உள்ளடக்கத்துக்குச் செல்

வலிகாமம் மேற்கு பிரதேச சபை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வலிகாமம் மேற்கு பிரதேச சபை
வகை
வகை
தலைமை
தலைவர்
சண்முகநாதன் ஜெயந்தன், இலங்கைத் தமிழரசுக் கட்சி
19 சூன் 2025 முதல்
பிரதித் தலைவர்
கந்தையா இலங்கேசுவரன், இலங்கைத் தமிழரசுக் கட்சி
19 சூன் 2025 முதல்
கட்டமைப்பு
உறுப்பினர்கள்26
அரசியல் குழுக்கள்
அரசு (10)

எதிர் (16)

ஆட்சிக்காலம்
4 ஆண்டுகள்
தேர்தல்கள்
கலப்பு முறைத் தேர்தல்
அண்மைய தேர்தல்
6 மே 2025

வலிகாமம் மேற்கு பிரதேச சபை (Valikamam West Divisional Council) இலங்கையின் யாழ்ப்பாண மாவட்டத்தில் அமைந்துள்ள உள்ளூராட்சி அமைப்புக்களுள் ஒன்று ஆகும். வலிகாமம் மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் அடங்கும் பகுதிகள் இப்பிரதேச சபைக்குள் அடங்குகின்றன. இதன் மொத்தப் பரப்பளவு 47.30 சதுர மைல்கள். இதன் வடக்கில் கடலும்; கிழக்கில் வலிகாமம் தென்மேற்கு பிரதேச சபையும்; தெற்கிலும் மேற்கிலும் நீரேரியும் எல்லைகளாக உள்ளன. இச்சபைக்கான உறுப்பினர்கள் நேரடியாக மக்களால் தெரிவுசெய்யப்படுகின்றனர். 2018 ஆம் ஆண்டு முதல் கலப்பு முறைத் தேர்தல் அறிமுகப்படுத்தப்பட்டது. இம்முறைப்படி, வலிகாமம் மேற்கு பிரதேச சபைக்கு 15 உறுப்பினர்கள் வட்டாரங்களில் இருந்து நேரடியாகவும், 11 உறுப்பினர்கள் விகிதாசாரப் பிரதிநிதித்துவத் தேர்தல் முறையிலும் மொத்தம் 26 உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்.[1][2]

வட்டாரங்கள்

[தொகு]

26ம் இலக்க 2015 ஆகத்து 21 அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலின் மூலம் உள்ளுராட்சி அதிகார சபைகள் தேர்தல் கட்டளை சட்டத்தின் 3ஆவது பிரிவின் கீழ் உள்ளுராட்சி அதிகார சபையின் ஆளுகைப் பிரதேசத்தின் எல்லைகள் வரையறை செய்யப்பட்டுள்ளன. இவ்வாறு வரையறை செய்யப்பட்டுள்ள வலிகாமம் மேற்கு பிரதேச சபையின் ஆளுகைப் பிரதேசம் 15 வட்டாரங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. வலிகாமம் மேற்கு பிரதேச சபையின் கீழ் வலிகாமம் மேற்கு பிரதேச செயலாளர் பிரிவின் நிருவாக எல்லைகள் உள்ளடங்குகின்றன.[3] இவ்வட்டாரங்களின் இலக்கம், பெயர், அவற்றில் அடங்கியுள்ள கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் பற்றிய விபரங்களைக் கீழேயுள்ள அட்டவணையில் காணலாம்.[4]

வட்டாரங்கள்கிராம உத்தியோகத்தர் பிரிவுகள்
இல.பெயர்இல.பெயர்
1சுழிபுரம் மேற்கும் மத்தியும்J172சுழிபுரம் மேற்கு
J173சுழிபுரம் மத்தி
2சுழிபுரம் கிழக்குJ174சுழிபுரம் கிழக்கு
3பண்ணாகம்-பனிப்புலம்J175பண்ணாகம்
J176பனிப்புலம்
4பொன்னாலைJ170பொன்னாலை
5தொல்புரம்J168தொல்புரம் கிழக்கு
J169தொல்புரம் மேற்கு
6வட்டுக்கோட்டை கிழக்கு - சித்தங்கேணிJ157வட்டுக்கோட்டை கிழக்கு
J177சித்தங்கேணி
7சங்கானை மேற்கும் மத்தியும்J179சங்கானை மேற்கு
J181சங்கானை மத்தி
8மூளாய்J171மூளாய்
9வட்டுக்கோட்டை வடக்கும் மேற்கும்J158வட்டுக்கோட்டை வடக்கு
J167வட்டுக்கோட்டை மேற்கு
10சங்கானை கிழக்கும் தெற்கும்J178சங்கானை கிழக்கு
J180சங்கானை தெற்கு
11சங்கரத்தைJ159சங்கரத்தை
12வட்டுக்கோட்டை தெற்கும் தென்மேற்கும்J165வட்டுக்கோட்டை தெற்கு
J166வட்டுக்கோட்டை தென்மேற்கு
13அராலி மேற்கும் மத்தியும்J160அராலி மேற்கு
J161அராலி மத்தி
14அராலி தெற்குJ162அராலி தெற்கு
15அராலி கிழக்கும் வடக்கும்J163அராலி கிழக்கு
J164அராலி வடக்கு

