உள்ளடக்கத்துக்குச் செல்

வேலணை பிரதேச சபை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வேலணை பிரதேச சபை
வகை
வகை
தலைமை
தலைவர்
சிவலிங்கம் அசோக்குமார், இலங்கைத் தமிழரசுக் கட்சி
20 சூன் 2025 முதல்
பிரதித் தலைவர்
கணபதிப்பிள்ளை வசந்தகுமார், இலங்கைத் தமிழரசுக் கட்சி
20 சூன் 2025 முதல்
கட்டமைப்பு
உறுப்பினர்கள்22
அரசியல் குழுக்கள்
அரசு (8)

எதிர் (14)

ஆட்சிக்காலம்
4 ஆண்டுகள்
தேர்தல்கள்
கலப்பு முறைத் தேர்தல்
அண்மைய தேர்தல்
6 மே 2025

வேலணை பிரதேச சபை (Velanai Divisional Council) இலங்கையின் யாழ்ப்பாண மாவட்டத்தில் அமைந்துள்ள உள்ளூராட்சி அமைப்புக்களுள் ஒன்று ஆகும். வேலணை பிரதேச செயலாளர் பிரிவில் அடங்கும் பகுதிகள் இப்பிரதேச சபைக்குள் அடங்குகின்றன. இதன் மொத்தப் பரப்பளவு 98.4 சதுர மைல்கள். இது இரண்டு தீவுகளை முழுமையாகவும் ஒரு தீவைப் பகுதியாகவும் உள்ளடக்கியிருப்பதால் பெரும்பாலும் இது கடலினால் சூழப்பட்டுள்ளது. மேற்கில் மட்டும் ஊர்காவற்றுறை பிரதேச சபையுடன் பொது எல்லையைக் கொண்டுள்ளது. இச்சபைக்கான உறுப்பினர்கள் நேரடியாக மக்களால் தெரிவுசெய்யப்படுகின்றனர். 2018 ஆம் ஆண்டு முதல் கலப்பு முறைத் தேர்தல் அறிமுகப்படுத்தப்பட்டது. இம்முறைப்படி, வேலணை பிரதேச சபைக்கு 12 உறுப்பினர்கள் வட்டாரங்களில் இருந்து நேரடியாகவும், 10 உறுப்பினர்கள் விகிதாசாரப் பிரதிநிதித்துவத் தேர்தல் முறையிலும் மொத்தம் 22 உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்.[1][2]

வட்டாரங்கள்

[தொகு]

26ம் இலக்க 2015 ஆகத்து 21 அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலின் மூலம் உள்ளுராட்சி அதிகார சபைகள் தேர்தல் கட்டளை சட்டத்தின் 3ஆவது பிரிவின் கீழ் உள்ளுராட்சி அதிகார சபையின் ஆளுகைப் பிரதேசத்தின் எல்லைகள் வரையறை செய்யப்பட்டுள்ளன. இவ்வாறு வரையறை செய்யப்பட்டுள்ள வேலணை பிரதேச சபையின் ஆளுகைப் பிரதேசம் 12 வட்டாரங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. வேலணை பிரதேச சபையின் கீழ் வேலணை பிரதேச செயலாளர் பிரிவின் நிருவாக எல்லைகள் உள்ளடங்குகின்றன.[3] இவ்வட்டாரங்களின் இலக்கம், பெயர், அவற்றில் அடங்கியுள்ள கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் பற்றிய விபரங்களைக் கீழேயுள்ள அட்டவணையில் காணலாம்.[4]

வட்டாரங்கள்கிராம உத்தியோகத்தர் பிரிவுகள்
இல.பெயர்இல.பெயர்
1சரவணைJ12வேலணை வடக்கு
J20சரவணை கிழக்கு
J21சரவணை மேற்கு
2மண்கும்பான்J11மண்கும்பான்
J13வேலணை வடகிழக்கு
3அல்லைப்பிட்டிJ10அல்லைப்பிட்டி
4மண்டைதீவுJ7மண்டைதீவு கிழக்கு
J8மண்டைதீவு மேற்கு
J9மண்டைதீவு தெற்கு
5வேலணை கிழக்குJ14வேலணை கிழக்கு
J8வேலணை தென்கிழக்கு
J9வேலணை கிழக்கு மத்தி
6வேலணை தெற்குJ17வேலணை தெற்கு
7வேலணை மேற்குJ18வேலணை மேற்கு மத்தி
J19வேலணை மேற்கு
8நயினாதீவு வடக்குJ34நயினாதீவு வடக்கு
J35நயினாதீவு மத்தி
9புங்குடுதீவு மேற்குJ27புங்குடுதீவு வடக்கு
J29புங்குடுதீவு தென்மேற்கு
J30புங்குடுதீவு மத்தி மேற்கு
J32புங்குடுதீவு வடகிழக்கு
J33புங்குடுதீவு மேற்கு
10புங்குடுதீவு கிழக்குJ22புங்குடுதீவு வடகிழக்கு
J23புங்குடுதீவு கிழக்கு
J24புங்குடுதீவு தென்மேற்கு
11புங்குடுதீவு தெற்குJ25புங்குடுதீவு தென்கிழக்கு
J26புங்குடுதீவு தெற்கு
J28புங்குடுதீவு மத்தி வடக்கு
J31புங்குடுதீவு மத்தி கிழக்கு
12நயினாதீவு தெற்குJ36நயினாதீவு தெற்கு

