உள்ளடக்கத்துக்குச் செல்

சங்கானை பிரதேச செயலாளர் பிரிவு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சங்கானை பிரதேச செயலாளர் பிரிவு அல்லது வலிகாமம் மேற்கு பிரதேச செயலாளர் பிரிவு இலங்கையின் யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள ஒரு நிர்வாக அலகாகும். இது யாழ்ப்பாணக் குடாநட்டின் வலிகாமப் பிரிவில் அமைந்துள்ளது. இப் பிரிவு துணை நிர்வாக அலகுகளாக 25 கிராம அலுவலர் பிரிவுகளைக் கொண்டுள்ளது. அவை வட்டுக்கோட்டை வடக்கு, வட்டுக்கோட்டை கிழக்கு, வட்டுக்கோட்டை தெற்கு, வட்டுக்கோட்டை தென்மேற்கு, வட்டுக்கோட்டை மேற்கு, அராலி வடக்கு, அராலி கிழக்கு, அராலி தெற்கு, அராலி மேற்கு, அராலி மத்தி, சங்கரத்தை, தொல்புரம் கிழக்கு, தொல்புரம் மேற்கு, பொன்னாலை, மூளாய், பண்ணாகம், பனிப்புலம், சித்தங்கேணி, சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம் மேற்கு, சுழிபுரம் மத்தி, சங்கானை கிழக்கு, சங்கானை தெற்கு, சங்கானை மேற்கு, சங்கானை மத்தி என்பனவாகும்.இங்குள்ள முக்கிய ஊர்கள் அராலி, சங்கானை, சுழிபுரம், மூளாய், பண்ணாகம், பனிப்புலம், பொன்னாலை, சங்கரத்தை, சித்தங்கேணி, தொல்புரம், வட்டுக்கோட்டை என்பனவாகும். இப்பிரிவு குடாநாட்டில் வடமேற்குக் கரையோரத்தில் அமைந்துள்ளது. இந்தியப் பெருங்கடல் இதன் மேற்கு, தெற்கு எல்லைகளாக உள்ளது. வடக்கிலும், கிழக்கிலும் மட்டுமே நிலப்பகுதி எல்லைகளையுடைய இப்பிரிவு சண்டிலிப்பாய் பிரதேச செயலாளர் பிரிவுடன் மட்டுமே பொதுவான எல்லையைக் கொண்டுள்ளது. இதன் நிர்வாகத் தலைமை அலுவலகம் சங்கானையில் அமைந்துள்ளது.

2012ம் ஆண்டு சனத்தொகைக் கணக்கெடுப்பின் படி இங்கு 46,343 பேர் வசிக்கின்றனர். இது 44 சதுர கிலோமீட்டர் பரப்பளவைக் கொண்டது ஆகும்[1].

இன ரீதியான சனத்தொகை

[தொகு]

2012ம் ஆண்டு சனத்தொகைக் கணக்கெடுப்பின் படி இப்பிரதேச செயலாளர் பிரிவு இலங்கைத் தமிழர்களைப் பெரும்பான்மையாகக் கொண்டுள்ளது.

இனப்பரம்பல்
இனம் சதவீதம்
இலங்கைத் தமிழர்
99.82%
சிங்களவர்
0.14%
ஏனையோர்
0.04%

மத ரீதியான சனத்தொகை

[தொகு]

2012ம் ஆண்டு சனத்தொகைக் கணக்கெடுப்பின் படி இப்பிரதேச செயலாளர் பிரிவில் இந்துக்கள் பெரும்பான்மையினராக உள்ளதோடு கிறித்தவர்களும் சிறியளவில் உள்ளனர்.

சமயங்கள்
சமயம் சதவீதம்
இந்துக்கள்
94.4%
கத்தோலிக்கர்
1.55%
ஏனைய கிறித்தவர்
3.89%

குறிப்புக்கள்

[தொகு]
  1. புள்ளிவிபரத் தொகுப்பு 2007, தொகைமதிப்புப் புள்ளிவிபரத் திணைக்களம், இலங்கை

இவற்றையும் பார்க்கவும்

[தொகு]

வெளியிணைப்புக்கள்

[தொகு]