உள்ளடக்கத்துக்குச் செல்

கலே முற்றுகை (1940)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கலே முற்றுகை (1940)
பிரான்சு சண்டையின் (இரண்டாம் உலகப் போரின் மேற்குப் போர்முனையின்) பகுதி
நாள் மே 22-26, 1940
இடம் கலே, பிரான்சு
ஜெர்மானிய வெற்றி
பிரிவினர்
 ஐக்கிய இராச்சியம்


 பிரான்சு

செருமனி நாசி ஜெர்மனி
தளபதிகள், தலைவர்கள்
ஐக்கிய இராச்சியம் பிரிகேடியர் கிளாட் நிக்கல்சன் சரணடைந்தார் செருமனி மேஜர் ஜெனரல் ஃபெர்டினாண்ட் ஹால்
பலம்
~4,000 வீரர்கள்
40 டாங்குகள்
10வது பான்சர் (கவச) டிவிஷன்
இழப்புகள்
300 (மாண்டவர்)
200 (காயமடைந்தவர்)
3,500 கைப்பற்றப்பட்டவர்
750-800 (மாண்டவர்/காயமடைந்தவர்)

கலே முற்றுகை (Siege of Calais) என்பது இரண்டாம் உலகப் போரின் மேற்குப் போர்முனையில் நிகழ்ந்த ஒரு சண்டை. இது பிரான்சு சண்டையின் ஒரு பகுதியாகும். மே 22-26, 1940ல் நடந்த இம்முற்றுகையில் நாசி ஜெர்மனியின் படைகள் நேச நாட்டுப் படைகளின் எதிர்தாக்குதலை முறியடித்து கலே நகரத்தைக் கைப்பற்றின.

ஜெர்மானியப் படைகள் மே 10 ஆம் தேதி பெல்ஜியம் மற்றும் பிரான்சின் மீது தங்கள் தாக்குதலைத் தொடங்கின. நேச நாட்டுப் படைகளை பெல்ஜியத்தில் பொறி வைத்துப் பிடிப்பது ஜெர்மானியத் திட்டம். மே 15ல் செடான் சண்டையில் வெற்றியடைந்ததால் அவர்களால் மே 21ம் தேதி ஆங்கிலக் கால்வாயை அடைய முடிந்தது. இதனால் நேச நாட்டுப் படைகளை பெல்ஜியத்தில் சுற்றி வளைக்க முடிந்தது. பின்னர் ஜெனரல் ஹெயின்ஸ் குடேரியன் தலைமையிலான பத்தொன்பதாவது கவச கோர் வலதுபுறம் திரும்பி வடக்கு (பெல்ஜியத்தை) நோக்கி முன்னேறத் தொடங்கியது. இக்கோரில் மூன்று கவச டிவிஷன்களும் ஒரு எஸ். எஸ் காலாட்படை ரெஜிமண்ட்டும் இருந்தன. நேச நாட்டுப் படைகளைச் சுற்றியிருந்த ஜெர்மானியப் படைவளையம் இறுகத் தொடங்கியது. கலே ஆங்கிலக் கால்வாய் கடற்கரையோரம் அமைந்துள்ள ஒரு துறைமுகம். இதை குடேரியனின் படைகள் நெருங்கியவுடன் இங்கிலாந்திலிருந்து பிரிட்டனின் 3வது ராயல் டாங்கு ரெஜிமண்ட் அவர்களைத் தடுத்து நிறுத்த அனுப்பபட்டது. மே 23 இரு படைகளும் கலே நகருக்கு வெளியே மோதிக் கொண்டன. இதற்குள் பிரிட்டனின் 30வது எந்திர பிரிகேட் கலே நகரத்தை அடைந்து அதனை ஆக்கிரமித்தது. மே 23ல் குடேரியன் தனது 10வது கவச டிவிஷனுக்கு கலேயைத் தாக்கிக் கைப்பற்றும்படி ஆணையிட்டார். இரு நாட்கள் கடுமையான சண்டைக்குப் பின்னர் மே 26ல் கலேவிலிருந்த பிரித்தானிய படைகள் ஜெர்மானியரிடம் சரணடைந்தன.

"https://ta.wikipedia.org/w/index.php?title=கலே_முற்றுகை_(1940)&oldid=3924804" இலிருந்து மீள்விக்கப்பட்டது