தேர்தல் முடிவுகள்

[தொகு]

1998 உள்ளாட்சித் தேர்தல்

[தொகு]

29 சனவரி 1998 இல் இடம்பெற்ற உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள்:[5]<[6]

கூட்டணிகளும் கட்சிகளும்வாக்குகள்%இடங்கள்
 ஈழ மக்கள் சனநாயகக் கட்சி 1,71566.17%8
 சுயேச்சை 50819.60%2
 சனநாயக மக்கள் விடுதலை முன்னணி (புளொட்) 2559.84%1
 ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி 582.24%0
 தமிழீழ விடுதலை இயக்கம் 562.16%0
செல்லுபடியான வாக்குகள் 2,592100.00%11
செல்லாத வாக்குகள் 284
அளிக்கப்பட்ட மொத்த வாக்குகள் 2,876
பதிவு செய்யப்பட்ட வாக்காளர்கள் 31,199
வாக்குவீதம் 9.22%

2011 உள்ளாட்சித் தேர்தல்

[தொகு]

23 யூலை 2011 இல் இடம்பெற்ற உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள்:[7]

கூட்டணிகளும் கட்சிகளும்வாக்குகள்%இடங்கள்
 ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணி ** 3,97363.74%8
 தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு * 2,22135.63%3
 ஐக்கிய தேசியக் கட்சி 390.63%0
செல்லுபடியான வாக்குகள் 6,233100.00%11
செல்லாத வாக்குகள் 714
அளிக்கப்பட்ட மொத்த வாக்குகள் 6,947
பதிவு செய்யப்பட்ட வாக்காளர்கள் 12,028
வாக்குவீதம் 57.76%
* ஈபிஆர்எல்எஃப் (சு), இதக, புளொட், டெலோ, தவிகூ ஆகிய கட்சிகளை உள்ளடக்கியது.
** ஈபிடிபி, இசுக ஆகிய கட்சிகளை உள்ளடக்கியது.

2018 உள்ளூராட்சித் தேர்தல்

[தொகு]

2018 பெப்ரவரி 10 இல் நடைபெற்ற உள்ளூராட்சித் தேர்தல்களில் முதல் தடவையாகக் கலப்பு முறைத் தேர்தல் அறிமுகப்படுத்தப்பட்டது. இம்முறைப்படி, 12 உறுப்பினர்கள் வட்டாரங்களில் இருந்து நேரடியாகவும், 8 உறுப்பினர்கள் விகிதாசாரப் பிரதிநிதித்துவத் தேர்தல் முறையிலும் மொத்தம் 20 உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.[1][2] தேர்தல் முடிவுகள் வருமாறு:[3]

கூட்டணிகளும்
கட்சிகளும்
வாக்குகள்%வட்டாரங்களில்
இருந்து
தேர்ந்தெடுக்கப்பட்ட
உறுப்பினர்கள்
பெற்ற
வாக்குகளுக்குரிய
கூடுதல் உறுப்பினர்கள்
உரித்தான முழு
உறுப்பினர்களின்
எண்ணிக்கை
 தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு * 3,62739.08%718
 ஈழ மக்கள் சனநாயகக் கட்சி 2,89131.15%516
 இலங்கை பொதுசன முன்னணி 8999.69%022
 தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி 7377.94%011
 ஐக்கிய தேசியக் கட்சி 4034.34%011
 தமிழர் விடுதலைக் கூட்டணி** 3453.72%011
 இலங்கை சுதந்திரக் கட்சி 3063.30%011
அகில இலங்கை தமிழர் மகாசபை 740.80%000
செல்லுபடியான வாக்குகள் 9,282100.00%12820
செல்லாத வாக்குகள் 165
அளிக்கப்பட்ட மொத்த வாக்குகள் 9,447
பதிவு செய்யப்பட்ட வாக்காளர்கள் 12,763
வாக்குவீதம் 74.02%
* இதக, புளொட், டெலோ ஆகிய கட்சிகளை உள்ளடக்கியது.
** தவிகூ, ஈபிஆர்எல்எஃப் (சு) ஆகிய கட்சிகளை உள்ளடக்கியது.

