உள்ளடக்கத்துக்குச் செல்

ஊர்காவற்றுறை பிரதேச சபை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஊர்காவற்றுறை பிரதேச சபை
வகை
வகை
தலைமை
தலைவர்
அன்னலிங்கம் அன்னராசா, அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரசு
20 சூன் 2025 முதல்
துணைத் தலைவர்
செபஸ்தியாம்பிள்ளை லெனின் ரஞ்சித், இலங்கைத் தமிழரசுக் கட்சி
20 சூன் 2025 முதல்
கட்டமைப்பு
உறுப்பினர்கள்13
அரசியல் குழுக்கள்
அரசு (4)

எதிர் (9)

தேர்தல்கள்
அண்மைய தேர்தல்
2025

ஊர்காவற்றுறை பிரதேச சபை (Kayts Divisional Council) இலங்கையின் யாழ்ப்பாண மாவட்டத்தில் அமைந்துள்ள உள்ளூராட்சி அமைப்புக்களுள் ஒன்று ஆகும். ஊர்காவற்றுறை பிரதேச செயலாளர் பிரிவில் அடங்கும் பகுதிகள் இப்பிரதேச சபைக்குள் அடங்குகின்றன. இது இரண்டு தீவுகளை முழுமையாகவும் ஒரு தீவைப் பகுதியாகவும் உள்ளடக்கியிருப்பதால் பெரும்பாலும் இது கடலினால் சூழப்பட்டுள்ளது. கிழக்கில் மட்டும் வேலணைப் பிரதேச சபையுடன் பொது எல்லையைக் கொண்டுள்ளது. இச்சபைக்கான உறுப்பினர்கள் நேரடியாக மக்களால் தெரிவுசெய்யப்படுகின்றனர். 2018 ஆம் ஆண்டு முதல் கலப்பு முறைத் தேர்தல் அறிமுகப்படுத்தப்பட்டது. இம்முறைப்படி, ஊர்காவற்றுறை பிரதேச சபைக்கு 8 உறுப்பினர்கள் வட்டாரங்களில் இருந்து நேரடியாகவும், 5 உறுப்பினர்கள் விகிதாசாரப் பிரதிநிதித்துவத் தேர்தல் முறையிலும், மொத்தம் 13 உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்.[1][2]

வட்டாரங்கள்

[தொகு]

26ம் இலக்க 2015 ஆகத்து 21 அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலின் மூலம் உள்ளுராட்சி அதிகார சபைகள் தேர்தல் கட்டளை சட்டத்தின் 3ஆவது பிரிவின் கீழ் உள்ளுராட்சி அதிகார சபையின் ஆளுகைப் பிரதேசத்தின் எல்லைகள் வரையறை செய்யப்பட்டுள்ளன. இவ்வாறு வரையறை செய்யப்பட்டுள்ள ஊர்காவற்றுறை பிரதேச சபையின் ஆளுகைப் பிரதேசம் 8 வட்டாரங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. ஊர்காவற்றுறை பிரதேச சபையின் கீழ் ஊர்காவற்றுறை பிரதேச செயலாளர் பிரிவின் நிருவாக எல்லைகள் உள்ளடங்குகின்றன.[3]

வட்டாரங்கள் கிராம உத்தியோகத்தர் பிரிவுகள்
இல. பெயர் இல. பெயர்
1 எழுவைதீவு J39 எழுவைதீவு
2 ஊர்காவற்றுறை J49 ஊர்காவற்றுறை
J50 பருத்தியடைப்பு
J51 கரம்பன்
3 நாரந்தனை வடமேற்கு J56 நாரந்தனை வடமேற்கு
4 நாரந்தனை J55 நாரந்தனை வடக்கு
J57 நாரந்தனை
5 நாரந்தனை தெற்கு J58 நாரந்தனை தெற்கு
6 கரம்பன் J52 கரம்பன் கிழக்கு
J53 கரம்பன் தென்கிழக்கு
J54 கரம்பன் மேற்கு
7 அனலைதீவு J37 அனலைதீவு வடக்கு
J38 அனலைதீவு தெற்கு
8 புளியங்கூடல் J59 சுருவில்
J60 புளியங்கூடல்

தேர்தல் முடிவுகள்

[தொகு]

1998 உள்ளூராட்சித் தேர்தல்

[தொகு]

29 சனவரி 1998 இல் இடம்பெற்ற உள்ளூராட்சித் தேர்தல் முடிவுகள்:[4][5]

