உள்ளடக்கத்துக்குச் செல்

சாவகச்சேரி பிரதேச சபை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சாவகச்சேரி பிரதேச சபை
வகை
வகை
உள்ளூராட்சி
தலைமை
தலைவர்
கந்தையா வாமதேவன், த. தே. கூ
5 ஏப்ரல் 2018 முதல்
துணைத் தலைவர்
செ. மயூரன், த. தே. கூ
5 ஏப்ரல் 2018 முதல்
உறுப்பினர்கள்31
தேர்தல்கள்
அண்மைய தேர்தல்
2018

சாவகச்சேரி பிரதேச சபை (Chavakachcheri Divisional Council) இலங்கையின் யாழ்ப்பாண மாவட்டத்தில் அமைந்துள்ள உள்ளூராட்சி அமைப்புக்களுள் ஒன்று ஆகும். சாவகச்சேரி நகரசபைக்குள் அடங்கும் பகுதி தவிர்ந்த சாவகச்சேரி பிரதேச செயலாளர் பிரிவில் அடங்கும் பகுதிகள் இப்பிரதேச சபைக்குள் அடங்குகின்றன. இதன் மொத்தப் பரப்பளவு 200.90 சதுர மைல்கள். இதன் வடமராட்சி தென்மேற்கு பிரதேச சபையும்; கிழக்கில் பருத்தித்துறை பிரதேச சபை, கிளிநொச்சி மாவட்டம் என்பனவும்; தெற்கில் யாழ்ப்பாண நீரேரியும்; மேற்கில் நல்லூர் பிரதேச சபை, வலிகாமம் கிழக்கு பிரதேச சபை என்பனவும் எல்லைகளாக உள்ளன. இச்சபைக்கான உறுப்பினர்கள் நேரடியாக மக்களால் தெரிவுசெய்யப்படுகின்றனர். 2018 ஆம் ஆண்டு முதல் கலப்பு முறைத் தேர்தல் அறிமுகப்படுத்தப்பட்டது. இம்முறைப்படி, சாவகச்சேரி பிரதேச சபைக்கு 17 உறுப்பினர்கள் வட்டாரங்களில் இருந்து நேரடியாகவும், 13 உறுப்பினர்கள் விகிதாசாரப் பிரதிநிதித்துவத் தேர்தல் முறையிலும், மொத்தம் 31 உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்.[1][2]

வட்டாரங்கள்

[தொகு]

வலிகாமம் கிழக்கு பிரதேச சபைப் பகுதி 17 வட்டாரங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இவ்வட்டாரங்களின் இலக்கம், பெயர், அவற்றில் அடங்கியுள்ள கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் பற்றிய விபரங்களைக் கீழேயுள்ள அட்டவணையில் காணலாம்.[3]

