பூநகரி பிரதேச சபை
பூனகரி பிரதேச சபை | |
---|---|
வகை | |
வகை | உள்ளூராட்சி |
தலைமை | |
தலைவர் | பொன்னம்பலம் சிறீஸ்கந்தராசா, த. தே. கூ யூலை 2011 முதல் |
துணைத் தலைவர் | தங்கராசா தங்கேஸ்வரன், த. தே. கூ யூலை 2011 முதல் |
உறுப்பினர்கள் | 10 |
தேர்தல்கள் | |
அண்மைய தேர்தல் | இலங்கை உள்ளாட்சித் தேர்தல்கள், 2011 |
பூநகரி பிரதேச சபை (Poonakary Divisional Council) இலங்கையின் கிளிநொச்சி மாவட்டத்தில் அமைந்துள்ள உள்ளூராட்சி அமைப்புக்களுள் ஒன்று ஆகும். பூநகரி பிரதேச செயலாளர் பிரிவில் அடங்கும் பகுதிகள் இப்பிரதேச சபைக்குள் அடங்குகின்றன. இதன் மொத்தப் பரப்பளவு 448.75 சதுர மைல்கள். இதன் வடக்கில் நீரேரியும்; கிழக்கில் கரைச்சி பிரதேச சபையும்; தெற்கில் முல்லைத்தீவு மாவட்டம், மன்னார் மாவட்டம் என்பனவும்; மேற்கில் கடலும் எல்லைகளாக உள்ளன. இச்சபைக்கான உறுப்பினர்களும், சபையின் தலைவரும் நேரடியாக மக்களால் தெரிவுசெய்யப்படுகின்றனர். பூநகரி பிரதேச சபையில் 11 உறுப்பினர்கள் உள்ளனர். இந்த 11 உறுப்பினர்களும் விகிதாசார பிரதிநிதித்துவ முறையில் இடம்பெறும் தேர்தல் ஊடாகத் தெரிவு செய்யப்படுகின்றனர்.
வட்டாரங்கள்
[தொகு]பூநகரி பிரதேச சபைப் பகுதி 11 வட்டாரங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இவ்வட்டாரங்களின் இலக்கம், பெயர், அவற்றில் அடங்கியுள்ள கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் பற்றிய விபரங்களைக் கீழேயுள்ள அட்டவணையில் காணலாம்.[1]
வட்டாரங்கள் | கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் | ||
---|---|---|---|
இல. | பெயர் | இல. | பெயர் |
1 | கௌதாரிமுனை | KN67 | பரமன்கிராய் |
KN68 | கௌதாரிமுனை | ||
2 | ஞானிமடம் | KN63 | ஞானிமடம் |
KN66 | மட்டுவில்நாடு மேற்கு | ||
3 | கொல்லக்குறிச்சி | KN61 | கொல்லக்குறிச்சி |
KN62 | செட்டியாகுறிச்சி | ||
4 | நல்லூர் | KN59 | நல்லூர் |
KN60 | ஆலங்கேணி | ||
5 | ஜெயபுரம் | KN69 | ஜெயபுரம் வடக்கு |
KN70 | ஜெயபுரம் தெற்கு | ||
6 | பல்லவராயன்கட்டு | KN72 | பல்லவராயன்கட்டு |
7 | கரியாலைநாகபடுவான் | KN71 | கரியாலைநாகபடுவான் |
8 | முழங்காவில் | KN73 | முழங்காவில் |
9 | இரணை தீவு | KN74 | நாச்சிக்குடா |
KN77 | இரணை தீவு | ||
10 | பொன்னாவெளி | KN75 | கிராஞ்சி |
KN76 | கிராஞ்சி | ||
11 | பள்ளிக்குடா | KN64 | மட்டுவில்நாடு கிழக்கு |
KN65 | பள்ளிக்குடா |
தேர்தல் முடிவுகள்
[தொகு]2011 உள்ளாட்சித் தேர்தல்
[தொகு]23 யூலை 2011 இல் இடம்பெற்ற உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள்:[2]
கூட்டணிகளும் கட்சிகளும் | வாக்குகள் | % | இடங்கள் | |
---|---|---|---|---|
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு * | 3,827 | 49.90% | 6 | |
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணி ** | 3,689 | 48.10% | 4 | |
இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் | 154 | 2.01% | 0 | |
செல்லுபடியான வாக்குகள் | 7,670 | 100.00% | 10 | |
செல்லாத வாக்குகள் | 799 | |||
மொத்த வாக்குகள் | 8,469 | |||
பதிவில் உள்ள வாக்காளர்கள் | 11,301 | |||
வாக்களித்தோர் | 74.94% |