மார்ட்டி ஆத்திசாரி
மார்ட்டி ஆத்திசாரி Martti Ahtisaari | |
---|---|
![]() | |
பின்லாந்தின் 10வது குடியரசுத் தலைவர் | |
பதவியில் மார்ச்சு 1, 1994 – மார்ச்சு 1, 2000 | |
முன்னவர் | மவுனோ கொய்விஸ்தோ |
பின்வந்தவர் | தர்யா ஹலோனென் |
தான்சானியா, சாம்பியா, சோமாலியா, மொசாம்பிக் நாடுகளுக்கான பின்லாந்து தூதுவர் | |
பதவியில் 1973–1977 | |
தனிநபர் தகவல் | |
பிறப்பு | சூன் 23, 1937 பின்லாந்து |
தேசியம் | ![]() |
அரசியல் கட்சி | பின்லாந்து சமூக மக்களாட்சிக் கட்சி |
வாழ்க்கை துணைவர்(கள்) | ஏவா அஹ்திசாரி |
மார்ட்டி ஒய்வா கலெவி ஆத்திசாரி (Martti Oiva Kalevi Ahtisaari, கேட்க (உதவி·தகவல்), பிறப்பு: ஜூன் 23, 1937) என்பவர் பின்லாந்தின் முன்னாள் குடியரசுத் தலைவரும் (1994–2000), ஐக்கிய நாடுகள் அமைதித் தூதுவரும் ஆவார். 2008 இல் கொசோவோ பேச்சுக்களில் ஐ. நா சார்பில் முக்கிய பொறுப்பு வகித்தார். கிட்டத்தட்ட முப்பதாண்டுகளாக பல கண்டங்களிலும் அமைதிப் பேச்சுக்களில் ஈடுபட்டமைக்காகவும் கொசோவோ, வட அயர்லாந்து உட்பட பல பன்னாட்டுப் பிரச்சினைகளில் தலையிட்டு அமைதியை ஏற்படுத்தியமைக்காகவும், 2008 ஆம் ஆண்டு இவருக்கு அமைதிக்கான நோபல் பரிசை வழங்கினர்[1].