வட்டாரங்கள் கிராம உத்தியோகத்தர் பிரிவுகள்
இல. பெயர் இல. பெயர்
1 வரணி J339 வரணி வடக்கு
J340 மாசேரி
J341 இடைக்குறிச்சி
2 நாவற்காடு கரம்பை J337 குடமியான்
J338 நாவற்காடு
J342 கரம்பைக்குறிச்சி
J343 வரணி-இயத்தலை
3 மந்துவில் J344 தாவளை-இயத்தலை
J345 மந்துவில் கிழக்கு
J346 மந்துவில் மேற்கு
J347 மந்துவில் வடக்கு
4 சரசாலை J316 சரசாலை தெற்கு
J317 சரசாலை வடக்கு
5 மட்டுவில் வடக்கு J313 மட்டுவில் வடக்கு
J314 மட்டுவில் கிழக்கு
6 மட்டுவில் சந்திரபுரம் J312 மட்டுவில் மத்தி
J315 சந்திரபுரம்
7 கைதடி வடக்கு J288 கைதடி வடக்கு
J289 கைதடி கிழக்கு
J290 கைதடி மத்தி
8 கைதடி தெற்கு J291 கைதடி தெற்கு
J292 கைதடி தென்கிழக்கு
J293 கைதடி மேற்கு
9 மட்டுவில் நுணாவில் J309 கைதடி நுணாவில்
J310 தென்மட்டுவில்
J311 மட்டுவில் நுணாவில்
10 மீசாலை ராமாவில் J318 மீசாலை கிழக்கு
J320 ராமாவில்
J321 மீசாலை வடக்கு
11 கொடிகாமம் J326 கொடிகாமம் வடக்கு
J327 கொடிகாமம் மத்தி
J328 கொடிகாமம் தெற்கு
12 உசன் மிருசுவில் J329 உசன்
J336 மிருசுவில் தெற்கு
J335 மிருசுவில் வடக்கு
13 உசன் மிருசுவில் J329 உசன்
J336 மிருசுவில் தெற்கு
J335 மிருசுவில் வடக்கு
13 கரம்பகம் எழுதுமட்டுவாள் J330 கரம்பகம்
J333 எழுதுமட்டுவாள் தெற்கு
J334 எழுதுமட்டுவாள் வடக்கு
14 விடத்தல்பளை பாலாவி J325 பாலாவி
J331 விடத்தல்பளை
J332 கெற்பெலி
15 கச்சாய் அல்லாரை J322 அல்லாரை
J323 வெல்லம்போக்கடி
J324 கச்சாய்
16 தனங்கிளப்பு J297 கைதடி நாவற்குளி
J298 மறவன்புலவு
J299 தனங்கிளப்பு
17 நாவற்குழி J294 நாவற்குளி மேற்கு
J295 நாவற்குழி கிழக்கு
J296 கோயிலாக்கண்டி

தேர்தல் முடிவுகள்

[தொகு]

1998 உள்ளாட்சித் தேர்தல்

[தொகு]

29 சனவரி 1998 இல் இடம்பெற்ற உள்ளாட்சித் தேர்தல் முடிவு:[4][5]

கூட்டணிகளும் கட்சிகளும் வாக்குகள் % இடங்கள்
  சனநாயக மக்கள் விடுதலை முன்னணி (புளொட்) 3,460 36.82% 7
  ஈழ மக்கள் சனநாயகக் கட்சி 3,103 33.02% 4
  ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி 2,091 22.25% 3
  தமிழீழ விடுதலை இயக்கம் 742 7.90% 1
செல்லுபடியான வாக்குகள் 9,396 100.00% 15
செல்லாத வாக்குகள் 2,504
மொத்த வாக்குகள் 11,900
பதிவில் உள்ள வாக்காளர்கள் 39,871
வாக்களித்தோர் 29.85%

2011 உள்ளாட்சித் தேர்தல்

[தொகு]

23 யூலை 2011 இல் இடம்பெற்ற உள்ளாட்சித் தேர்தல் முடிவு:[6]

கூட்டணிகளும் கட்சிகளும் வாக்குகள் % இடங்கள்
  தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு * 12,565 75.07% 12
  ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணி ** 3,161 18.89% 2
  ஐக்கிய தேசியக் கட்சி 667 3.98% 1
சுயேச்சை 1 246 1.47% 0
சுயேச்சை 2 97 0.58% 0
  மக்கள் விடுதலை முன்னணி 2 0.01% 0
செல்லுபடியான வாக்குகள் 16,738 100.00% 15
செல்லாத வாக்குகள் 1,494
மொத்த வாக்குகள் 18,232
பதிவில் உள்ள வாக்காளர்கள் 37,015
வாக்களித்தோர் 49.26%
* ஈபிஆர்எல்எஃப் (சு), இதக, புளொட், டெலோ, தவிகூ ஆகிய கட்சிகளை உள்ளடக்கியது.
** ஈபிடிபி, இசுக ஆகிய கட்சிகளை உள்ளடக்கியது.

