வெர்ரியர் முகடு சண்டை
வெர்ரியர் முகடு சண்டை | |||||||
---|---|---|---|---|---|---|---|
அட்லாண்டிக் மற்றும் சுபிரிங் நடவடிக்கைகளின் பகுதி | |||||||
வெர்ரியர் முகடைத் தாக்கும் கனடிய வீரர்கள் (ஜூலை 25, 1944) |
|||||||
|
|||||||
பிரிவினர் | |||||||
கனடா | ஜெர்மனி | ||||||
தளபதிகள், தலைவர்கள் | |||||||
கை சிமண்ட்ஸ் சார்லஸ் ஃபொக்ஸ் | குந்தர் வோன் குளூக் செப்ப் டைட்ரிக் கர்ட் மேயர் வில்லெம் பிட்ரிக் |
||||||
பலம் | |||||||
2 காலாட்படை டிவிசன்கள், 1 கவச பிரிகேட் | 2 கவச டிவிசன்கள், 1 கவச டிவிசனின் பகுதி 1 காலாட்படை டிவிசன் |
||||||
இழப்புகள் | |||||||
800 மாண்டவர் 2,000 காயமடைந்தவர் / போர்க்கைதிகள் | தெரியவில்லை |
வெர்ரியர் முகடு சண்டை (Battle of Verrières Ridge) என்பது இரண்டாம் உலகப் போரின் மேற்குப் போர்முனையில் நிகழ்ந்த ஒரு சண்டை. இது ஓவர்லார்ட் நடவடிக்கையின் ஒரு பகுதியாகும். நாசி ஜெர்மனியின் ஆக்கிரமிப்பில் இருந்த பிரான்சின் கான் நகரைக் கைப்பற்ற நேச நாட்டுப் படைகள் மேற்கொண்ட முயற்சியின் ஒரு பகுதியாக இந்நடவடிக்கை நடைபெற்றது.
ஜூன் -ஜூலை, 1944ல் கான் நகரைக் கைப்பற்ற நேச நாட்டுப் படைகள் மேற்கொண்ட தொடர் முயற்சிகளில் இறுதி கட்டத்தில் நடைபெற்றது வெர்ரியர் முகடு சண்டை. இது அட்லாண்டிக் நடவடிக்கை (ஜூலை 18 -21) மற்றும் சுபிரிங் நடவடிக்கை (ஜூலை 25-27) என்ற இரு போர் நடவடிக்கைகளின் பகுதியாகக் கருதப்படுகிறது. ஜூலை இறுதியில் கான் நகரின் பெரும் பகுதி நேச நாட்டுப் படைகளின் வசமாகியிருந்தது. எஞ்சியிருந்த ஜெர்மானியப் படைப்பிரிவுகள் கானிலிருந்து மெதுவாகப் பின்வாங்கிச் சென்றன. அவற்றைப் பின் தொடர்ந்த பிரிட்டானிய மற்றும் கனடியப் படைகள் அடுத்து வெர்ரியர் முகட்டை கைப்பற்ற முயன்றன. கானிலிருந்து ஃபலாய் செல்லும் வழியிலிருந்த இந்த முகட்டை ஜெர்மானியப் படைகள் வெகுவாக பலப்படுத்தியிருந்தன. ஆறு நாட்கள் நேசநாட்டுப் படைகள் இந்த முகட்டைக் கைப்பற்ற கடும் முயற்சி செய்தன. ஆனால் அவர்களின் தொடர் தாக்குதலை, ஜெர்மானியப் படைகளின் பாதுகாப்பு போர் முறைமையும் (defensive war doctrine), ஜெர்மானிய கவச டிவிசன்களை எதிர்த்தாக்குதல்களும் முறியடித்து விட்டன.
இத்தாக்குதலில் நேசநாட்டுப் படைகளுக்குப் பெரும் இழப்புகள் ஏற்பட்டன. குறிப்பாக 1வது கனடிய ஆர்மிக்கு உட்பட்ட படைப்பிரிவுகளில் டியப் திடீர்த்தாக்குதலுக்குப் பிறகு ஒரே நாளில் அதிக அளவு இழப்பு ஏற்பட்டது இத்தாக்குதலில் தான். இதில் ஜெர்மானியப் படைகளுக்குப் பெரும் இழப்புகள் ஏற்பட்டாலும் மேல்நிலை உத்தியளவில் இத்தாக்குதல் தேவையற்றது எனபதால் இந்நாள் வரை இது சர்ச்சைக்குரியதாக உள்ளது. வெர்ரியர் முகட்டைக் கைப்பற்ற முடியவில்லையென்றாலும், அதே நேரத்தில் அமெரிக்கப் படைகள் தொடங்கிய கோப்ரா நடவடிக்கையைத் தடுக்க, இம்முகட்டில் நிறுத்தப்பட்டிருந்த கவச டிவிசன்களை அமெரிக்க முன்னேற்றத்தைத் தடுக்க அனுப்ப வேண்டிய நிலைக்கு ஜெர்மானியத் தளபதிகள் தள்ளப்பட்டனர். இதனால் வெர்ரியர் முகட்டில் பலவீனமடைந்த ஜெர்மானிய நிலைகளை ஆகஸ்ட் 8ம் தேதி நடந்த டோட்டலைஸ் நடவடிக்கையில் நேச நாட்டுப் படைகள் எளிதில் கைப்பற்றி விட்டன.