மலேசிய குடிமை தற்காப்பு துறை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மலேசிய குடிமை தற்காப்பு துறை
Malaysia Civil Defence Force
Angkatan Pertahanan Awam Malaysia

MCDF APM
மலேசிய குடிமை தற்காப்பு துறை சின்னம்
துறை மேலோட்டம்
அமைப்பு1939; 85 ஆண்டுகளுக்கு முன்னர் (1939)
ஆட்சி எல்லை மலேசியா
தலைமையகம்Angkatan Pertahanan Awam Malaysia
Jalan Maktab Perguruan Islam,
Sungai Merab,
43000 Kajang, சிலாங்கூர்
குறிக்கோள்
தயார்நிலை, வேகம், நேர்மை
Readiness, Speed, Integrity
மூல நிறுவனம்மலேசியப் பிரதமர் துறை
வலைத்தளம்
civildefence.gov.my

மலேசிய குடிமை தற்காப்பு துறை (மலாய்: Angkatan Pertahanan Awam Malaysia (JPJ); ஆங்கிலம்: Malaysia Civil Defence Force); என்பது மலேசியப் பிரதமர் துறையின் (Malaysian Prime Minister's Department) கீழ் செயல்படும் மலேசிய அரசாங்கத்தின் ஓர் அரசு நிறுவனமாகும்.[1]

முன்பு குடிமை தற்காப்பு துறை (Jabatan Pertahanan Awam 3) (JPA3) அல்லது மீட்பு 991 (Rescue 991) என அறியப்பட்டது. பின்னர் 31 ஆகத்து 2016 வரையில், மலேசிய தற்காப்பு துறை (Jabatan Pertahanan Awam Malaysia) (JPAM) என்றும்; மேலும் அண்மையில் மலேசிய குடிமை தற்காப்பு துறை (Angkatan Pertahanan Malaysia) (APM) என்றும் அறியப்படுகிறது.

வரலாறு[தொகு]

மலேசிய விடுதலைக்கு முன்[தொகு]

  • 1939 - மலேசியாவில் குடிமைத் தற்காப்பு நடவடிக்கைகள் பிரித்தானிய அரசால் தொடங்கப் பட்டன. அதன் பின்னர், இந்தத் துறைக்கு, பாதுகாப்பு அவசர ஒழுங்குமுறைச் சட்டம் அத்தியாயம் 4-இன் கீழ் (Passive Defence Emergency Regulation Enactment under Chapter 4); இரண்டாம் உலகப் போரின் விளைவுகளைத் தணிப்பதற்கான நடவடிக்கைகளுக்கு அதிகாரம் வழங்கப்பட்டது.[2]
  • 1951 - குடிமை தற்காப்பு சட்டம் 1951 (The Civil Defence Ordinance 1951) ஒரு சட்டமாக இயற்றப்பட்டது. மலாயா அவசரகால நிலையின் (Malayan Emergency) அச்சுறுத்தலை எதிர்கொள்ளும் நோக்கத்தில் குடிமை பாதுகாப்பு ஒரு தேசியப் பாதுகாப்பு துறையாக மாற்றப்பட்டது.[3]
  • 1952 - குடிமை பாதுகாப்பு துறை (Civil Defence Department) மார்ச் 24 அன்று நிறுவப்பட்டது.[3]

மலேசிய விடுதலைக்கு பின்[தொகு]

  • 1957 - குடிமை தற்காப்பு சட்டம் 1951 (The Civil Defence Ordinance 1951) மலாயாவின் சுதந்திரத்திற்குப் பிறகு குடிமை பாதுகாப்புச் சட்டம் 1951 (சட்டம் 221) (Civil Defence Act 1951 Act 221) என மாற்றப்பட்டது
  • 1965 - உறுப்பினர் எண்ணிக்கை 37 கிளைகளுடன் 36,000 உறுப்பினர்களாக அதிகரித்தது. அந்த நேரத்தில் புதிய தளவாடப் பொருள்களுடன்; அமைதி மற்றும் போர் ஆகிய இரண்டிலும் நாடு தழுவிய அளவில் குடிமை பாதுகாப்புத் துறை பயன்படுத்தப்பட்டது.
  • 1970 - கோலாலம்பூர் வெள்ளத்தால் (1971 Kuala Lumpur floods); 1952-ஆம் ஆண்டு தேசிய சேவைச் சட்ட விதிகளின்படி (National Service Act 1952); குடிமை பாதுகாப்புத் துறையின் பணியாளர்கள் நாடு முழுவதும் பணியில் அமர்த்தப் பட்டனர்.
  • 1972 - 1951-ஆம் ஆண்டு குடிமை தற்காப்புச் சட்டம் (Civil Defence Act 1951); போர்க் காலத்தில் பேரிடர் நிவாரணச் சேவைகளைச் செய்வதற்கு (Wartime Duties) அந்தச் சட்டம் திருத்தம் செய்யப்பட்டது.
  • 1993 - உலு கிள்ளான் (Hulu Kelang) பகுதியில் இருந்த அய்லேண்டு கோபுரம் சரிந்து விழுந்தது (Highland Towers collapse). இந்த நிகழ்வில் மலேசிய குடிமை தற்காப்பு துறை போற்றுதலுக்குரிய சேவைகளைச் செய்தது; பலராலும் அறியப்பட்டது. இதன் பின்னர் அந்தத் துறை நவீன மயமாக்கலையும் தொடங்கியது.

அமைப்பு[தொகு]

  • 890,000 தன்னார்வலர்கள் (Volunteers)
  • 1,520,000 தயார் நிலையாளர்கள் (Reservists)
  • 142,000 மாணவர் படையினர் (Cadets)
  • 19 மாநிலத் தளங்கள் (State Commands)
  • 55 செயல் பிரிவுகள் (Active Units)
  • 99 மாவட்டப் படைகள் (District Commands)
  • 55 குடிமை பாதுகாப்பு பிரிவுகள் (Civil Defense Units)
  • மலேசிய குடிமை தற்காப்பு கல்விக் கழகம் (Civil Defence Academy)
  • 3 குடிமை பாதுகாப்பு அதிகாரிகளுக்கான பயிற்சிப் பள்ளிகள் (Civil Defence Officer Cadet Schools)

மேற்கோள்கள்[தொகு]

  1. "The Malaysia Civil Defence Force (Malay: Angkatan Pertahanan Awam Malaysia) or popularly known as APM or MCDF (formerly JPAM and JPA3) is the civil defence services agency in Malaysia". Apollo.io. பார்க்கப்பட்ட நாள் 20 May 2023.
  2. http://www.civildefence.gov.my/profil-apm/maklumat-korporat/pangkat-dan-gelaran/
  3. 3.0 3.1 "The Malaysian National Defense Force (JPAM) is currently amending the Civil Defense Act 1951 or Act 221 to be improved in line with the current situation and development". APM: Malaysia Civil Defence Department. 17 June 2015. பார்க்கப்பட்ட நாள் 20 May 2023.

மேலும் காண்க[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]