2018 உள்ளாட்சித் தேர்தல்

[தொகு]

2018 பெப்ரவரி 10 இல் நடைபெற்ற உள்ளூராட்சித் தேர்தல்களில் முதல் தடவையாகக் கலப்பு முறைத் தேர்தல் அறிமுகப்படுத்தப்பட்டது. இம்முறைப்படி, 17 உறுப்பினர்கள் வட்டாரங்களில் இருந்து நேரடியாகவும், 13 உறுப்பினர்கள் விகிதாசாரப் பிரதிநிதித்துவத் தேர்தல் முறையிலும் மொத்தம் 31 உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.[1][2] தேர்தல் முடிவுகள் வருமாறு:[7]

கூட்டணிகளும்
கட்சிகளும்
வாக்குகள் % பெற்ற
வாக்குகளுக்குரிய
உறுப்பினர்கள்
வட்டாரங்களில்
இருந்து
தேர்ந்தெடுக்கப்பட்ட
உறுப்பினர்கள்
உரித்தான முழு
உறுப்பினர்களின்
எண்ணிக்கை
  தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு * 9,672 37.04% 10 13 13
  தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி 5,732 21.95% 6 2 6
  ஈழ மக்கள் சனநாயகக் கட்சி 3,799 14.55% 4 2 4
  சிறீ லங்கா சுதந்திரக் கட்சி 2,312 8.85% 3 0 3
  தமிழர் விடுதலைக் கூட்டணி ** 1,935 7.41% 2 0 2
  ஐக்கிய தேசியக் கட்சி 1,540 5.90% 2 0 2
தமிழர் சமூக சனநாயகக் கட்சி 758 2.90% 1 0 1
இலங்கை பொதுசன முன்னணி 210 0.80% 0 0 0
மக்கள் விடுதலை முன்னணி 157 0.60% 0 0 0
செல்லுபடியான வாக்குகள் 18,677 100.00% 28 17 31
செல்லாத வாக்குகள் 347
பதிவான மொத்த வாக்குகள் 19,024
பதிவில் உள்ள வாக்காளர்கள் 27,100
வாக்களித்தோர் 70.20%
* இதக, புளொட், டெலோ ஆகிய கட்சிகளை உள்ளடக்கியது.
** தவிகூ, ஈபிஆர்எல்எஃப் (சு) ஆகிய கட்சிகளை உள்ளடக்கியது.
சாவகச்சேரி பிரதேச சபையில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி, ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் இலங்கை சுதந்திரக் கட்சி ஆகியவற்றின் ஆதரவுடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆட்சி அமைத்தது.[8]

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 "LG polls cost to hit Rs. 4 b". Daily FT. 5-12-2017. http://www.ft.lk/front-page/LG-polls-cost-to-hit-Rs--4-b/44-644557. பார்த்த நாள்: 23-12-2017. 
  2. 2.0 2.1 "Amended Local Government Elections Bill approved in Parliament". டெய்லி நியூசு. 25-08-2017. 
  3. Ward Map for Chavakachcheri Pradeshiya Sabha – Jaffna District[தொடர்பிழந்த இணைப்பு]
  4. "Election commissioner releases results". TamilNet. 30 January 1998.
  5. D.B.S. Jeyaraj (15 February 1998). "The Jaffna Elections". Tamil Times XVII (2): 12–15. பன்னாட்டுத் தர தொடர் எண்:0266-4488. http://www.noolaham.org/wiki/index.php?title=Tamil_Times_1998.02&uselang=en. பார்த்த நாள்: 25 மார்ச் 2017. 
  6. "Local Authorities Election - 23.07.2011 Jaffna District Chavakachcheri Pradeshiya Sabha". Department of Elections, Sri Lanka. Archived from the original on 2012-08-05. பார்க்கப்பட்ட நாள் 2017-03-25.
  7. "Local Authorities Election - 10.02.2018 Jaffna District Chavakachcheri Pradeshiya Sabha" (PDF). இலங்கை தேர்தல் திணைக்களம்.[தொடர்பிழந்த இணைப்பு]
  8. "சாவகச்சேரி பிரதேச சபையை கைப்பற்றியது தமிழ் தேசியக் கூட்டமைப்பு". newsfirst. 5-04-2018. பார்க்கப்பட்ட நாள் 29-04-2018. {{cite web}}: Check date values in: |accessdate= and |date= (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=சாவகச்சேரி_பிரதேச_சபை&oldid=3577184" இலிருந்து மீள்விக்கப்பட்டது