அன்னூட் சண்டை
ஹன்னூட் சண்டை | |||||||
---|---|---|---|---|---|---|---|
பெல்ஜியம் சண்டையின் (இரண்டாம் உலகப் போர்) பகுதி | |||||||
அழிக்கப்பட்ட இரு பிரெஞ்சு எஸ்.ஓ.எம்.யு.ஏ. எஸ்35 ரக கவச வண்டிகளை ஜெர்மானிய வீரர்கள் பார்வையிடுகிறார்கள். |
|||||||
|
|||||||
பிரிவினர் | |||||||
பிரான்சு ஐக்கிய இராச்சியம் நெதர்லாந்து[4] | நாசி ஜெர்மனி | ||||||
தளபதிகள், தலைவர்கள் | |||||||
ரெனே பிரியூ | எரிக் ஹொயப்னர்
|
||||||
பலம் | |||||||
2 கவச டிவிசன்கள் 20,800 படை வீரர்கள் 600 கவச போரூர்திகள்[5][6] | 2 பான்சர் (கவச)டிவிசன்கள் 25,927 படை வீரர்கள் 618 டாங்குகள்(some sources say 674)[7] 108 பீரங்கிகள் [5][8] 1,252 aircraft |
||||||
இழப்புகள் | |||||||
121 டாங்குகள்,[9] | 60 மாண்டவர் 80 காயமடைந்தவர் 49 டாங்குகள் அழிக்கப்பட்டன 111 டாங்குகள் சேதமடைந்தன[10] |
ஹன்னூட் சண்டை (Battle of Hannut) என்பது இரண்டாம் உலகப் போரின் மேற்குப் போர்முனையில் நிகழ்ந்த ஒரு சண்டை. பெல்ஜியம் சண்டையின் ஒரு பகுதியான இச்சண்டையில் நாசி ஜெர்மனியின் படைகள் பெல்ஜியத்தைத் தாக்கியதால் பிரெஞ்சு முதன்மைப் படைகளை ஆர்டென் காட்டுப் பகுதியிலிருந்து நகர்ந்து பெல்ஜியத்தை நோக்கி விரைந்தன.
மே 10, 1940ல் ஜெர்மானியப் படைகள் பெல்ஜியம் மற்றும் பிரான்சின் மீது இருமுனைத் தாக்குதலைத் தொடங்கின. ஜெர்மனியின் போர் உபாயத் திட்டமான “மஞ்சள் திட்ட” (ஜெர்மன்: Fall Gelb) த்தின்படி பெல்ஜியம் மீதான தாக்குதல் திசை திருப்பும் தாக்குதலாகும். இதன் மூலம் பிரான்சின் முதன்மைப் படைப்பிரிவுகளை பெல்ஜியத்திற்கு வரவழைக்க வேண்டும். அவை பெல்ஜியத்தை அடைந்த பின், அவற்றின் பின்பகுதியில் ஆர்டென் காடு வழியாக ஜெர்மானிய ஆர்மி குரூப் ஏ முக்கியத் தாக்குதல் நடத்த வேண்டுமென்று மஞ்சள் திட்டம் வகுக்கப்பட்டிருந்தது. அதன்படி பிரெஞ்சு முதலாம் ஆர்மியை பெல்ஜியத்துக்கு இழுக்க மே 12ம் தேதி இரண்டு ஜெர்மானிய கவச டிவிசன்கள் பெல்ஜியத்தின் ஹன்னூட் பகுதியைத் தாக்கின. அவற்றை எதிர்கொள்ள பிரெஞ்சு முதலாம் ஆர்மி விரைந்து வந்து எதிர்த் தாக்குதல் நடத்தியது. இச்சண்டையிலும் மே 15ம் தேதி நடந்த ஜெம்புளூ சண்டையிலும் பிரெஞ்சுப் படைகளே வெற்றி பெற்றன. இவ்விரண்டில் ஜெம்புளூ சண்டையே முக்கியமானது. ஹன்னூட் சண்டை ஜெம்புளூச் சண்டையின் துணைச் சண்டையே (screening action). இச்சண்டைகள் நிகழ்ந்து கொண்டிருந்த போது, ஆர்டென் காட்டில் நடந்த முக்கிய ஜெர்மானிய தாக்குதல் வெற்றி பெற்றது. அங்கு பிரெஞ்சு அரண் நிலையை உடைத்து முன்னேறிய ஜெர்மானியப் படைகள் பத்து நாட்களில் ஆங்கிலக் கால்வாயை அடைந்து விட்டன. இதனால் பெல்ஜியத்துக்கு விரைந்த நேச நாட்டுப் படைகள் சுற்றி வளைக்கப்பட்டன. ஹன்னூட்டிலும் ஜெம்புளூவிலும் பிரெஞ்சுப் படைகள் அடைந்த வெற்றி பயனில்லாமல் போனது.
