கலே
Appearance
கலே (பிரெஞ்சு: Calais) பிரான்சில் உள்ள ஒரு துறைமுக நகரம். இது பிரான்சின் வடபகுதியில் ஆங்கிலக் கால்வாய் கடற்கரையோரமாக அமைந்துள்ளது. கலே ஆங்கிலக் கால்வாய் மிகவும் குறுகலாக உள்ள இடத்தில் அமைந்துள்ளது. கலேவுக்கும் கால்வாய்க்கு அக்கரையிலுள்ள இங்கிலாந்து நகரம் டோவருக்கும் இடையே 34 கி. மீ இடைவெளி தான் உள்ளது. இந்நகரின் மக்கள் தொகை 125,584 (1999).