கூட்டணிகளும் கட்சிகளும் வாக்குகள் % இடங்கள்
  ஈழ மக்கள் சனநாயகக் கட்சி 2,771 72.43% 9
  சனநாயக மக்கள் விடுதலை முன்னணி (புளொட்) 536 14.01% 1
  சுயேச்சை 411 10.74% 1
  தமிழீழ விடுதலை இயக்கம் 57 1.49% 0
  ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி 51 1.33% 0
செல்லுபடியான வாக்குகள் 3,826 100.00% 11
செல்லாத வாக்குகள் 269
அளிக்கப்பட்ட மொத்த வாக்குகள் 4,095
பதிவு செய்யப்பட்ட வாக்காளர்கள் 30,340
வாக்குவீதம் 13.50%

2011 உள்ளூராட்சித் தேர்தல்

[தொகு]

22 யூலை 2011 இல் இடம்பெற்ற உள்ளூராட்சித் தேர்தல் முடிவுகள்:[6][7]

கூட்டணிகளும் கட்சிகளும் வாக்குகள் % இடங்கள்
  ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி** 2,833 77.45% ?
  தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு* 805 22.01% ?
  ஐக்கிய தேசியக் கட்சி 20 0.55% 0
செல்லுபடியான வாக்குகள் 3,658 100.00% 8
செல்லாத வாக்குகள் 340
அளிக்கப்பட்ட மொத்த வாக்குகள் 3,998
பதிவு செய்யப்பட்ட வாக்காளர்கள் 6,349
வாக்குவீதம் 62.97%
* ஈபிஆர்எல்எஃப் (சு), இதக, புளொட், டெலோ, தவிகூ ஆகிய கட்சிகளை உள்ளடக்கியது.
** ஈபிடிபி, இசுக ஆகிய கட்சிகளை உள்ளடக்கியது.

2018 உள்ளூராட்சித் தேர்தல்கள்

[தொகு]

2018 பெப்ரவரி 10 இல் நடைபெற்ற உள்ளூராட்சித் தேர்தல்களில் முதல் தடவையாகக் கலப்பு முறைத் தேர்தல் அறிமுகப்படுத்தப்பட்டது. இம்முறைப்படி, 8 உறுப்பினர்கள் வட்டாரங்களில் இருந்து நேரடியாகவும், 5 உறுப்பினர்கள் விகிதாசாரப் பிரதிநிதித்துவத் தேர்தல் முறையிலும் மொத்தம் 13 உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.[1][2] தேர்தல் முடிவுகள் வருமாறு:[3]

கூட்டணிகளும்
கட்சிகளும்
வாக்குகள் % வட்டாரங்களில்
இருந்து
தேர்ந்தெடுக்கப்பட்ட
உறுப்பினர்கள்
பெற்ற
வாக்குகளுக்குரிய
கூடுதல் உறுப்பினர்கள்
உரித்தான முழு
உறுப்பினர்களின்
எண்ணிக்கை
  ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி 2,884 51.02% 6 1 7
  தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு * 1,982 35.06% 1 4 5
  அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் 548 9.69% 1 0 1
இலங்கை பொதுசன முன்னணி 142 2.51% 0 0 0
  ஐக்கிய தேசியக் கட்சி 45 0.80% 0 0 0
சோசலிச சமத்துவக் கட்சி 44 0.78% 0 0 0
  சிறீ லங்கா சுதந்திரக் கட்சி 8 0.14% 0 0 0
செல்லுபடியான வாக்குகள் 5,653 100.00% 13 8 13
செல்லாத வாக்குகள் 53
அளிக்கப்பட்ட மொத்த வாக்குகள் 5,706
பதிவு செய்யப்பட்ட வாக்காளர்கள் 7,279
வாக்குவீதம் 78.39%
* இதக, புளொட், டெலோ ஆகிய கட்சிகளை உள்ளடக்கியது.
ஊர்காவற்றுறை பிரதேச சபையில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி மூன்றாவது தடவையாக ஆட்சி அமைத்தது.[8]

2018 தேர்தலில் ஊர்காவற்றுறை பிரதேச சபையின் தலைவராக மருதையினார் ஜெயகாந்தன் (ஊர்காவற்துறை, ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி), துணைத் தலைவராக குணசீலன் கிளாரன்சு (கரம்பன், ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி) ஆகியோர் தெரிவு செய்யப்பட்டனர்.[3]

2025 உள்ளாட்சித் தேர்தல்

[தொகு]