தேர்தல் முடிவுகள்

[தொகு]

1998 உள்ளூராட்சித் தேர்தல்

[தொகு]

29 சனவரி 1998 இல் இடம்பெற்ற உள்ளூராட்சித் தேர்தல்:[5][6]

கூட்டணிகளும் கட்சிகளும்வாக்குகள்%இடங்கள்
 ஈழ மக்கள் சனநாயகக் கட்சி 3,14649.74%8
 சனநாயக மக்கள் விடுதலை முன்னணி (புளொட்) 2,35837.28%4
 தமிழீழ விடுதலை இயக்கம் 4947.81%1
 ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி 3275.17%1
செல்லுபடியான வாக்குகள் 6,325100.00%14
செல்லாத வாக்குகள் 1,307
அளிக்கப்பட்ட மொத்த வாக்குகள் 7,632
பதிவு செய்யப்பட்ட வாக்காளர்கள் 37,746
வாக்குவீதம் 20.22%

2011 உள்ளூராட்சித் தேர்தல்

[தொகு]

23 யூலை 2011 உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள்:[7]

கூட்டணிகளும் கட்சிகளும்வாக்குகள்%இடங்கள்
 தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு * 12,11777.78%11
 ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணி ** 3,04119.52%3
 ஐக்கிய தேசியக் கட்சி 4202.70%0
செல்லுபடியான வாக்குகள் 15,578100.00%14
செல்லாத வாக்குகள் 2,058
அளிக்கப்பட்ட மொத்த வாக்குகள் 17,636
பதிவு செய்யப்பட்ட வாக்காளர்கள் 30,214
வாக்குவீதம் 58.37%
* ஈபிஆர்எல்எஃப் (சு), இதக, புளொட், டெலோ, தவிகூ ஆகிய கட்சிகளை உள்ளடக்கியது.
** ஈபிடிபி, இசுக ஆகிய கட்சிகளை உள்ளடக்கியது.

2018 உள்ளூராட்சித் தேர்தல்

[தொகு]

2018 பெப்ரவரி 10 இல் நடைபெற்ற உள்ளூராட்சித் தேர்தல்களில் முதல் தடவையாகக் கலப்பு முறைத் தேர்தல் அறிமுகப்படுத்தப்பட்டது. இம்முறைப்படி, 15 உறுப்பினர்கள் வட்டாரங்களில் இருந்து நேரடியாகவும், 11 உறுப்பினர்கள் விகிதாசாரப் பிரதிநிதித்துவத் தேர்தல் முறையிலும் மொத்தம் 26 உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். தேர்தல் முடிவுகள் வருமாறு:[3]

கூட்டணிகளும்
கட்சிகளும்
வாக்குகள்%வட்டாரங்களில்
இருந்து
தேர்ந்தெடுக்கப்பட்ட
உறுப்பினர்கள்
பெற்ற
வாக்குகளுக்குரிய
கூடுதல் உறுப்பினர்கள்
உரித்தான முழு
உறுப்பினர்களின்
எண்ணிக்கை
 தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு * 8,11934.44%909
 தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி 5,63823.91%336
 ஈழ மக்கள் சனநாயகக் கட்சி 3,51114.89%134
 ஐக்கிய தேசியக் கட்சி 3,10913.19%213
 இலங்கை சுதந்திரக் கட்சி 1,2795.42%011
 தமிழர் விடுதலைக் கூட்டணி** 2240.95%000
 இலங்கை பொதுசன முன்னணி 1980.84%000
 மக்கள் விடுதலை முன்னணி 910.39%000
செல்லுபடியான வாக்குகள் 23,577100.00%151025
செல்லாத வாக்குகள் 506
அளிக்கப்பட்ட மொத்த வாக்குகள் 24,083
பதிவு செய்யப்பட்ட வாக்காளர்கள் 34,292
வாக்குவீதம் 70.24%
* இதக, புளொட், டெலோ ஆகிய கட்சிகளை உள்ளடக்கியது.
** தவிகூ, ஈபிஆர்எல்எஃப் (சு) ஆகிய கட்சிகளை உள்ளடக்கியது.

