செப்பலின் நடவடிக்கை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

செப்பலின் நடவடிக்கை (Operation Zeppelin) என்பது இரண்டாம் உலகப் போரின் மேற்குப் போர்முனையில் நிகழ்ந்த ஒரு ஏமாற்று நடவடிக்கை (deception operation). இது, நாசி ஜெர்மனியின் ஆக்கிரமிப்பிலிருந்த மேற்கு ஐரோப்பா மீதான படையெடுப்பு நிகழும் இடத்தை ஜெர்மானிய போர் உத்தியாளர்கள் கணிக்காது இருக்கவும், அவர்களது கவனத்தை வேறு இடங்களின் மீது திசை திருப்பவும் நேச நாடுகளால் மேற்கொள்ளப்பட்ட பாடிகார்ட் நடவடிக்கையின் ஒரு பகுதியாகும்.

இந்த நடவடிக்கையில் மத்தியதரைக் கடல் பகுதியில் ஒரு நேச நாட்டு கடல்வழிப் படையெடுப்பு நிகழப்போகிறது என்று ஜெர்மானியர்களை நம்பவைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. கிரீட் தீவு, மேற்கு கிரீஸ், ரொமேனியக் கருங்கடல் கடற்கரை ஆகிய பகுதிகளில் ஏதேனும் ஒன்றில் படையெடுப்பு நிகழலாம் என்று அறிகுறிகள் உண்டாக்கப்பட்டன.

"https://ta.wikipedia.org/w/index.php?title=செப்பலின்_நடவடிக்கை&oldid=1358614" இலிருந்து மீள்விக்கப்பட்டது