2025 மே 6 இல் நடைபெற்ற உள்ளூராட்சித் தேர்தல் முடிவுகள்:[9] 8 உறுப்பினர்கள் வட்டாரங்களில் இருந்து நேரடியாகவும், 5 உறுப்பினர்கள் விகிதாசாரப் பிரதிநிதித்துவத் தேர்தல் முறையிலும் மொத்தம் 13 உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

கூட்டணிகளும்
கட்சிகளும்
வாக்குகள் % வட்டாரங்களில்
இருந்து
தேர்ந்தெடுக்கப்பட்ட
உறுப்பினர்கள்
பெற்ற
வாக்குகளுக்குரிய
கூடுதல் உறுப்பினர்கள்
உரித்தான முழு
உறுப்பினர்களின்
எண்ணிக்கை
  ஈழ மக்கள் சனநாயகக் கட்சி 1,428 26.63% 4 0 4
  அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் 1,371 25.57% 2 1 3
  தேசிய மக்கள் சக்தி 1,115 20.79% 2 1 3
  இலங்கைத் தமிழரசுக் கட்சி 984 18.35% 0 2 2
சனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணி 385 7.18% 0 1 1
  ஐக்கிய தேசியக் கட்சி 47 0.88% 0 0 0
  ஐக்கிய மக்கள் சக்தி 32 0.60% 0 0 0
செல்லுபடியான வாக்குகள் 5,362 100.00% 8 5 13
செல்லாத வாக்குகள் 90
அளிக்கப்பட்ட மொத்த வாக்குகள் 5,452
பதிவு செய்யப்பட்ட வாக்காளர்கள் 8,628
வாக்குவீதம் 63.19%

2025 தேர்தலில் ஊர்காவற்துறை பிரதேச சபையின் தலைவராக அன்னலிங்கம் அன்னராசா (அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரசு), துணைத் தலைவராக செபஸ்தியாம்பிள்ளை லெனின் ரஞ்சித், (இலங்கைத் தமிழரசுக் கட்சி) ஆகியோர் தெரிவு செய்யப்பட்டனர்.[10]

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 "LG polls cost to hit Rs. 4 b". Daily FT. 5-12-2017. http://www.ft.lk/front-page/LG-polls-cost-to-hit-Rs--4-b/44-644557. பார்த்த நாள்: 23-12-2017. 
  2. 2.0 2.1 "Amended Local Government Elections Bill approved in Parliament". டெய்லி நியூசு. 25-08-2017. 
  3. 3.0 3.1 3.2 "Local Authorities Election - 10.02.2018" (PDF). இலங்கை தேர்தல் திணைக்களம். Archived (PDF) from the original on 12 May 2025. Retrieved 7 June 2025.
  4. "Election commissioner releases results". TamilNet. 30 January 1998.
  5. D.B.S. Jeyaraj (15 February 1998). "The Jaffna Elections". Tamil Times XVII (2): 12–15. பன்னாட்டுத் தர தொடர் எண்:0266-4488. http://www.noolaham.org/wiki/index.php?title=Tamil_Times_1998.02&uselang=en. பார்த்த நாள்: 21 மார்ச் 2017. 
  6. "Local Authorities Election - 23.07.2011 Jaffna District Kayts Pradeshiya Sabha". Department of Elections, Sri Lanka. Archived from the original on 2012-08-05. Retrieved 2017-03-21.
  7. "Local Authorities Election - 2011" (PDF). இலங்கை தேர்தல் திணைக்களம். Archived (PDF) from the original on 21 December 2018. Retrieved 18 June 2025.
  8. "ஊர்காவற்றுறை பிரதேச சபையின் புதிய ஆட்சிப் பொறுப்பை ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி நாளை மீண்டும் ஏற்பு". தினக்குரல். 19 மார்ச் 2018. Retrieved 29 April 2018.
  9. "Local Authorities Election - 6.05.2025 Jaffna District Kayts Pradeshia Sabha" (PDF). Department of Elections, Sri Lanka. Archived (PDF) from the original on 25 May 2025. Retrieved 25 May 2025.
  10. "37 வருட வரலாற்றில் ஊர்காவற்றுறையை இழந்தது EPDP". தமிழ்வின். Archived from the original on 28 சூன் 2025. Retrieved 28 சூன் 2025.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஊர்காவற்றுறை_பிரதேச_சபை&oldid=4318255" இலிருந்து மீள்விக்கப்பட்டது