வலிகாமம் மேற்கு பிரதேச சபையின் தலைவராக தருமலிங்கம் நடனேந்திரன் (அராலி தெற்கு, இலங்கைத் தமிழரசுக் கட்சி), துணைத் தலைவராக வேதையா சச்சிதானந்தன் (மூளாய், இலங்கைத் தமிழரசுக் கட்சி) ஆகியோர் தெரிவு செய்யப்பட்டனர்.[3]

2025 உள்ளாட்சித் தேர்தல்

[தொகு]

2025 மே 6 இல் நடைபெற்ற உள்ளூராட்சித் தேர்தல் முடிவுகள்:[8] 15 உறுப்பினர்கள் வட்டாரங்களில் இருந்து நேரடியாகவும், 11 உறுப்பினர்கள் விகிதாசாரப் பிரதிநிதித்துவத் தேர்தல் முறையிலும் மொத்தம் 26 உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

கூட்டணிகளும்
கட்சிகளும்
வாக்குகள்%வட்டாரங்களில்
இருந்து
தேர்ந்தெடுக்கப்பட்ட
உறுப்பினர்கள்
பெற்ற
வாக்குகளுக்குரிய
கூடுதல் உறுப்பினர்கள்
உரித்தான முழு
உறுப்பினர்களின்
எண்ணிக்கை
 இலங்கைத் தமிழரசுக் கட்சி 7,36434.78%10010
 அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் 4,98223.53%336
 தேசிய மக்கள் சக்தி 3,40716.09%044
சனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணி 2,0269.57%112
 ஈழ மக்கள் சனநாயகக் கட்சி 1,3866.55%022
 ஐக்கிய தேசியக் கட்சி 8093.82%101
 சுயேச்சைக் குழு 7023.32%011
 ஐக்கிய மக்கள் சக்தி 4992.36%000
செல்லுபடியான வாக்குகள் 21,175100.00%151126
செல்லாத வாக்குகள் 506
அளிக்கப்பட்ட மொத்த வாக்குகள் 21,681
பதிவு செய்யப்பட்ட வாக்காளர்கள் 38,756
வாக்குவீதம் 55.94%

வலிகாமம் மேற்கு பிரதேச சபையின் தலைவராக சண்முகநாதன் ஜெயந்தன் (இலங்கைத் தமிழரசுக் கட்சி), துணைத் தலைவராக கந்தையா இலங்கேஸ்வரன் (இலங்கைத் தமிழரசுக் கட்சி) ஆகியோர் தெரிவு செய்யப்பட்டனர்.[9]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "LG polls cost to hit Rs. 4 b". Daily FT. 5-12-2017. http://www.ft.lk/front-page/LG-polls-cost-to-hit-Rs--4-b/44-644557. பார்த்த நாள்: 23-12-2017.
  2. "Amended Local Government Elections Bill approved in Parliament". டெய்லி நியூசு. 25-08-2017.
  3. 1 2 3 "Local Authorities Election - 10.02.2018" (PDF). இலங்கை தேர்தல் திணைக்களம். Archived (PDF) from the original on 12 May 2025. Retrieved 7 June 2025.
  4. "Ward Map for Valikamam North Pradeshiya Sabha – Jaffna District" (PDF). Archived from the original (PDF) on 2017-09-18. Retrieved 2017-03-22.
  5. "Election commissioner releases results". TamilNet. 30 January 1998.
  6. D.B.S. Jeyaraj (15 February 1998). "The Jaffna Elections". Tamil Times XVII (2): 12–15. பன்னாட்டுத் தர தொடர் எண்:0266-4488. http://www.noolaham.org/wiki/index.php?title=Tamil_Times_1998.02&uselang=en. பார்த்த நாள்: 24 மார்ச் 2017.
  7. "Local Authorities Election - 2011" (PDF). இலங்கை தேர்தல் திணைக்களம். Archived (PDF) from the original on 21 December 2018. Retrieved 18 June 2025.
  8. "Local Authorities Election - 6.05.2025 Jaffna District Valikamam West Pradeshia Sabha" (PDF). Department of Elections, Sri Lanka. Archived (PDF) from the original on 27 May 2025. Retrieved 27 May 2025.
  9. "வலிகாமம் மேற்கு பிரதேச சபையின் தவிசாளராக ஜெயந்தன் தெரிவு". ஐபிசி தமிழ். Archived from the original on 19 சூன் 2025. Retrieved 19 சூன் 2025.