அராலி கிழக்கு மலையாளன் காடு ஐயனார் கோயில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

மலையாளங் காடு ஐயனார் கோவில் இலங்கையின் வடக்கு மாகாணம் யாழ்ப்பாண மாவட்டத்தின் வலிகாமம் மேற்குப் பிரிவில் வட்டுக்கோட்டை தொகுதியில் அராலி பிரிவில் அராலி கிழக்கு என்ற இடத்தில் அமைந்துள்ளது. அராலிப் பாலத்தில் இருந்து தெற்கே கால் மைல் தூரத்தில் அராலித் துறைமுகத்துக்கு செல்லும் வீதியில் வழுக்கை ஆற்று கடற்கரை ஓரமாக இது அமைந்துள்ளது.

இவ்வாலயத்தின் சிறப்புத் திருவிழா ஆனி உத்தரம் ஆகும். முதலாம் நாள் கொடி ஏற்றமும், 6-ஆம் நாள் கப்பல், 7-ஆம் நாள் வேட்டை, 8-ஆம் நாள் சப்பறம், 9-ஆம் நாள் தேர், 10-ஆம் நாள் ஆனி நடேசர் உத்தரம் தீர்த்தம், 11-ஆம் நாள் பூங்காவனம், 11 நாட்களும் அன்னதானம் வழங்கப்படுகின்றது. தேர், தீர்த்தம், பூங்காவனம், சங்காஅபிசேகம் ஆகிய நாட்களில் அன்ணா விளையாட்டுக்கழகம் தாகசந்தி சேவை நடத்திவருகின்றனர். கார்த்திகை மாதம் மாலை அணிந்து நோன்பு நோக்கப்படும். தை முதல் நாள் மகரஜோதி பூசை நடைபெறும். நல்லூர் 16-ஆம் திருவிழா சாயங்கால பூசையினை இவ் ஆலய நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்

திருவிழாக்கள்[தொகு]

சித்திரை மாதம். சித்திரை வருடப்பிறப்பு. சித்திரபுத்திரர்நாயனார் கதை சித்திரை உத்தரம் வைகாசி மாதம் வைகாசி உத்திரம் ஆனி மாதம் கொடி ஏற்றத்திருவிழா ஆனி நடேஸ்வரர் உத்திரம் ஆடி மாதம்.ஆடி உத்திரம் ஆவனி மாதம். ஆவனி உத்திரம் விநாயகர் சதுர்த்தி புரட்டாதி மாதம் நவராத்திரி, புரட்டாதி உத்திரம் ஜப்பசி மாதம் கந்தசட்டி ஜப்பசி உத்திரம் கார்த்திகை மாதம் கார்த்திகைவிளக்கீடு சபரி மாலை அனிதல் கார்த்திகை உத்திரம் மார்களி மதம் மார்களி உத்திரம் திருவெம்பவை தை மாதம்.தைப்பொங்கள் மகரஜேதி தை பூசம், தைக்குளிர்த்தி, தை உத்திரம்.மாசி மாதம். மாசி மகம், மாசி சிவன்ராத்திரி மாசி உத்திரம்.பங்குனி மாதம். பங்குனி உத்தரம்.