அடிக்குறிப்புகள்
[தொகு]- ↑ Frieser 2005, ப. 246-48
- ↑ Healy 2008, p. 38.
- ↑ Gunsburg 1992, ப. 240
- ↑ contributed lightly armed infantry units retreating from Dutch territory. Also committed the Dutch Air Force on few, ineffective and costly missions.Gunsburg 1992, ப. 216
- ↑ 5.0 5.1 Gunsburg 1992, ப. 210
- ↑ Gunsburg gives these numbers: 2nd DLM: 400 officers, 10,000 men, 300 AFVs
3rd DLM: some 400 officers,10,000 men, 300 AFVs - ↑ Battistelli & Anderson 2007, ப. 75
- ↑ Gunsburg gives these numbers, including Befehlspanzer: 3rd Panzer Division: 400 officers, 13,187 men, 343 tanks, 48 artillery pieces,
4th Panzer Division: 335 officers, 12,005 men, 331 tanks, 60 artillery pieces - ↑ Gunsburg 1992, ப. 236
- ↑ Gunsburg 1992, ப. 237
மேற்கோள்கள்
[தொகு]- Battistelli, Pier Paolo; Anderson, Duncan (2007), Panzer Divisions: The Blitzkrieg Years 1939–40, London: Osprey Publishing, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1846031465
- Danjou, Pascal (2007), HOTCHKISS H35 / H39, Ballainvilliers: Editions du Barbotin
- Danjou, Pascal (2006), SOMUA S 35, Ballainvilliers: Editions du Barbotin
- Frieser, Karl-Heinz (2005), The Blitzkrieg Legend: The 1940 Campaign in the West, Annapolis: Naval Institute Press, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-591142942
- Gunsburg, Jeffrey A. (April 1992), "The Battle of the Belgian Plain, 12–14 May 1940: The First Great Tank Battle", The Journal of Military History, 56 (2): 207–244
- Healy, Mark, Ed. Prigent, John &. Panzerwaffe: The Campaigns in the West 1940. Vol. 1. London. Ian Allan Publishing. 2008 பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-071103-240-8
- Jentz, Thomas L. (1998), Die deutsche Panzertruppe 1933–1942 Band 1, Wölfersheim-Berstadt: Podzun-Pallas Verla, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 3-7909-0623-9
- Prigent, John (2008), Panzerwaffe: The Campaigns in the West 1940, Vol. 1, London: Ian Allan Publishing, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-071103-240-8
- Ramspacher, E. (1979), Chars et Blindés Français, Paris: Charles-Lavauzelle
- Saint-Martin, Gérard (1998), L'Arme Blindée Française, Tome 1, Mai-juin 1940! Les blindés français dans la tourmente, Paris: Ed Economica, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 2-7178-3617-9
- Taylor, A. J. P.; Mayer, S. L. (1974), A History Of World War Two, London: Octopus Books, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-70640-399-1