உள்ளடக்கத்துக்குச் செல்

மலேசிய குடிவரவு துறை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மலேசிய குடிவரவு துறை
Immigration Department Of Malaysia
Jabatan Imigresen Malaysia
மலேசிய குடிவரவு துறை சின்னம்

மலேசிய குடிவரவு துறை தலைமையகம்
துறை மேலோட்டம்
அமைப்பு1906; 118 ஆண்டுகளுக்கு முன்னர் (1906)
ஆட்சி எல்லைமலேசியா
தலைமையகம்Level 1–7 (Podium) & Level 1–4 (Menara) No 15, Persiaran Perdana, Precinct 2, 62550 புத்ராஜெயா
2°55′8.9″N 101°41′15.8″E / 2.919139°N 101.687722°E / 2.919139; 101.687722
பணியாட்கள்15,647 (2023)[1]
ஆண்டு நிதிMYR 1,123,500,000 (2023)[1]
அமைச்சர்
  • * சைபுடின் நசுத்தியோன்
    (Saifuddin Nasution Ismail), அமைச்சர்
அமைப்பு தலைமை
  • ருசுலின் ஜுசோ
    (Ruslin Jusoh)
வலைத்தளம்www.imi.gov.my
அடிக்குறிப்புகள்
(குடியேற்ற சட்டம் 1959/63 (திருத்தம் 2002)
குடியேற்ற சட்டவிதிகள் 1963; 1966; 2003
(Immigration Act 1959/63 (Amendant 2002)
Immigration Rules 1963
Passport Act 1966 and Immigration Detantion Camp Rules 2003

மலேசிய குடிவரவு துறை (மலாய்: Jabatan Imigresen Malaysia; ஆங்கிலம்: Immigration Department of Malaysia) என்பது மலேசிய குடிமக்கள் (Malaysian Citizens), நிரந்தர குடியிருப்பாளர்கள் (Permanent Residents) மற்றும் வெளிநாட்டு வருகையாளர்களுக்கு (Foreign Visitors) சேவைகளை வழங்கும் மலேசிய நடுவண் அரசாங்கத்தின் ஓர் அரசு நிறுவனமாகும்.

இந்தத் துறை மலேசிய உள்துறை அமைச்சின் (Ministry of Home Affairs Malaysia) கீழ் செயல்படுகிறது.

பொது

[தொகு]

முக்கியப் பொறுப்புகள்

[தொகு]
  • கடவுச் சீட்டுகள் (Passports), பயண ஆவணங்கள் (Travel Documents), விசாக்கள் (Visas), கடவுச்சீட்டு அனுமதிகளை (Passes and Permits) வழங்குதல்.
  • அங்கீகரிக்கப்பட்ட நுழைவு இடங்களிலும்; மற்றும் வெளியேறும் இடங்களிலும்; மக்கள் நடமாட்டத்தை நிர்வகித்தல் மற்றும் கண்காணித்தல்
  • குடியேற்றச் சட்டம் 1959/63 (Immigration Act 1959/63); மற்றும் கடவுச்சீட்டுகள் சட்டம் (1966 Passport Act 1966) உட்பட அனைத்துக் குடியேற்றச் சட்டங்களையும் அமல்படுத்துதல்

வரலாறு

[தொகு]

மலேசிய குடிவரவுத் துறையின் முதல் தலைமையகம் 1947-ஆம் ஆண்டில் பினாங்கில் நிறுவப்பட்டது.

குடிவரவுத் துறையின் தலைமையகம்; செப்டம்பர் 2004 வரை கோலாலம்பூர் மாநகர்ப் பகுதிக்குள் பலமுறை; பல இடங்களில் மாற்றப்பட்டது. கடைசியாக புத்ராஜெயாவின் கூட்டரசு அரசாங்க நிர்வாகப் பகுதிக்கு மாற்றப்பட்டது.

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 "PERUNTUKAN (2022 – 2023) BAGI MENGURUS DAN PEMBANGUNAN" (PDF). பார்க்கப்பட்ட நாள் 17 May 2023.

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=மலேசிய_குடிவரவு_துறை&oldid=3717904" இலிருந்து மீள்விக்கப்பட்டது