உள்ளடக்கத்துக்குச் செல்

2009 சட்டீஸ்கர் மக்களவை உறுப்பினர்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

2009 ஆம் ஆண்டு நடைபெற்ற இந்தியப் பாராளுமன்றத்தின் பதினைந்தாவது மக்களவைக்கு நடைபெற்ற தேர்தலில் சட்டீஸ்கர் மாநிலத்திலிருக்கும் 11 மக்களவைத் தொகுதிகளுக்கு உறுப்பினர்களாகத் தேர்வு செய்யப்பட்டவர்கள், அவர்கள் சார்ந்துள்ள கட்சி ஆகியவைகளைக் கொண்ட பட்டியல் இது. இம்மாநிலத்திலிருந்து ஆங்கிலோ இந்திய சமூகப் பிரதிநிதி ஒருவர் மக்களவையின் நியமன உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளதால் இம்மாநிலத்திலிருந்து மக்களவை உறுப்பினர்கள் எண்ணிக்கை 12 ஆக உள்ளது.

வ.எண். மக்களவைத் தொகுதியின் பெயர் மக்களவை உறுப்பினர் அரசியல் கட்சி
1 ராய்பூர் ரமேஷ் பைஸ் பாரதீய ஜனதா கட்சி
2 பிலாஸ்பூர் திலீப்சிங் சுதேவ் பாரதீய ஜனதா கட்சி
3 பாஸ்டர் பாலிராம் காஸ்யப் பாரதீய ஜனதா கட்சி
4 கோர்பா டாக்டர் சரண் தாஸ் மகந்த் இந்திய தேசிய காங்கிரஸ்
5 நியமன உறுப்பினர் இங்ரிட் மெக்லாட் இந்திய தேசிய காங்கிரஸ்
6 துர்க் சரோஜ் பாண்டே பாரதீய ஜனதா கட்சி
7 ஜான்ஞ்கிர்- சம்பா கமலாதேவி பாட்லே பாரதீய ஜனதா கட்சி
8 காங்கெர் சோகன் பொதாய் பாரதீய ஜனதா கட்சி
9 மஹாசமுந்த் சந்துலால் சாகு பாரதீய ஜனதா கட்சி
10 ரெய்கார்க் விஷ்ணு டியோ சாய் பாரதீய ஜனதா கட்சி
11 சுர்குஜா முரளிலால் சிங் பாரதீய ஜனதா கட்சி
12 ரஜ்னந்த்கவுன் மதுசுதன் யாதவ் பாரதீய ஜனதா கட்சி

நியமன உறுப்பினர்

[தொகு]

மக்களவைக்கு நியமன உறுப்பினர்களாக ஆங்கிலோ இந்தியன் சமூகத்தவரிலிருந்து இருவர் நியமிக்கப்படுவது வழக்கமாக உள்ளது. பதினைந்தாவது மக்களவையில் நியமிக்கப்பட்ட இரு ஆங்கிலோ இந்தியன் சமூகத்தவரில் இங்ரிட் மெக்லாட் ஒருவர்.

கட்சி வாரியாக உறுப்பினர்கள்

[தொகு]

இம்மாநிலத்தில் கட்சி வாரியாக உள்ள மக்களவை உறுப்பினர்கள் எண்ணிக்கை:

இவற்றையும் பார்க்க

[தொகு]