மலேசிய திறன் மேம்பாட்டு துறை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மலேசிய திறன் மேம்பாட்டு துறை
Department of Skills Development Malaysia
Jabatan Pembangunan Kemahiran Malaysia

(DSD / JSK)

புத்ராஜெயா கெமிலாங் பாலத்திற்கு பின்புறத்தில் மலேசிய மனிதவள அமைச்சகம்
துறை மேலோட்டம்
ஆட்சி எல்லைமலேசியா
தலைமையகம்Level 1–7 (Podium) & Level 1–4 (Menara) No 15, Persiaran Perdana, Precinct 2, 62550 புத்ராஜெயா
2°55′8.9″N 101°41′15.8″E / 2.919139°N 101.687722°E / 2.919139; 101.687722
பணியாட்கள்647 (2018)
ஆண்டு நிதிMYR 78,930,300 (2018)
அமைச்சர்
துணை அமைச்சர்
 • * முசுதபா சக்முத்
  (Mustapha Sakmud),
  துணை மனிதவள அமைச்சர்
மூல நிறுவனம்மலேசிய மனிதவள அமைச்சு
வலைத்தளம்www.dsd.gov.my
அடிக்குறிப்புகள்
தேசிய திறன் மேம்பாட்டுச் சட்டம் 2006
(National Skills Development Act 2006)[2]

மலேசிய திறன் மேம்பாட்டு துறை (மலாய்: Jabatan Pembangunan Kemahiran Malaysia (JPK); ஆங்கிலம்: Department of Skills Development Malaysia) (DSD); என்பது மலேசிய மனிதவள அமைச்சின் (Ministry of Human Resources Malaysia) கீழ் செயல்படும் மலேசிய அரசாங்கத்தின் ஓர் அரசு நிறுவனமாகும்.[3]

மலேசிய குடிமக்களுக்கான பயிற்சி திறன்களை ஒருங்கிணைப்பதற்கும்; பயிற்சி திறன்களை ஒரே இலக்கில் கட்டுப்படுத்துவதற்கும் (Co-ordination and Control of Training Skills for Malaysian Citizens); வேலை நிபுணத்துவம் மற்றும் திறமைகளை மதிப்பிடுவதற்கான தரநிலைகளை ஆராய்ந்து உருவாக்குவதற்கும் (Researches and Develops Standards to Evaluate Job Expertise and Competency); 1989 மே 2-ஆம் தேதி மலேசிய திறன் மேம்பாட்டு துறை தோற்றுவிக்கப்பட்டது.[2]

பொது[தொகு]

திறன் மேம்பாட்டுத் துறை (Department of Skills Development), முன்பு தேசிய தொழிற்பயிற்சி மன்றம் (மலாய்: Majlis Latihan Vokasional Kebangsaan (MLVK); ஆங்கிலம்: National Vocational Training Council) என அழைக்கப்பட்டது; இது மனிதவள அமைச்சின் கீழ் உள்ள ஒரு துறையாகும்.

1989 மே 2-இல் நிறுவப்பட்ட தேசிய பயிற்சி மற்றும் சான்றிதழ் கைவினை வாரியத்தை (மலாய்: Lembaga Latihan Perindustrian dan Persijilan Ketukangan Kebangsaan (LLPPKK); ஆங்கிலம்: National Training and Certification Craft Board) மறுசீரமைப்பு செய்ததன் மூலம் திறன் மேம்பாட்டுத் துறை உருவானது.

1971-ஆம் ஆண்டு தேசிய திறன் மேம்பாட்டுச் சட்டம் 2006 (சட்டம் 652); 2006 செப்டம்பர் 1-ஆம் தேதி நடைமுறைக்கு வந்த பிறகு Majlis Latihan Vokasional Kebangsaan (MLVK) என்ற பெயர் Jabatan Pembangunan Kemahiran Malaysia (JPK) என பெயர் மாற்றம் செய்யப்பட்டது.[2][4]

அமைப்பு[தொகு]

இந்தத் திறன் மேம்பாட்டுத் துறைக்கு தலைமை இயக்குனர் ஒருவர் தலைமை தாங்குகிறார்; துணை தலைமை இயக்குனர் ஒருவர்; மற்றும் சட்ட ஆலோசகர் ஒருவர் உதவி செய்கிறார்கள்.

திறன் மேம்பாட்டுத் துறையின் செயல்பாடுகள் மேலும் 14 நிறுவனங்களுக்கும் வழங்கப்பட்டு உள்ளன. ஒவ்வொரு நிறுவனமும் ஓர் இயக்குனரால் வழிநடத்தப்படுகிறது.

அங்கீகரிக்கப்பட்ட மையங்கள்[தொகு]

திறன் மேம்பாட்டுத் துறையினால் அங்கீகரிக்கப்பட்ட மையங்களில் படிப்பை முடிக்கும் பயிற்சியாளர்களுக்கு மலேசிய திறன்கள் சான்றிதழ்கள் வழங்கப் படுகின்றன. அங்கீகாரம் பெற்ற மையங்கள் பின்வருமாறு பிரிக்கப்பட்டு உள்ளன:

 • அங்கீகரிக்கப்பட்ட பொது மையங்கள்
  • (Public Approved Centres)
 • அங்கீகரிக்கப்பட்ட தனியார் மையங்கள்
  • (Private Approved Centres)
 • அங்கீகரிக்கப்பட்ட தொழில்துறை மையங்கள்
  • (Industrial Approved Centres)
 • அங்கீகரிக்கப்பட்ட சங்க மையங்கள்
  • (Association Approved Centres)
 • அங்கீகரிக்கப்பட்ட தேசிய இரட்டைப் பயிற்சி (NDT) மையங்கள்
  • (National Dual Training Approved Centres) (NDT)

மேற்கோள்கள்[தொகு]

 1. "Anwar's Malaysia Cabinet Announcement". Bloomberg.com (Bloomberg). 2 December 2022. https://www.bloomberg.com/news/articles/2022-12-02/anwar-s-malaysia-cabinet-announcement-delayed-until-later-friday. 
 2. 2.0 2.1 2.2 "Department of Skills Development (DSD), formerly known as the National Vocational Training Council (MLVK) is a Department under the Ministry of Human Resources which was established on 2 May 1989 through the restructuring of the National Training and Certification Craft Board (LLPPKK) established in 1971 The name MLVK was changed to JPK after the National Skills Development Act 2006 (Act 652) came into force on 1st September 2006". www.dsd.gov.my. பார்க்கப்பட்ட நாள் 18 May 2023.
 3. "Department of Skills Development - Malaysia Government Directory". www.hrdnet.com.my. பார்க்கப்பட்ட நாள் 18 May 2023.
 4. "In reference to the Legal Officer, Ministry of Human Resources and Ministry of Education states that article 14 (b), 16 (c) (iv) and 34 (1) (d) does not include Private PB under the National Skills Development Act 2006 [Act 652]. Kemahiran Kebangsaan 2006 [Akta 652]". பார்க்கப்பட்ட நாள் 18 May 2023.

வெளி இணைப்புகள்[தொகு]