2018 தேர்தலில் வேலணை பிரதேச சபையின் தலைவராக நமசிவாயம் கருணகரகுருமூர்த்தி (நயினாதீவு தெற்கு, ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி), துணைத் தலைவராக பொன்னம்பலம் நடனசிகாமணி (இலங்கை பொதுசன முன்னணி) ஆகியோர் தெரிவு செய்யப்பட்டனர்.[3]

2025 உள்ளாட்சித் தேர்தல்

[தொகு]

2025 மே 6 இல் நடைபெற்ற உள்ளூராட்சித் தேர்தல் முடிவுகள்:[8] 12 உறுப்பினர்கள் வட்டாரங்களில் இருந்து நேரடியாகவும், 10 உறுப்பினர்கள் விகிதாசாரப் பிரதிநிதித்துவத் தேர்தல் முறையிலும் மொத்தம் 22 உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

கூட்டணிகளும்
கட்சிகளும்
வாக்குகள்%வட்டாரங்களில்
இருந்து
தேர்ந்தெடுக்கப்பட்ட
உறுப்பினர்கள்
பெற்ற
வாக்குகளுக்குரிய
கூடுதல் உறுப்பினர்கள்
உரித்தான முழு
உறுப்பினர்களின்
எண்ணிக்கை
 இலங்கைத் தமிழரசுக் கட்சி 2,67331.08%808
 தேசிய மக்கள் சக்தி 1,84021.39%404
 ஈழ மக்கள் சனநாயகக் கட்சி 1,31315.27%033
 அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் 97611.35%022
 சுயேச்சைக் குழு 1 4925.72%011
தமிழ் மக்கள் கூட்டணி 4505.23%011
 சுயேச்சைக் குழு 2 3183.70%011
 ஐக்கிய தேசியக் கட்சி 3143.65%011
 சுயேச்சைக் குழு 3 1982.30%011
 ஐக்கிய மக்கள் சக்தி 270.31%000
செல்லுபடியான வாக்குகள் 8,601100.00%121022
செல்லாத வாக்குகள் 219
அளிக்கப்பட்ட மொத்த வாக்குகள் 8,820
பதிவு செய்யப்பட்ட வாக்காளர்கள் 13,918
வாக்குவீதம் 63.37%

2025 தேர்தலில் வேலணை பிரதேச சபையின் தலைவராக சிவலிங்கம் அசோக்குமார் (இலங்கைத் தமிழரசுக் கட்சி), துணைத் தலைவராக கணபதிப்பிள்ளை வசந்தகுமார் (இலங்கைத் தமிழரசுக் கட்சி) ஆகியோர் தெரிவு செய்யப்பட்டனர்.[9]

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1 2 "LG polls cost to hit Rs. 4 b". Daily FT. 5-12-2017. http://www.ft.lk/front-page/LG-polls-cost-to-hit-Rs--4-b/44-644557. பார்த்த நாள்: 23-12-2017.
  2. 1 2 "Amended Local Government Elections Bill approved in Parliament". டெய்லி நியூசு. 25-08-2017.
  3. 1 2 3 "Local Authorities Election - 10.02.2018" (PDF). இலங்கை தேர்தல் திணைக்களம். Archived (PDF) from the original on 12 May 2025. Retrieved 7 June 2025.
  4. "Ward Map of Velanai Pradeshiya Sabha – Jaffna District" (PDF). Archived from the original (PDF) on 2016-07-06. Retrieved 2017-03-25.
  5. "Election commissioner releases results". TamilNet. 30 January 1998.
  6. D.B.S. Jeyaraj (15 February 1998). "The Jaffna Elections". Tamil Times XVII (2): 12–15. பன்னாட்டுத் தர தொடர் எண்:0266-4488. http://www.noolaham.org/wiki/index.php?title=Tamil_Times_1998.02&uselang=en. பார்த்த நாள்: 25 மார்ச் 2017.
  7. "Local Authorities Election - 2011" (PDF). இலங்கை தேர்தல் திணைக்களம். Archived (PDF) from the original on 21 December 2018. Retrieved 18 June 2025.
  8. "Local Authorities Election - 6.05.2025 Jaffna District Velanai Pradeshia Sabha" (PDF). Department of Elections, Sri Lanka. Archived (PDF) from the original on 25 May 2025. Retrieved 25 May 2025.
  9. "வேலணை பிரதேச சபையை தனதாக்கிய இலங்கை தமிழரசுக் கட்சி". தமிழ்வின். Archived from the original on 21 சூன் 2025. Retrieved 21 சூன் 2025.
"https://ta.wikipedia.org/w/index.php?title=வேலணை_பிரதேச_சபை&oldid=4302724" இலிருந்து மீள்விக்கப்பட்டது