பேச்சு:அன்னூட் சண்டை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

சோடாபாட்டில், இதனை அன்னூட் சண்டை என்றே கூறலாமே. கட்டாயம் காற்றொலி வரத்தான் வேண்டும் என்று நினைத்தால் ஃகன்னூட் சண்டை என்று கூறலாம். அனுமான், அரி, அரன், இம்சை, இந்தி என்றெல்லாம் எழுதுவதில்லையா? அதுபோலத்தானே இதுவும். இது ஏதோ கிரந்த விலக்கம் என்று மட்டும் கருதாதீர்கள். எளிமை என்பது தமிழின் வேரான தன்மை. தமிழின் தனித்தன்மைக்கும் வலுவுக்கும் அதன் எளிமை அடிப்படையானது. மூச்சை வீணாக்காமல் ஒலிப்பது என்றும் சிலர் கூறுவர். அன்னூட் என்பதே போதும் என்று கருதுகிறேன். பலமுறை உங்களுக்குக் கூறி உங்களைச் சங்கடப்படுத்துகின்றேனோ என்றும் நினைக்கின்றேன். ஆனால் பொதுநலம் கருதி சொல்லுவது தேவை என நினைக்கின்றேன் (ஆகவே மன்னிக்கவும்). தமிழுக்கு எதிராகப் பேசுவோர் "ஆ மொழி என்பது "வெறும்" கருத்துகளைப் பரிமாறும் ஓர் ஊர்தி போன்றதுதானே!" என்று அறைகிறார்கள், ஆனால் அப்படியென்றால் தமிழ் முறைப்படியே எழுதலாம்தானே என்பதை அவர்கள் எண்ணுவதில்லை. ஒலிப்புக் குழப்பம், ஒலிப்புத் துல்லியம் என்பவை மொழிகளுக்கு இடையே பொதுவாக இருக்க இயலாது (அனைத்துலக ஒலியன் நெடுங்களைக்கை இட்டே எழுதினாலும்!!) ஏனெனில், அவற்றின் (ஒலிப்புகளின்) நுணுக்கங்கள் அளவிறந்தன. இவற்றை மிக மிக நன்குணர்ந்தவர்கள் தமிழ் முன்னோர் (இது வெற்றுரை அல்ல!!). இன்றுள்ள தொழில்நுட்பத்தால், இவற்றை (சொல் தொடர்பாடுகளை) மிக எளிதாக ஈடுநிறுத்திப் புரிந்துகொள்ளலாம். நான் தமிழில் தொலைபேசியில் ஒரு முனையில் பேசினால், மறுமுனையில் கேட்கும் கொரியர் அவர் மொழியிலேயே கேட்கும் காலம் கனிந்து வரும். எனவே நாம் நம் மொழியில் நமக்காக மட்டும், நம் ஒழுக்கப்படி எழுத முனைவோம். நீங்கள் அருள்கூர்ந்து இதனை எண்ணிப்பார்க்க வேண்டுகிறேன். --செல்வா 13:31, 8 அக்டோபர் 2010 (UTC)

நீங்கள் சொல்வது எனக்கு சங்கடமெல்லாம் இல்லை செல்வா, வேகமாக எழுதும்போது நான் எப்படி ஒலிக்கிறேனோ அப்படியே எழுதுகிறேன். கிரந்த எழுத்தைப்பற்றி எனக்கென்று எந்த நிலைப்பாடும் கிடையாது. எங்கு எழுதுகிறோமோ அங்குள்ள பொது பரிந்துரைகளை ஏற்று எழுதுவது தான் அறம். அதற்காகவே நானும் முயல்கிறேன். த. விக்கியில் எழுதத் தொடங்கிய பின் என் எழுத்தில் கிரந்தம் குறைந்து விட்டது. ஸ் எழுத்துகள் வெகுவாக குறைந்துள்ளன, அடுத்து ஷ வும் எழுதும் போது ச வாக வருகிறது, ஹ வும் ஜ வும் இன்னும் அப்படியே வருகின்றன. மெய்யெழுத்தில் வார்த்தைகளைத் தொடங்கும் வழக்கமும் போய்விட்டது. ஹ கூட இந்தி/இந்து போன்ற பொதுப் பயன்பாட்டு வார்த்தைகளில் விலகி விடுகிறது. புது வார்த்தைகளில் அப்படியே வருகிறது. இன்னும் சில காலத்தில் அவையும் காணாமல் போய்விடும். என் கட்டுரைகளை சிறிது காலம் கழித்து (after achieving the recommended strategic distance) ஒரு முறை மீண்டும் படித்து copy edit செய்வது என் வழக்கம், அப்போது இவற்றை நானே எடுத்துவிடுவேன். சிறிது காலத்தில் என் எழுத்து முழுதும் த. விக்கி மொழிநடைக் கையேட்டின்படியே இருக்கும். இப்போது எழுதும்போது என் கவனம் எளிய தமிழ் நடையிலும், சரியான கலைச்சொற்களைப் பயன்படுத்துவதிலும், இலக்கண, எழுத்துப்பிழைகள் இல்லாமல் எழுதுவதிலிருப்பதால் ஒலிப்புப் பரிந்துரையை முழுதாக செயல் படுத்த முடிவதில்லை. தற்ப்பொது செய்யும் உரைதிருத்தங்களிலும் கிரந்தம் தனித்து தெரிவதில்லை. ஆனால் இந்நிலை சீக்கிரம் மாறி விடும்.
தமிழர்கள் ஏற்கனவே கிரந்தம் வழி அறிந்த வார்த்தைகளை மட்டும் (தேடுபவர்களுக்காக மட்டும் - அதுவும் வழிமாற்றுகள் தேடுபொறிகளில் சிக்க வைக்க முயன்று வருகிறேன். அது நிகழ்ந்து விட்டால் அதுவும் தேவையில்லை) ஒரு இடத்தில் அடைப்பில் கிரந்தம் கொடுக்கிறேன். பிற இடங்களில் மாற்றி விடுகிறேன்.
ஹன்னூட் மாதிரி புது வார்த்தைகளில் தேடுபவர்கள் யாரும் இருக்கப் போவதில்லையென்பதால் இங்கு அடைப்புகளில் கூட கிரந்தம் தேவையில்லை. எல்லாம் அடுத்த ரவுண்ட் உரைதிருத்ததில் காணாமல் போய்விடும்.

--சோடாபாட்டில் 13:59, 8 அக்டோபர் 2010 (UTC)

மிக்க நன்றி சோடாபாட்டில். நீங்கள் கூறுவது மகிழ்ச்சி அளிக்கின்றது. --செல்வா 14:06, 8 அக்டோபர் 2010 (UTC)
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:அன்னூட்_சண்டை&oldid=608502" இருந்து மீள்விக்கப்பட்டது