ஓல்டி வரை 255 கிலோ மீட்டர் சாலையை இந்தியா அமைத்தது. இதன் மூலம் இந்தியாவால் மிக எளிதாக இராணுவத் தளவாடங்களை உண்மையான கட்டுப்பாட்டுக் கோடு வரை நகர்த்த முடியும்.
வரலாறு
[தொகு]இந்திய-சீன எல்லைப் பகுதியான இவ்விடத்திற்கு 16ம் நூற்றாண்டில் வாழ்ந்த யார்கண்டி (Yarkandi) பிரபுவின் நினைவாக இப்பெயர் வந்ததாக அறியப்படுகிறது. இந்த ஓடுதளமானது 2008ம் ஆண்டு புதுப்பிக்கப்பட்டது.
மேம்பட்ட விமான இறங்குதளம்
[தொகு]தவுலத் பெக் ஓல்டி மேம்பட்ட விமான இறங்குதளம் | |
---|---|
சுருக்கமான விபரம் | |
வானூர்தி நிலைய வகை | தரைப்படை |
இயக்குனர் | இந்திய விமானப்படை |
அமைவிடம் | லடாக், இந்தியா |
இது கடல் மட்டத்திலிருந்து 16,614 அடி உயரத்தில் அமைந்துள்ளதால் இதுவரை இந்திய ராணுவத்தின் உயர் தரமான ஹெலிக்காப்டர்களும், ஆன்டனோவன்-32 வகையான உலகுரக விமானங்களும் குறைந்த எடை ராணுவத்தளவாடங்களை மட்டுமே எடுத்துச்சென்று வந்தன. ஆனால் 20.08.2013 செவ்வாய் கிழமை அன்று இந்திய ராணுவ விமானமான சி-130 ஜே சூப்பர் ஹெர்குலிஸ் விமானத்தை குரூப் கேப்டன் தெஜ்பிர் சிங், மற்றும் சிப்பந்திகளும் இவ்விமான ஓடுதளத்தில் இறக்கினார்கள்.[1][2] இந்திய விமானப்படையானது(IAF) தனது 50 ஆண்டுகளில் நிகழ்த்திய சாதனைகளில் இது குறிப்பிடத்தக்கது. இந்த நடவடிக்கையால் இந்திய ராணுவத்தின் கமாண்டோ படைகளை துரிதமாக அளைத்துவர உதவும் என நிருபித்துள்ளது. [3]
இதனையும் காண்க
[தொகு]- துர்புக்-சியோக்-தவுலத் பெக் ஓல்டி சாலை
- சியோக் ஆறு
- கல்வான் நதி
- பாங்காங் ஏரி
- உண்மையான கட்டுப்பாட்டுக் கோடு
- திஸ்கித்
- துர்புக்
மேற்கோள்கள்
[தொகு]- ↑ http://www.ndtv.com/article/india/in-show-of-strength-to-china-air-force-lands-c-130j-30-at-daulat-beg-oldie-408107?curl=1377023374
- ↑ "The Himalayas - Ladakh Himalayas - Villages and Plateus - Shyok Valley". Archived from the original on 5 ஜூலை 2012. பார்க்கப்பட்ட நாள் 31 May 2008.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ http://www.indiatoday.intoday.in