அராலி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அராலி
நகரம்
அராலி இந்துக் கல்லூரி
அராலி is located in Northern Province
அராலி
அராலி
ஆள்கூறுகள்: 9°42′22″N 79°57′0″E / 9.70611°N 79.95000°E / 9.70611; 79.95000
நாடுஇலங்கை
மாகாணம்வடக்கு
மாவட்டம்யாழ்ப்பாணம்
பி.செ.பிரிவுவலிகாமம் மேற்கு

அராலி (Arali) யாழ்ப்பாணக் குடாநாட்டின் தென்மேற்குக் கரையோரமாக அமைந்திருக்கும் ஒரு முக்கோண வடிவான கிராமமாகும். இது வட்டுக்கோட்டைத் தொகுதியின் அல்லது கோவிற்பற்றின் ஓர் உபபிரிவாகும்.

பெயர்க் காரணம்[தொகு]

முற்காலத்தில் அராலியில் 'ஆறா' எனும் ஒருவகை மீன் அதிகமாகக் கிடைத்ததாலோ இன்றும் இவ்வூரில் அதிகமாகக் காணப்படும் அரளிச் செடிகள் அதிகமாக இருந்ததாலோ 'அராலி' என்னும் பெயர் ஏற்பட்டிருக்க வேண்டும்.[1] வேலணை, சரவணை, நாரந்தனை மக்கள் கடல் அருகில் அராவணையாக வந்து இறங்கிய துறைமுகம் அராலித்துறை ஆனது எனவும் கூறப்படுகிறது.[2] இத்துறைமுகத்தில் தீவுப்பகுதிகளில் இருந்து சங்கரத்தைக்கு சங்குகள் பெருமளவு இறக்கப்பட்டது.

அராலியின் பிரிவுகள்[தொகு]

அராலிக் கிராமம் அராலி கிழக்கு, தெற்கு, மேற்கு, வடக்கு என நான்கு பிரிவுகளாகப் பண்டைக்காலம் தொட்டே பிரிக்கப்பட்டிருக்கிறது. யாழ்ப்பாணத்திலிருந்து செல்பவர்கள் முதலில் காண்பது அராலிப் பாலத்தையும் வழுக்கையாற்றையுமே. அராலிப்பாலம் யாழ்ப்பாணத்திலிருந்து காரைநகருக்குக் கடற்கரையோரமாகச் செல்லும் வீதியில் ஐந்தாவது மைல் இறுதியிலே அமைந்துள்ளது. அராலியில் அராலி கிழக்கு, அராலி வடக்கு, அராலி தெற்கு, அராலி மேற்கு, அராலி மத்தி என ஜந்து கிராம சேவையாளர் பிரிவுகள் உள்ளன.

வழுக்கையாறு தெல்லிப்பழைப் பகுதியில் ஆரம்பித்து, மல்லாகம், அளவெட்டியூடாகப் பாய்ந்து, சண்டிலிப்பாயைத்) தாண்டி அராலிக் கடலை நோக்கி ஓடிவருகிறது. அராலிப் பாலத்தின் அருகே அமைந்திருக்கும் சந்தியிலிருந்து தெற்கு நோக்கி இரண்டு மைல் தூரம் போனால் அராலித் துறைமுகத்தையடையலாம்.

அராலியில் அமைந்துள்ள கோயில்கள்[தொகு]

அவற்றுள் சில:[3]

