மலேசிய தர நிர்ணய அமைவனம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மலேசிய தர நிர்ணய அமைவனம்
Malaysian Qualifications Agency
Agensi Kelayakan Malaysia
அரசாங்க நிறுவனம் மேலோட்டம்
அமைப்பு1970; 54 ஆண்டுகளுக்கு முன்னர் (1970)
தலைமையகம்Mercu MQA, Jalan Teknokrat 7, Cyberjaya, Malaysia, 62000 சைபர்ஜெயா
அரசாங்க நிறுவனம் தலைமை
  • டாக்டர் முகமது சதர் சப்ரான்
மூல நிறுவனம்மலேசிய உயர்க் கல்வி அமைச்சு
வலைத்தளம்www.mqa.gov.my

மலேசிய தர நிர்ணய அமைவனம் (மலாய்: Agensi Kelayakan Malaysia (AKM); ஆங்கிலம்: Malaysian Qualifications Agency) (MQA); என்பது மலேசியத் தகுதிச் சட்டம் 2007-இன் கீழ் மலேசியாவில் நிறுவப்பட்ட சட்டப்பூர்வமான தர நிர்ணய அமைப்பாகும். மலேசியாவின் கல்வி நிறுவனங்களால் வழங்கப்படும் இடைநிலைக் கல்வி; மற்றும் உயர்நிலைக் கல்வியை அங்கீகரிக்கும் அமைப்பாக மலேசிய தர நிர்ணய அமைவனம் உருவாக்கப்பட்டது.

மேலும் தனியார் கல்வி நிறுவனங்கள் வழங்கும் கல்வித் தகுதிகளுக்கான சான்றிதழ்களை அங்கீகரிக்கும் கடப்பாடும் மலேசிய தர நிர்ணய அமைவனத்திற்கு உண்டு. இந்த அமைப்பின் தலைமை அலுவலகம் சிலாங்கூர் சைபர்ஜெயாவில் உள்ளது.[1]

பங்கு[தொகு]

மலேசிய உயர்கல்வியின் தர உறுதிப்பாட்டின் அடிப்படையில், மலேசியத் தகுதிக் கட்டமைப்பைச் செயல்படுத்துவதே மலேசிய தர நிர்ணய அமைவனத்தின் முக்கியப் பங்கு ஆகும். மற்றும் தேசியக் கல்வித் தகுதிகளுக்கான அளவுகோல்கள் மற்றும் தரநிலைகளை நிர்ணயம் செய்வதும் அந்த அமைப்பின் செயல்பாடுகளில் முக்கியமாகக் கருதப்படுகிறது. [2]

மலேசிய தர நிர்ணய அமைப்பின் செயல்பாடுகள்[தொகு]

  • மலேசியத் கல்வித் தகுதிக் கட்டமைப்பின் நிலைத்தன்மையைச் செயல்படுத்துதல்[3]
  • கல்விக் கழங்களின் ஒத்துழைப்புடன் கல்வி விருதுகள், கல்விச் சான்றிதழ்களுக்கான தரநிலைகளை உருவாக்குதல்[4]
  • உயர்க்கல்வி நிறுவனங்கள் மற்றும் அவற்றின் திட்டங்களின் தரத்தை உறுதிப்படுத்துதல்
  • நிர்ணயிக்கப்பட்ட அளவுகோல்கள் மற்றும் கல்வித் தரநிலைகளைப் பூர்த்தி செய்யும் கல்வித் துறைகளுக்கு அங்கீகாரம் வழங்குதல்
  • கல்வித் தகுதிகளை அங்கீகரித்து அவற்றின் நடைமுறைகளை எளிதாக்குதல்
  • மலேசியக் கல்வித் தகுதிகள் தொடர்பான பதிவேடுகளைப் பராமரித்தல்[5]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Home". Malaysian Qualifications Agency. பார்க்கப்பட்ட நாள் 2021-06-07. Malaysian Qualifications Agency Mercu MQA, No. 3539, Jalan Teknokrat 7, Cyber 5, 63000 Cyberjaya, Selangor.
  2. Malaysian Qualifications Agency: MQA In Brief பரணிடப்பட்டது 5 செப்டெம்பர் 2008 at the வந்தவழி இயந்திரம்
  3. Malaysian Qualifications Agency: Nilai Taraf Kelayakan Akademik Luar Negara yang Setara dengan SPM/STPM பரணிடப்பட்டது 21 நவம்பர் 2008 at the வந்தவழி இயந்திரம் (in Malay)
  4. Education Act 1996 Refer to Article 77 of the Act பரணிடப்பட்டது 29 அக்டோபர் 2008 at the வந்தவழி இயந்திரம்
  5. Education Act 1996: Article 2 of the Act பரணிடப்பட்டது 29 அக்டோபர் 2008 at the வந்தவழி இயந்திரம்

மேலும் காண்க[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=மலேசிய_தர_நிர்ணய_அமைவனம்&oldid=3900727" இலிருந்து மீள்விக்கப்பட்டது