மாந்தை மேற்கு பிரதேச சபை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மாந்தை மேற்கு பிரதேச சபை (Manthai West Pradeshiya Sabha) இலங்கையின் மன்னார் மாவட்டத்தில் அமைந்துள்ள உள்ளூராட்சி அமைப்புக்களுள் ஒன்று ஆகும். மாந்தை மேற்கு,மடு பிரதேச செயலாளர் பிரிவில் அடங்கும் பகுதிகள் இப்பிரதேச சபைக்குள் அடங்குகின்றன. இதன் மொத்தப் பரப்பளவு 1181.33 சதுர மைல்கள். இதன் வடக்கில் கிளிநொச்சி மாவட்டமும்; கிழக்கில் முல்லைத்தீவு மாவட்டம், வவுனியா மாவட்டம் என்பனவும்; தெற்கில் நானாட்டான் பிரதேச சபை, வவுனியா மாவட்டம் என்பனவும், மேற்கில் மன்னார் பிரதேச சபை, கடல் என்பனவும் எல்லைகளாக உள்ளன. இச்சபைக்கான உறுப்பினர்களும், சபையின் தலைவரும் நேரடியாக மக்களால் தெரிவுசெய்யப்படுகின்றனர். மாந்தை மேற்கு பிரதேச சபையில் 12 உறுப்பினர்கள் உள்ளனர். இந்த 12 உறுப்பினர்களும் விகிதாசார பிரதிநிதித்துவ முறையில் இடம்பெறும் தேர்தல் ஊடாகத் தெரிவு செய்யப்படுகின்றனர்.

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=மாந்தை_மேற்கு_பிரதேச_சபை&oldid=3902773" இலிருந்து மீள்விக்கப்பட்டது