சார் படையெடுப்பு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சார் படையெடுப்பு
இரண்டாம் உலகப் போரின் மேற்குப் போர்முனையின் பகுதி
நாள் செப்டம்பர் 7–16, 1939
இடம் சார்லாந்து, மேற்கு ஜெர்மனி
பிரெஞ்சுப் படைகள் தாமாகவே பின்வாங்கின
பிரிவினர்
பிரான்சு பிரான்சு நாட்சி ஜெர்மனி நாசி ஜெர்மனி
பலம்
41 டிவிஷன்கள்
2400 டாங்குகள்
4700 பீரங்கிகள்
22 டிவிசன்கள்
< 100 பீரங்கிகள்
இழப்புகள்
689 போர்க்கைதிகள்
220 காயமடைந்தவர்கள்
196 மாண்டவர்
356 காயமடைந்தவர்கள்
11 விமானங்கள்

சார் படையெடுப்பு அல்லது சார் தாக்குதல் (Saar Offensive) என்பது இரண்டாம் உலகப் போரின் மேற்குப் போர்முனையில் நிகழ்ந்த ஒரு படையெடுப்பு. செப்டம்பர் 7-16, 1939ல் பிரான்சு நாசி ஜெர்மனியின் மேற்கெல்லையில் இத்தாக்குதலை நிகழ்த்தியது. ஆனால் நேச நாட்டுத் தலைவர்களிடம் மன உறுதி இல்லாத காரணத்தால் இது திட்டமிட்டபடி நடைபெறாமல் பாதியிலேயே நிறுத்திக்கொள்ளப்பட்டது.

இரண்டாம் உலகப் போர் மூளும் முன் நேச நாடுகளுக்கும் போலந்துக்கும் ராணுவ உதவி உடன்படிக்கை ஏற்பட்டிருந்தது. ஜெர்மனி போலந்தைத் தாக்கினால், அதன் மேற்குப்போர்முனையில் பிரான்சு தாக்குதல் நடத்தி ஜெர்மனியை இருமுனைப் போரில் ஈடுபடும்படி செய்ய வேண்டுமென இவ்வுடன்படிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது. மேற்குப் போர்முனையில் பிரான்சு தாக்கினால் ஜெர்மனி போலந்திலிருந்து தன் படைகளின் ஒரு பகுதியை திருப்பி அழைக்க வேண்டியிருக்கும், அது போலந்துக்கு சாதகமாக அமையும் என்று எதிர்பார்க்கப்பட்டது. செப்டம்பர் 1, 1939ல் ஜெர்மனி போலந்தைத் தாக்கியது. செப்டம்பர் 3ம் தேதி பிரான்சு ஜெர்மனி மீது போர் பிரகடனம் செய்தது. செப்டம்பர் 7ம் தேதி ஜெர்மனியின் ரைன் பள்ளத்தாக்கில் பிரெஞ்சுப் படைகள் நுழைந்தன. ஜெர்மனி-பிரான்சு எல்லையில் குறைவான ஜெர்மானிய படைகளே நிறுத்தப்பட்டிருந்ததால் நிலை பிரான்சுக்கு சாதகமாகவே இருந்தது. ஜெர்மனியின் சார்லாந்துப் பகுதியுள் எட்டு கி. மீ தூரம் வரை பிரெஞ்சுப் படைகள் முன்னேறின. இருபது கிராமங்களையும் மூன்று சதுர கி.மீ பரப்பரவுள்ள வார்ண்ட் காட்டுப்பகுதியையும் அவை கைப்பற்றின. ஆனால் இத்தாக்குதல் அரைமனதாகவே நடைபெற்றது. போலந்துக்கு உறுதியளித்தபடி 40 டிவிசன்களுடன் நடக்க வேண்டிய இந்த படையெடுப்பில் 11 டிவிசன்கள் மட்டுமே கலந்து கொண்டன. 12ம் தேதி நேசநாட்டுப் படைகளின் முதன்மை போர் குழுமம் கூடி படையெடுப்பை நிறுத்திக் கொள்ள வேண்டுமென முடிவு செய்தது. செப்டம்பர் 16ம் நாள் அனைத்து பிரெஞ்சுப் படைகளும் பின்வாங்கி மஷினோ கோட்டிற்கு (பிரெஞ்சு எல்லை அரண்) திரும்பி வந்துவிட்டன. நேச நாடுகளின் இந்த துரோகத்தால் ஜெர்மனி போலந்தை எளிதில் கைப்பற்றியது.

அடிக்குறிப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சார்_படையெடுப்பு&oldid=1372499" இலிருந்து மீள்விக்கப்பட்டது