உள்ளடக்கத்துக்குச் செல்

தெமியார் மொழி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தெமியார் மொழி
Temiar Language
Bahasa Temiar
Orang Asli
நாடு(கள்) மலேசியா
பிராந்தியம் பேராக், கிளாந்தான், பகாங், சிலாங்கூர், நெகிரி செம்பிலான்
இனம்24,900 (2008)
தாய் மொழியாகப் பேசுபவர்கள்
30,000  (2020)e25
அவுஸ்திரேலிய
இலத்தீன்; ரூமி
மொழிக் குறியீடுகள்
ISO 639-3tea
மொழிக் குறிப்புtemi1246[1]

தெமியார் மொழி (ஆங்கிலம்: Temiar Language; மலாய்: Bahasa Temiar) என்பது ஆசுத்ரோ-ஆசிய மொழிக் குடும்பத்தின்], அசிலியான் மொழிகள்; செனோய மொழிகள் எனும் 2 துணைக் குடும்பங்களைச் சார்ந்த ஒரு மொழியாகும்.

இந்த மொழி மோன்-கெமர் மொழியின் (Mon–Khmer Language) வழித்தோன்றல் மொழிகளில் ஒன்றாகும்.[2]

தெமியார் மொழி, செனோய மொழிகளின் குடும்பத்தைச் சேர்ந்த மொழி. தெமியார் மக்களின் (Temiar people) முதனமை மொழியாகப் பேசப்படுகிறது. தெமியார் மக்களில் பலர், தித்திவாங்சா மலைத்தொடர் மழைக்காடுகளின் விளிம்புகளில் வாழ்கின்றனர். இந்த மக்களில் பலர் கேமரன் மலை அடிவாரங்களில் அதிகமாக வாழ்கின்றனர்; சிலர் சிம்மோர், கம்பார்; தாப்பா, பீடோர் நகரங்களிலும் வாழ்கின்றனர்.

பொது

[தொகு]

சொற்பிறப்பியல் ரீதியாக, தெமியார் என்ற சொல்லுக்கு விளிம்பு அல்லது அடிவாரம் என்று பொருள். இதன் வழி தெமியார் மக்கள் காடுகளின் விளிம்பில் வாழும் மக்கள் என்று விவரிக்கும் ஒரு தன்மை பிரதிபலிக்கப்படுகிறது.[3]

தெமியார் மொழி, மலேசியா, பேராக், கிளாந்தான், பகாங், சிலாங்கூர், நெகிரி செம்பிலான் மாநிலங்களில் 30,000 மக்களால் பேசப்படுகிறது. தெமியார் மக்கள் மிக அதிகமாக பேராக் மாநிலத்தில் வாழ்கிறார்கள்.[4]

மலேசியப் பழங்குடியினர் இனங்களில் உள்ள அனைவராலும் இந்த மொழிதான் முதல் மொழியாகப் பயன்படுத்தப்படுகிறது.[5]

மேலும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Hammarström, Harald; Forkel, Robert; Haspelmath, Martin, eds. (2017). "Temiar". Glottolog 3.0. Jena, Germany: Max Planck Institute for the Science of Human History.
  2. Benjamin, Geoffrey (November 2013). "Aesthetic elements in Temiar grammar". In Williams, Jeffrey P (ed.). The Aesthetics of Grammar: Sound and Meaning in the Languages of Mainland Southeast Asia. pp. 36–60. doi:10.1017/CBO9781139030489.004. ISBN 9781139030489. Retrieved 2019-10-14.
  3. Benjamin, Geoffrey (2012). "The Peculiar History of the Ethnonym "Temiar"". Journal of Social Issues in Southeast Asia 27 (2): 205–233. doi:10.1355/sj27-2a. 
  4. "The Peculiar History of the Ethnonym "Temiar"". Nanyang Technological University. Retrieved 12 September 2024.
  5. "The language is used as a first language by all in the ethnic community". Ethnologue. Retrieved 12 September 2024.

மேலும் படிக்க

[தொகு]

பன்னாட்டுத் தர தொடர் எண் 0147-5207 (online).

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=தெமியார்_மொழி&oldid=4107784" இலிருந்து மீள்விக்கப்பட்டது