மலேசிய தீயணைப்பு மீட்பு துறை
Jabatan Bomba dan Penyelamat Malaysia (JBPM) | |
துறை மேலோட்டம் | |
---|---|
அமைப்பு | 1883 |
ஆட்சி எல்லை | மலேசியா |
தலைமையகம் | Lebuh Wawasan, Presint 7, 62250 Putrajaya, Wilayah Persekutuan புத்ராஜெயா |
குறிக்கோள் | மீட்கத் தயார்; துரிதம் மற்றும் நட்பு Ready To Rescue; Fast And Friendly |
பணியாட்கள் | 15,329 (2023)[1] |
ஆண்டு நிதி | MYR 966,009,900 (2023)[1] |
அமைச்சர் |
|
துணை அமைச்சர் |
|
அமைப்பு தலைமை |
|
மூல நிறுவனம் | மேம்பாட்டு அமைச்சு |
வலைத்தளம் | |
அடிக்குறிப்புகள் | |
(Fire Services Act 1988 (Act 341) |
மலேசிய தீயணைப்பு மீட்பு துறை (மலாய்: Jabatan Bomba dan Penyelamat Malaysia (JBPM); ஆங்கிலம்: Fire and Rescue Department of Malaysia); என்பது மலேசிய உள்ளூராட்சி மேம்பாட்டு அமைச்சின் (Ministry of Local Government Development Malaysia) கீழ் செயல்படும் மலேசிய அரசாங்கத்தின் ஓர் அரசு நிறுவனமாகும்.
பொதுவாக போம்பா (Bomba) என்று அழைக்கப்படும் இந்தத் துறை, தீயணைப்பு (Firefighting) மற்றும் தொழில்நுட்ப மீட்புப் பணிகளுக்கு (Technical Rescue) பொறுப்பான துறையாக விளங்குகிறது.
போம்பா (Bomba) எனும் மலாய் மொழி சொல்லானது; போர்த்துகீசிய சொல்லான போம்பிரோசு (Bombeiros) எனும் சொல்லில் இருந்து உருவானது; அதாவது 'தீயணைப்பாளர்கள்' என்று பொருள்படும்.
வரலாறு
[தொகு]மலேசியாவில் தீயணைப்புச் சேவைகள் 1883-இல் தொடங்கியது. இந்தச் சேவை முதன்முதலில் சிலாங்கூரில் 15 பணியாளர்களுடன் தொடங்கப்பட்டது. அப்போது அதன் தலைவர் எச்.எப். பெல்லாமி H.F. Bellamy. இரண்டாம் உலகப் போருக்கு பிறகு, கோலாலம்பூரில் பிளைட் செர்மன் (Flight Lt. W.J. German) என்பவரின் தலைமையில் மலாயன் யூனியன் தீயணைப்பு சேவைகள் (Malayan Union Fire Services) எனும் தீயணைப்புச் சேவை உருவாக்கப்பட்டது.[3]
மலேசியா கூட்டமைப்பு ஒப்பந்தத்திற்கு (Malaysia Federation Agreement) பிறகு தீயணைப்பு சேவைகள் மாநில அரசுகளின் பொறுப்பாக மாறியது. அதன் பின்னர் 1 சனவரி 1976- இல் நடுவண் அரசாங்கத்தில் ஒரு துறையாக ஒருங்கிணைக்கப்பட்டது.[3][4]
மலேசிய தீயணைப்பு சேவைகள் துறை
[தொகு]அதே காலக் கட்டத்தில் வீட்டுவசதி மற்றும் உள்ளாட்சி அமைச்சின் (Ministry of Housing and Local Government) கீழ் ஒரு துறையாகவும் கொண்டு வரப்பட்டது. பின்னர் 15 மே 1981-இல் மலேசிய தீயணைப்பு சேவைகள் துறை (Malaysian Fire Services Department) எனும் ஒரு புதிய பெயரைப் பெற்றது.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 "Ministry of Housing and Local Government - Fire and Rescue Department(2022 – 2023)" (PDF). பார்க்கப்பட்ட நாள் 19 May 2023.
- ↑ "Zahid returns as number 2, Anwar keeps finance as he unveils Cabinet". Malaysia Now. பார்க்கப்பட்ட நாள் 2 December 2022.
- ↑ 3.0 3.1 "inauguration 2 The Malaysian Fire Service began in 1883 with the establishment of the Selangor State Volunteer Fire Brigade led by HF Bellamy with 15 members. This force placed under the Sanitation Board became the Permanent Fire and Rescue Force in 1895". PORTAL RASMI. பார்க்கப்பட்ட நாள் 19 May 2023.
- ↑ "Fire and Rescue Department of Malaysia". www.iium.edu.my. பார்க்கப்பட்ட நாள் 19 May 2023.