பருத்தித்துறை பிரதேச சபை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
பருத்தித்துறை பிரதேச சபை
Point Pedro Divisional Council logo.jpg
வகை
வகை
உள்ளாட்சி
தலைமை
தலைவர்
பூபாலசிங்கம் சஞ்சீவன், த. தே. கூ
யூலை 2011
துணைத் தலைவர்
மாணிக்கம் லோகசிங்கம், த. தே. கூ
யூலை 2011
உறுப்பினர்கள்9
தேர்தல்கள்
அண்மைய தேர்தல்
இலங்கை உள்ளாட்சித் தேர்தல்கள், 2011

பருத்தித்துறை பிரதேச சபை (Point Pedro Divisional Council) இலங்கையின் யாழ்ப்பாண மாவட்டத்தில் அமைந்துள்ள உள்ளூராட்சி அமைப்புக்களுள் ஒன்று ஆகும். பருத்தித்துறை நகரசபை, வல்வெட்டித்துறை நகரசபை ஆகியவற்றுக்குள் அடங்கும் பகுதிகளைத் தவிர்த்து, பருத்தித்துறை பிரதேச செயலாளர் பிரிவில் அடங்கும் பகுதிகள் இப்பிரதேச சபைக்குள் அடங்குகின்றன. இதன் மொத்தப் பரப்பளவு 185.00 சதுர மைல்கள். இதன் வடக்கில் கடலும்; கிழக்கில் பருத்தித்துறை நகரசபை, கடல் என்பனவும்; தெற்கில் முல்லைத்தீவு மாவட்டம், யாழ்ப்பாண நீரேரி ஆகியனவும்; மேற்கில் வடமராட்சி தென்மேற்கு பிரதேச சபை, சாவகச்சேரி பிரதேச சபை, கிளிநொச்சி மாவட்டம் என்பனவும் எல்லைகளாக உள்ளன. இச்சபைக்கான உறுப்பினர்களும், சபையின் தலைவரும் நேரடியாக மக்களால் தெரிவுசெய்யப்படுகின்றனர். பருத்தித்துறை பிரதேச சபையில் 9 உறுப்பினர்கள் உள்ளனர். இந்த 9 உறுப்பினர்களும் விகிதாசார பிரதிநிதித்துவ முறையில் இடம்பெறும் தேர்தல் ஊடாகத் தெரிவு செய்யப்படுகின்றனர்.

வட்டாரங்கள்[தொகு]

பருத்தித்துறை பிரதேச சபைப் பகுதி 10 வட்டாரங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இவ்வட்டாரங்களின் இலக்கம், பெயர், அவற்றில் அடங்கியுள்ள கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் பற்றிய விபரங்களைக் கீழேயுள்ள அட்டவணையில் காணலாம்.[1][2]

வட்டாரங்கள் கிராம உத்தியோகத்தர் பிரிவுகள்
இல. பெயர் இல. பெயர்
1 கெருடாவில் J385 கெருடாவில் தெற்கு (பகுதி)
J387 கெருடாவில் கிழக்கு (பகுதி)
2 பொலிகண்டி J394 பொலிகண்டி கிழக்கு
J396 அல்வாய் மேற்கு
J397 அல்வாய் வடமேற்கு
3 அல்வாய் J398 அல்வாய் வடக்கு மத்தி
J399 வியாபாரிமூலை
J400 அல்வாய் வடக்கு
4 புலோலி மேற்கு J410 புலோலி மேற்கு
J411 புலோலி தென்மேற்கு
J412 புலோலி வடமேற்கு
5 புலோலி கிழக்கு J406 கற்கோவளம்
J408 புலோலி வடகிழக்கு
J413 புலோலி கிழக்கு
6 வல்லிபுரக் கோயில் J414 புலோலி தெற்கு
J415 மந்திகை
J416 வல்லிபுரம்
J417 துன்னாலை வடக்கு
7 குடத்தனை J418 மணற்காடு
J419 குடத்தனை
J420 குடத்தனை கரையூர்
J421 பொற்பதி
J422 அம்பன்
8 நாகர்கோயில் - செம்பியன்பற்று J423 நாகர்கோயில் கிழக்கு
J424 நாகர்கோயில் மேற்கு
J425 நாகர்கோயில் தெற்கு
J426 செம்பியன்பற்று வடக்கு
J427 செம்பியன்பற்று தெற்கு
J428 மதுரங்கேணி
9 உடுத்துறை J429 வத்திராயன்
J430 உடுத்துறை
J431 ஆழியவளை
10 முள்ளியான் J432 வெற்றிலைக்கேணி
J433 முள்ளியான்
J434 பொக்கறுப்பு
J435 சுண்டிக்குளம்

தேர்தல் முடிவுகள்[தொகு]

1998 உள்ளாட்சித் தேர்தல்[தொகு]

29 சனவரி 1998 இல் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள்:[3][4]

கூட்டணிகளும் கட்சிகளும் வக்குகள் % இடங்கள்
  ஈழ மக்கள் சனநாயகக் கட்சி 2,208 43.51% 5
  ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி 1,459 28.75% 2
  சனநாயக மக்கள் விடுதலை முன்னணி (புளொட்) 859 16.93% 1
  தமிழீழ விடுதலை இயக்கம் 549 10.82% 1
செல்லுபடியான வாக்குகள் 5,075 100.00% 9
செல்லாத வாக்குகள் 1,177
மொத்த வாக்குகள் 6,252
பதிவில் உள்ள வாக்காளர்கள் 29,929
வாக்களித்தோர் 20.89%

2011 உள்ளாட்சித் தேர்தல்[தொகு]

23 யூலை 2011 இல் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள்:[5]

கூட்டணிகளும் கட்சிகளும் வக்குகள் % இடங்கள்
  தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு * 8,938 73.56% 7
  ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணி ** 3,022 24.87% 2
  ஐக்கிய தேசியக் கட்சி 133 1.09% 0
சுயேச்சை 57 0.47% 0
செல்லுபடியான வாக்குகள் 12,150 100.00% 9
செல்லாத வாக்குகள் 1,031
மொத்த வாக்குகள் 13,181
பதிவில் உள்ள வாக்காளர்கள் 25,375
வாக்களித்தோர் 51.94%

மேற்கோள்கள்[தொகு]

  1. Ward Map for Point Pedro Pradeshiya Sabha Section 1 – Jaffna District[தொடர்பிழந்த இணைப்பு]
  2. Ward Map for Point Pedro Pradeshiya Sabha Section 2 – Jaffna District[தொடர்பிழந்த இணைப்பு]
  3. "Election commissioner releases results". TamilNet. 30 January 1998.
  4. D.B.S. Jeyaraj (15 February 1998). "The Jaffna Elections". Tamil Times XVII (2): 12–15. பன்னாட்டுத் தர தொடர் எண்:0266-4488. http://www.noolaham.org/wiki/index.php?title=Tamil_Times_1998.02&uselang=en. பார்த்த நாள்: 24 மார்ச் 2017. 
  5. "Local Authorities Election - 23.07.2011 Jaffna District Point Pedro Pradeshiya Sabha". Department of Elections, Sri Lanka.[தொடர்பிழந்த இணைப்பு]