செனோய் மக்கள்
தெற்கு பேராக்கில் செனோய் மக்கள், 1906. | |
குறிப்பிடத்தக்க மக்கள்தொகை கொண்ட பகுதிகள் | |
---|---|
மலேசியா | |
தீபகற்ப மலேசியா | [1] |
மொழி(கள்) | |
செனோய மொழிகள் செமாய் மொழி தெமியார் மொழி; தெற்கு அசிலியான் மொழிகள்; செமாக் பெரி மொழி, மா மெரி மொழி, செமலாய் மொழி, தெமோக் மொழி, செக் ஓங் மொழி, ஜகுட் மொழி, மலாய் மொழி, ஆங்கிலம் | |
தொடர்புள்ள இனக்குழுக்கள் | |
ஒராங் அஸ்லி செமாங் மக்கள் லானோ மக்கள், ஜெகாய் மக்கள், பாத்தேக் மக்கள், மலாய மூதாதையர் செமலாய் மக்கள், தெமோக் மக்கள்[2] |
செனோய் அல்லது செனோய் மக்கள் (ஆங்கிலம்: Senoi; Senoi People; Sengoi; Sng'oi); மலாய்: Orang Senoi) என்பவர்கள் மலேசியப் பழங்குடியினரின் முப்பெரும் பிரிவுகளில் ஒரு பிரிவினர் ஆகும். இவர்கள் தீபகற்ப மலேசியாவின் மத்திய பகுதியான பகாங், சிலாங்கூர், நெகிரி செம்பிலான் மாநிலங்களில் வாழ்கின்றனர்.[3]
மலேசியப் பழங்குடியினர் மக்களில், அதிக எண்ணிக்கையிலான இவர்கள் மற்றும் மலாய் தீபகற்பம் முழுவதும் பரவலாகக் காணப் படுகின்றனர். ஆசுத்ரோ-ஆசிய மொழிகள் குடும்பத்தின் அசுலியான் மொழிகளில் உள்ள மொழிகளில், பல மொழிகளை செனோய் மக்கள் பேசுகிறார்கள்.
மலேசியப் பழங்குடியினர் தகுதி
[தொகு]மலேசிய அரசாங்கம், தீபகற்ப மலேசியாவின் பூர்வீகப் பழங்குடியினரை ஓராங் அஸ்லி (Orang Asli) என்று வகைப்படுத்துகிறது. மலேசிய பழங்குடியினர் மேம்பாட்டு துறையின் (மலாய்: Jabatan Kemajuan Orang Asli (JAKOA); ஆங்கிலம்: Department of Orang Asli Development); கீழ் சிறப்புரிமை பெற்ற 18 பழங்குடி இனக்குழுவினர் உள்ளனர். மொழி, கலாசார அடிப்படையில் அவர்களை மூன்று பெரும் பிரிவுகளாக மலேசிய அரசாங்கம் பிரித்துள்ளது.[4][5]
- செமாங் மக்கள் (Semang) அல்லது (Negrito)
- செனோய் மக்கள் (Senoi) அல்லது (Sakai)
- மலாய மூதாதையர் (Proto-Malay) அல்லது (Aboriginal Malay)
- செமாங் மக்கள் - இவர்கள் நெகிரிட்டோ என்று அழைக்கப்படுவதும் உண்டு. தீபகற்ப மலேசியாவின் வட எல்லைப் பகுதிகளில் வாழ்கின்றனர்.
- செனோய் இனத்தவர் தீபகற்ப மலேசியாவின் மத்தியப் பகுதியில் வாழ்கின்றனர்.
- புரோட்டோ மலாய் எனும் மலாய மூதாதையர் அல்லது மலாய்ப் பூர்வக் குடியினர் தீபகற்பத்தின் தென்பகுதியில் வாழ்கின்றனர்
மூன்று இனக் குழுப் பிரிவுகள்
[தொகு]மலேசியப் பழங்குடியினரின் மூன்று இனக் குழுப் பிரிவுகள், இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் பிரித்தானிய மலாயா காலனித்துவவாதிகளால் உருவாக்கப்பட்டது. மொழி, தோற்றம், உடல் பண்புகள்; மற்றும் அவர்களின் பாரம்பரிய பொருளாதாரக் கட்டமைப்பு போன்றவற்றில் மூன்று இனக் குழுக்களும் வேறுபடுகின்றன.
- நெகிரிடோ எனும் செமாங் மக்கள் குள்ளமானவர்கள்; கருமைத் தோற்றம்; சுருள் முடிகொண்டவர்கள். இவர்கள் மிகவும் பழைமையான இனமாகக் கருதப்பட்டனர்.
- செனோய் மக்கள் உயரமானவர்கள்; இலகுவான தோல்; அலை அலையான கருப்பு முடி கொண்டவர்கள்.
