மலேசிய தணிக்கை துறை
National Audit Department Jabatan Audit Negara | |
மலேசிய தணிக்கை துறை தலைமையகம் | |
துறை மேலோட்டம் | |
---|---|
அமைப்பு | 1906 |
தலைமையகம் | Aras 1 - 9, Blok F2 & F3, Kompleks F, Lebuh Perdana Timur, Presint 1, Pusat Pentadbiran Kerajaan Persekutuan, 62000 புத்ராஜெயா |
பணியாட்கள் | 2,032 (2023)[1] |
ஆண்டு நிதி | MYR 160,837,700 (2023)[1] |
அமைப்பு தலைமை |
|
மூல நிறுவனம் | மலேசிய நாடாளுமன்றம் |
வலைத்தளம் | www |
அடிக்குறிப்புகள் | |
மலேசிய அரசியலமைப்பு பிரிவு 105 (Article 105 of the Federal Constitution of Malaysia) |
மலேசிய தணிக்கை துறை (மலாய்: Jabatan Audit Negara Malaysia; ஆங்கிலம்: National Audit Department Malaysia) என்பது மலேசியாவில் சுயேச்சையாக இயங்கும் (Independent Government Agency) ஓர் அரசு நிறுவனமாகும். இந்தத் துறைக்கு, மலேசிய அரசியலமைப்பு பிரிவு 105-இன் கீழ் தன்னிச்சையாக இயங்குவதற்கு முழு உரிமை வழங்கப்பட்டு உள்ளது.[2]
மலேசிய நடுவண் அரசு (Malaysian Federal Government); மலேசிய மாநில அரசாங்கங்கள் (Malaysian State Governments); நடுவண் கூட்டரசு அரசாங்க அமைப்புகள் (Federal Statutory Bodies); மற்றும் மாநில அரசாங்கங்களின் கீழ் உள்ள துறைகள் அல்லது நிறுவனங்கள்; ஆகியவற்றின் கணக்குகள் மற்றும் மலேசிய அமைச்சுகளின் (Ministry/Department/Agency and Companies) செயல்பாடுகள் மீதான தணிக்கைகளை மேற்கொள்வதற்கு பொறுப்பு வகிக்கும் துறை ஆகும்.[2]
வரலாறு
[தொகு]அரசாங்கத்தின் நிதி நிர்வாக அமைப்பை வலுப்படுத்த 20-ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் பிரித்தானிய மலாயாவில் மலாயா தணிக்கை துறை உருவாக்கப்பட்டது.
அந்தக் காலக்கட்டத்தில் தணிக்கை துறை மலாயா கூட்டமைப்பு மாநிலங்கள் (Federated Malay States) மற்றும் நீரிணை குடியேற்றங்கள் (Straits Settlements) என மாநிலங்களின்படி தனித்தனியாக இயங்கியது. ஒவ்வொரு கூட்டமைப்பு மாநிலத்திலும், இந்தத் தணிக்கை துறை; தணிக்கை அலுவலகம் (Audit Office) என்று அழைக்கப்பட்டது.
தேசிய தணிக்கை நிறுவனம்
[தொகு]அந்தத் தணிக்கை துறை மாநிலத் தணிக்கையாளரால் (State Auditor) வழிநடத்தப்பட்டது. அப்போது தணிக்கை அலுவலகத்திற்கான தலைமையகம் கோலாலம்பூரில் அமைந்து இருந்தது; மற்றும் தலைமை தணிக்கையாளரின் (Chief Auditor) தலைமையில் இயங்கியது.
கடமைகளின் அடிப்படையில் கட்டமைக்கப்பட்ட தேசிய தணிக்கை நிறுவனம் (National Audit Institution) 1906-இல் தொடங்கப்பட்டது. மலாயா கூட்டமைப்பு மாநிலங்களுக்கான முதல் தலைமை தணிக்கையாளராக (Auditor General) இயூம் என்பவர் (W.J.P Hume) நியமிக்கப்பட்டார்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 "National Audit Department (2022 – 2023)" (PDF). பார்க்கப்பட்ட நாள் 17 March 2023.
- ↑ 2.0 2.1 "The National Audit Department (NAD) created a ranking system to measure effectiveness of administrative controls. NAD is the Malaysian Supreme Audit Institution responsible for evaluating management performance of all ministries, departments, and autonomous entities at the central, states and local governments in Malaysia". பார்க்கப்பட்ட நாள் 17 May 2023.