உள்ளடக்கத்துக்குச் செல்

நல்லூர் பிரதேச சபை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நல்லூர் பிரதேச சபை

Nallur Divisional Council
வகை
வகை
உள்ளூராட்சி சபை
தலைமை
தலைவர்
பரமலிங்கம் வசந்தகுமார், ததேகூ
சூலை 2011 முதல்
பிரதித் தலைவர்
கோமதி இரவிதாஸ், ததேகூ
சூலை 2011 முதல்
உறுப்பினர்கள்12
தேர்தல்கள்
அண்மைய தேர்தல்
2011
வலைத்தளம்
nallurps.org

நல்லூர் பிரதேச சபை (Nallur Divisional Council) இலங்கையின் யாழ்ப்பாண மாவட்டத்தில் அமைந்துள்ள உள்ளூராட்சி அமைப்புக்களுள் ஒன்று ஆகும். நல்லூர் பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள யாழ்ப்பாண மாநகரசபைக்குள் அடங்கும் பகுதிகள் நீங்கலாக ஏனைய பகுதிகள் இப்பிரதேச சபைக்குள் அடங்குகின்றன. இதன் வடக்கில் வலிகாமம் தெற்கு பிரதேச சபையும்; கிழக்கில் வலிகாமம் கிழக்கு, சாவகச்சேரி ஆகிய பிரதேச சபைகளும், நீரேரியும்; தெற்கில் யாழ்ப்பாண மாநகரசபை, நீரேரி என்பனவும்; மேற்கில் வலிகாமம் தெற்கு பிரதேச சபையும் எல்லைகளாக உள்ளன. இச்சபைக்கான உறுப்பினர்களும், சபையின் தலைவரும் நேரடியாக மக்களால் தெரிவுசெய்யப்படுகின்றனர். நல்லூர் பிரதேச சபையில் 12 உறுப்பினர்கள் உள்ளனர். இந்த 12 உறுப்பினர்களும் விகிதாசார பிரதிநிதித்துவ முறையில் இடம்பெறும் தேர்தல் ஊடாகத் தெரிவு செய்யப்படுகின்றனர்.

வட்டாரங்கள்

[தொகு]

நல்லூர் பிரதேச சபைப் பகுதி 12 வட்டாரங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இவ்வட்டாரங்களின் இலக்கம், பெயர், அவற்றில் அடங்கியுள்ள கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் பற்றிய விபரங்களைக் கீழேயுள்ள அட்டவணையில் காணலாம்.[1]

வட்டாரங்கள் கிராம உத்தியோகத்தர் பிரிவுகள்
இல. பெயர் இல. பெயர்
1 காரைக்கால் J115 கோண்டாவில் வடமேற்கு
J117 கோண்டாவில் மத்தி மேற்கு
2 கோண்டாவில் வடக்கு J118 கோண்டாவில் மத்தி கிழக்கு
J119 கோண்டாவில் வடக்கு கிழக்கு
3 கோண்டாவில் கிழக்கு J116 கோண்டாவில் தென்மேற்கு
J120 கோண்டாவில் தென்கிழக்கு
4 கொக்குவில் மேற்கு J124 கொக்குவில் வடமேற்கு
J128 கொக்குவில் மத்தி (மேற்கு)
5 கேணியடி J99 வண்ணார்பண்ணை வடமேற்கு (பகுதி)
J125 கொக்குவில் மேற்கு
J127 கொக்குவில் தென்மேற்கு
6 கொக்குவில் மத்தி J121 கொக்குவில் வடகிழக்கு
J123 கொக்குவில் தென்கிழக்கு (பகுதி)
7 கொக்குவில் கிழக்கு J122 கொக்குவில் கிழக்கு
J126 கொக்குவில் மத்தி கிழக்கு
8 திருநெல்வேலி மத்தி J114 திருநெல்வேலி மத்தி வடக்கு
9 திருநெல்வேலி J110 திருநெல்வேலி மேற்கு
J111 திருநெல்வேலி மத்தி தெற்கு
10 கல்வியங்காடு J112 திருநெல்வேலி தென்கிழக்கு
J113 திருநெல்வேலி வடகிழக்கு
11 அரியாலை கிழக்கு J94 அரியாலை மத்தி வடக்கு (பகுதி)
J123 அரியாலை மத்தி தெற்கு (பகுதி)
12 மணியந்தோட்டம் J89 அரியாலை தென்கிழக்கு
J90 அரியாலை கிழக்கு

தேர்தல் முடிவுகள்

[தொகு]

2011 உள்ளூராட்சித் தேர்தல்

[தொகு]

2011 சூலை 23 அன்று இடம்பெற்ற நல்லூர் பிரதேச சபை தேர்தல் முடிவுகள்:[2]

கூட்டணிகளும் கட்சிகளும் வாக்குகள் % இடங்கள்
  தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு * 10,207 76.84% 10
  ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணி ** 2,238 21.98% 2
  ஐக்கிய தேசியக் கட்சி 105 0.50% 0
செல்லுபடியான வாக்குகள் 12,550 100.00% 12
செல்லாத வாக்குகள் 707
மொத்த வாக்குகள் 13,257
பதிவில் உள்ள வாக்காளர்கள் 22,012
வாக்களித்தோர் 60.23%
* ஈபிஆர்எல்எஃப் (சு), இதக, புளொட், டெலோ, தவிகூ ஆகிய கட்சிகளை உள்ளடக்கியது.
** ஈபிடிபி, இசுக ஆகிய கட்சிகளை உள்ளடக்கியது.

2018 உள்ளூராட்சித் தேர்தல்கள்

[தொகு]

10 பெப்ரவரி 2018 அன்று இடம்பெற்ற தேர்தல் முடிவுகள்:[3]

கூட்டணிகளும் கட்சிகளும் வாக்குகள் % இடங்கள்
  இலங்கைத் தமிழரசுக் கட்சி 5,953 31.87% 6
  அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் 4,339 23.23% 5
  ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி 3,562 19.07% 4
சுயேச்சைக் குழு 1,983 10.62% 2
  சிறீ லங்கா சுதந்திரக் கட்சி 903 4.83% 1
  ஐக்கிய தேசியக் கட்சி 884 4.73% 1
  தமிழர் விடுதலைக் கூட்டணி 716 3.83% 1
இலங்கை பொதுசன முன்னணி 274 1.47% 0
மக்கள் விடுதலை முன்னணி 63 0.34% 0
செல்லுபடியான வாக்குகள் 18,677 100.00% 20
செல்லாத வாக்குகள் 347
பதிவான மொத்த வாக்குகள் 19,024
பதிவில் உள்ள வாக்காளர்கள் 27,100
வாக்களித்தோர் 70.20%

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Ward Map for Nallur Pradeshiya Sabha – Jaffna District" (PDF). Archived from the original (PDF) on 2016-10-20. பார்க்கப்பட்ட நாள் 2017-03-19.
  2. "Local Authorities Election - 23.07.2011 Jaffna District Nallur Pradeshiya Sabha". Department of Elections, Sri Lanka. Archived from the original on 2015-09-28. பார்க்கப்பட்ட நாள் 2017-03-19.
  3. "Local Authorities Election - 23.07.2011 Jaffna District Nallur Pradeshiya Sabha" (PDF). Department of Elections, Sri Lanka.[தொடர்பிழந்த இணைப்பு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=நல்லூர்_பிரதேச_சபை&oldid=3560210" இலிருந்து மீள்விக்கப்பட்டது