பிளாக்காக் நடவடிக்கை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
ரோயர் முக்கோணம் சண்டை (பிளாக்காக் நடவடிக்கை)
இரண்டாம் உலகப் போரின் மேற்குப் போர்முனையின் பகுதி
Roer Triangle Map.jpg
ரோயர் முக்கோணம் வரைபடம், ஜனவரி 1945
நாள் ஜனவரி 14 - 27, 1945, 1945
இடம் நெதர்லாந்து மற்றும் ஜெர்மனி
நேசநாட்டு வெற்றி
பிரிவினர்
ஐக்கிய இராச்சியம் ஐக்கிய இராச்சியம்
கனடா கனடா
செருமனி நாசி ஜெர்மனி
தளபதிகள், தலைவர்கள்
மைல்ஸ் டெம்சி (2வது பிரிட்டானிய ஆர்மி) கஸ்டாவ் அடால்ஃப் வான் சாங்கன் (15வது ஜெர்மானிய ஆர்மி)
பலம்
1 கவச டிவிசன்
2 தரைப்படை டிவிசன்கள்
1 கமாண்டோ பிரிகேட்
2 தரைப்படை டிவிசன்கள்
2 வான்குடை ரெஜிமண்ட்கள்
1 கவச பட்டாலியன்

பிளாக்காக் நடவடிக்கை (Operation Blackcock) என்பது இரண்டாம் உலகப் போரின் மேற்குப் போர்முனையில் நிகழ்ந்த ஒரு போர் நடவடிக்கை. ஜனவரி 1945ல் நேசநாட்டுப் படைகள் நெதர்லாந்து, ஜெர்மனி எல்லைப் பகுதியிலிருந்த ரோயர் முக்கோணப் பகுதியினை நாசி ஜெர்மனியின் படைகளிடமிருந்து கைப்பற்றின. இது ரோயர் முக்கோணம் சண்டை என்றும் அறியப்படுகிறது.

1944ம் ஆண்டின் இறுதியில் கடந்த நான்காண்டுகளாக ஜெர்மானிய ஆக்கிரமிப்பிலிருந்த நெதர்லாந்தின் பெரும்பாலான பகுதிகள் நேசநாட்டுப் படைகளால் மீட்கப்பட்டுவிட்டன. ஒரு சிறு பகுதி மட்டும் ஜெனரல் கஸ்டாவ் அடால்ஃப் வான் சாங்கன் தலைமையிலான ஜெர்மானிய 15வது ஆர்மியின் கட்டுப்பாட்டில் இருந்தது. மியூசே ஆறு, சிக்ஃபிரைட் கோடு மற்றும் சேஃபலர் பீக் சிற்றாறு ஆகியவற்றுக்கு இடைப்பட்ட இப்பகுதி முக்கோண வடிவில் இருந்ததால் ரோயர்மண்டு முக்கோணம் என்றழைக்கப்பட்டது. 1945 ஜனவரி மாதம் நேசநாட்டுப் படைகள் இந்த முக்கோணப் பகுதியைக் கைப்பற்ற முயன்றன. பிரிட்டானிய 2வது ஆர்மி ஜனவரி 14 தேதி இந்தத் தாக்குதலை நிகழ்த்தியது. அடுத்த இரு வாரங்கள் இரு தரப்புக்கும் கடுமையான சண்டை நிகழ்ந்தது. நேச நாட்டுத் தாக்குதலைச் சமாளிக்க முடியாமல் மெல்ல ஜெர்மானியப் படைகள் பின்வாங்கி மியூசே ஆற்றைக் கடந்து ஜெர்மனிக்குள் சென்று விட்டன. ஜனவரி 27ம் தேதி இப்பகுதி முழுவதும் மீட்கப்பட்டுவிட்டது.