லே மெஸ்னில்-பேட்ரி சண்டை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
லே மெஸ்னில்-பேட்ரி சண்டை
கான் சண்டை பகுதி
நாள் ஜூன் 11, 1944
இடம் லே மெஸ்னில்-பேட்ரி, பிரான்சு
ஜெர்மானிய வெற்றி
பிரிவினர்
 கனடா  நாட்சி ஜெர்மனி
இழப்புகள்
116 மாண்டவர்

35 காயமடைந்தவர்
22 போர்க்கைதிகள்
51 டாங்குகள் சேதமடைந்தன

தெரியவில்லை

லே மெஸ்னில்-பேட்ரி சண்டை (Battle of Le Mesnil-Patry) என்பது இரண்டாம் உலகப் போரின் மேற்குப் போர்முனையில் நிகழ்ந்த ஒரு சண்டை. இது ஓவர்லார்ட் நடவடிக்கையின் ஒரு பகுதியாகும். நாசி ஜெர்மனியின் ஆக்கிரமிப்பில் இருந்த பிரான்சின் கான் நகரைத் கைப்பற்ற நேச நாட்டுப் படைகள் மேற்கொண்ட முயற்சியின் ஒரு பகுதியாக இந்நடவடிக்கை நடைபெற்றது.

பிரான்சு மீதான நேச நாட்டுக் கடல்வழிப் படையெடுப்பு ஜூன் 6, 1944ம் தேதி துவங்கியது. இப்படையெடுப்பின் உடனடி நோக்கங்களில் ஒன்று கான் நகரைக் கைப்பற்றுதல். ஆனால் ஜூன் மாதம் முழுவதும் பல முறை முயன்றும் அந்நகரை நேச நாட்டுப் படைகளால் கைப்பற்ற முடியவில்லை. இச்சண்டைத் தொடரின் ஒரு பகுதியே லே மெஸ்னில்-பேட்ரி சண்டை. ஜூன் 11ம் தேதி கனடியப் படைகள் கான் நகர் அருகே உள்ள லே மெஸ்னில்-பேட்ரி ஊரைத் தாக்கிக் கைப்பற்ற முயன்றன. இத்தாக்குதலில் அரசியின் சொந்த சுடுகலன் ரெஜிமண்ட் மற்றும் 1வது ஃகுஸ்சார்கள் ரெஜிமண்ட் ஆகியவை பங்கேற்றன. லே மெஸ்னில்-பேட்ரி நகரை ஜெர்மானிய 12வது எஸ். எஸ் டிவிசன் பாதுகாத்து வந்தது. பலமான பாதுகாவல் நிலைகளின் மீதான கனடியத் தாக்குதல் முறியடிக்கப்பட்டு இச்சண்டை ஜெர்மானியப் படைகளுக்கு வெற்றியில் முடிவடைந்தது.