  • அராலி முத்துமாரியம்மன் கோயில்
  • அராலி கிழக்கு மலையாளன் காடு ஐயனார் கோயில்
  • அராலி கரைப்பிட்டி விநாயகர் கோயில்
  • அராலி வண்ணப்புரம் சிவன் கோவில்
  • அராலி வடக்கு இலந்தைத்தாழ்வு முருகமூர்த்தி கோயில்
  • அராலி வடக்கு சிவன் கோயில்
  • அராலி கிழக்கு வாலையம்மன் கோவில்
  • அராலி கிழக்கு ஆவரம்பிட்டி அகோர வீரபத்திரர் ஆலயம்
  • அராலி வடக்கு மயிலியற்புலம் கந்தசுவாமி கோவில்
  • அராலி மத்தி தறணன் முருகமூர்த்தி ஆலயம்
  • அராலி வடக்கு குலனையூர் ஞான வைரவர் ஆலயம்
  • அராலி மேற்கு நீளத்திக்காடு ஸ்ரீ பேச்சியம்பாள் ஆலயம்
  • அராலி வடக்கு பெரியதம்பிரான் ஆலயம்
  • அராலி அகாயக்குளம் விநாயகர் கோயில்
  • அராலி தெற்கு சிந்தாமணிப் பிள்ளையார் கோவில்
  • அராலி தெற்கு செம்பிதோட்டம் ஞானவைரவர் கோயில்
  • அராலி தெற்கு களவத்துறை ஞான வைரவர் கோயில்
  • அராலி மத்தி உலோலைசிட்டி சித்தி விநாயகர் ஆலயம்[4][5]
  • அராலி தெற்கு விஸ்வகுல ஞானவைரவர் ஆலயம்[6]
  • அராலி தெற்கு மாவத்தை பெரியதம்பிரான் ஆலயம்
  • அராலி மேற்கு நொச்சியம்பதி ஶ்ரீ சீத்தாராம சுந்தர ஆஞ்சநேயர் தேவஸ்தானம்
  • அராலி மேற்கு நொச்சியம்பதி விநாயகர் ஆலயம்
  • அராலி மேற்கு மேலாம் சாட்குண்ணியமூர்த்தி ஞானியார் ஆலயம்

அராலியில் உள்ள பாடசாலைகள்[தொகு]

  • அராலி இந்துக் கல்லூரி
  • அராலி கிழக்கு அமெரிக்கன் மிசன் தமிழ் கலவன் பாடசாலை
  • அராலி சரஸ்வதி மகா வித்தியாலயம்
  • அராலி முருகமூர்த்தி வித்தியாசாலை

அராலியில் உள்ள விளையாட்டுக் கழஙகள்[தொகு]

  • அராலி அண்ணா விளையாட்டுக் கழகம்
  • அராலி மாவத்தை விளையாட்டுக் கழகம்
  • அராலி சில்வஸ்ரர் விளையாட்டுக் கழகம்
  • அராலி கலைவாணி விளையாட்டுக் கழகம்
  • அராலி பாரதி விளையாட்டுக் கழகம்
  • அராலி நிலவொளி விளையாட்டுக்கழகம்

இங்கு பிறந்த புகழ் பூத்தோர்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "TamilNet: 07.10.17 Kiḷāli, Pulōli". TamilNet. October 07, 2017. https://www.tamilnet.com/art.html?catid=98&artid=27557. 
  2. சிவப்பிரகாசம், மு.சு.; விஷ்ணுபுத்திர வெடியரசன் வரலாறு, தொல்புரம், இலங்கை, 1988
  3. "Damage caused to Hindu Kovils (Temples) in the North-East of the Island of Sri Lanka". http://www.tchr.net/religion_temples.htm. 
  4. "TamilNet: 23.07.10 Kurumpachiddi, Vizhichiddi, Thu'raddaiyiddi". TamilNet. July 23, 2010. https://www.tamilnet.com/art.html?catid=98&artid=32283. 
  5. "அராலி உலோலைசிட்டி ஆலய பரிபாலன சபை". https://www.facebook.com/profile.php?id=100092575060169. 
  6. "அராலி தெற்கு விஸ்வகுலபதி ஸ்ரீ ஞானபைரவரின் ஆலய வரலாறும் திருவூஞ்சல் பாமாலையும் (2015)". https://noolaham.org/wiki/index.php/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF_%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%95%E0%AF%81%E0%AE%B2%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF_%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%80_%E0%AE%9E%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%AA%E0%AF%88%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%86%E0%AE%B2%E0%AE%AF_%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AF%82%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D. 
  • வெ. சு. நடராசா, ஆலயங்கள் மலிந்த அராலிக் கிராமம், ஈழநாடு பத்திரிகையில் வெளிவந்த தொடர் கட்டுரை

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=அராலி&oldid=3763680" இருந்து மீள்விக்கப்பட்டது