- மலாய மூதாதையர் எனும் பழங்குடி மக்கள் உயரமானவர்கள்; அழகான தோல்; நேரான முடி கொண்டவர்கள்.
மக்கள் தொகை
[தொகு]தீபகற்ப மலேசியாவில் மாநில வாரியாக செனோய் மக்களின் பரம்பல் (மலேசிய பழங்குடியினர் மேம்பாட்டு துறை, 1996 மக்கள் தொகை கணக்கெடுப்பு):-[6][7])
பேராக் | கிளாந்தான் | திராங்கானு | பகாங் | சிலாங்கூர் | நெகிரி செம்பிலான் | மலாக்கா | ஜொகூர் | மொத்தம் | |
---|---|---|---|---|---|---|---|---|---|
செமாய் மக்கள் | 16,299 | 91 | 9,040 | 619 | 26,049 | ||||
தெமியார் மக்கள் | 8,779 | 5,994 | 116 | 227 | 6 | 15,122 | |||
ஜாகுட் மக்கள் | 3,150 | 38 | 5 | 3,193 | |||||
செக் ஓங் மக்கள் | 4 | 381 | 12 | 6 | 403 | ||||
மா மெரி மக்கள் | 2,162 | 12 | 7 | 4 | 2,185 | ||||
செமாக் பெரி மக்கள் | 451 | 2,037 | 2,488 | ||||||
செமலாய் மக்கள் | 2,491 | 135 | 1,460 | 6 | 11 | 4,103 | |||
மொத்தம் | 25,082 | 6,085 | 451 | 17,215 | 3,193 | 1,483 | 13 | 21 | 53,543 |
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Kirk Endicott (2015). Malaysia's Original People: Past, Present and Future of the Orang Asli. NUS Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-99-716-9861-4.
- ↑ Salma Nasution Khoo & Abdur-Razzaq Lubis (2005). Kinta Valley: Pioneering Malaysia's Modern Development. Areca Books. p. 355. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-98-342-1130-1.
- ↑ "Suku Kaum". Laman Web Rasmi Jabatan Kemajuan Orang Asli. பார்க்கப்பட்ட நாள் 2022-07-23.
- ↑ Alan G. Fix (2015). Kirk Endicott (ed.). 'Do They Represent a "Relict Population" Surviving from the Initial Dispersal of Modern Humans from Africa?' from Malaysia's "Original People". NUS Press. pp. 101–122. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-99-716-9861-4.
- ↑ Nobuta Toshihiro (2009). Living On The Periphery: Development and Islamization Among the Orang Asli in Malaysia (PDF). Center for Orang Asli Concerns, Subang Jaya, Malaysia, 2009. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-983-43248-4-1. பார்க்கப்பட்ட நாள் 2020-08-04.
- ↑ Tarmiji Masron, Fujimaki Masami & Norhasimah Ismail (October 2013). "Orang Asli in Peninsular Malaysia: Population, Spatial Distribution and Socio-Economic Condition" (PDF). Journal of Ritsumeikan Social Sciences and Humanities Vol.6. பார்க்கப்பட்ட நாள் 2020-09-07.
நூல்கள்
[தொகு]- Kirk Endicott (2015), Malaysia's Original People: Past, Present and Future of the Orang Asli, NUS Press, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-99-716-9861-4
- Alberto Gomes (2004), Modernity and Malaysia: Settling the Menraq Forest Nomads, Routledge, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 11-341-0076-0
- Roy Davis Linville Jumper & Charles H. Ley (2001), Death Waits in the "dark": The Senoi Praaq, Malaysia's Killer Elite, Greenwood Publishing Group, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 03-133-1515-9
- G. William Domhof (1990), The Mystique of Dreams: A Search for Utopia Through Senoi Dream Theory, University of California Press, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 05-209-0834-1
- Robert Knox Dentan (1965), Some Senoi Semai Dietary Restrictions: A Study of Food Behaviour in a Malayan Hill Tribe, Yale University, இணையக் கணினி நூலக மைய எண் 9021093
- Iskandar Carey & Alexander Timothy Carey (1976), Orang Asli: The Aboriginal Tribes of Peninsular Malaysia, Oxford University Press, இணையக் கணினி நூலக மைய எண் 468825196
வெளி இணைப்புகள்
[தொகு]- The Selling of the Senoi by Ann Faraday and John Wren-Lewis. URL: http://www.sawka.com/spiritwatch/selling.htm
- Articles, Books, Notes and Summary of the Senoi and Kilton Stewart and The Marvelous Senoi Dream Controversy, a summary by Richard Wilkerson. URL: https://web.archive.org/web/20030421212819/http://www.shpm.com/qa/qadream/qadream8.html
- https://www.angelfire.com/ak/electricdreams/senoi.htm
- Original Wisdom: Stories of an Ancient Way of Knowing by Robert Wolff. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-89281-866-2