நெடுந்தீவு பிரதேச சபை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
நெடுந்தீவு பிரதேச சபை
வகை
வகை
உள்ளூராட்சி
தலைமை
தலைவர்
பற்றிக் ரொசான், ததேகூ
பெப்ரவரி 10, 2018
உறுப்பினர்கள்9
தேர்தல்கள்
அண்மைய தேர்தல்
இலங்கை உள்ளூராட்சி சபைத் தேர்தல்கள், 2018

நெடுந்தீவு பிரதேச சபை (Delft Divisional Council) இலங்கையின் யாழ்ப்பாண மாவட்டத்தில் அமைந்துள்ள உள்ளூராட்சி அமைப்புக்களுள் ஒன்று ஆகும். நெடுந்தீவு பிரதேச செயலாளர் பிரிவில் அடங்கும் பகுதிகள் இப்பிரதேச சபைக்குள் அடங்குகின்றன. இது ஒரேயொரு தீவை மட்டுமே உள்ளடக்கியிருப்பதால் முழுவதுமாக இது கடலினால் சூழப்பட்டுள்ளது. இச்சபைக்கான உறுப்பினர்கள் நேரடியாக மக்களால் தெரிவுசெய்யப்படுகின்றனர். 2018 ஆம் ஆண்டு முதல் கலப்பு முறைத் தேர்தல் அறிமுகப்படுத்தப்பட்டது. இம்முறைப்படி, நெடுந்தீவு பிரதேச சபைக்கு 8 உறுப்பினர்கள் வட்டாரங்களில் இருந்து நேரடியாகவும், 5 உறுப்பினர்கள் விகிதாசாரப் பிரதிநிதித்துவத் தேர்தல் முறையிலும், மொத்தம் 13 உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்.[1][2]

வட்டாரங்கள்[தொகு]

ஊர்காவற்றுறைப் பிரதேச சபைப் பகுதி 8 வட்டாரங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இவ்வட்டாரங்களின் இலக்கம், பெயர் ஆகிய விபரங்களையும், அவ்வட்டாரங்களுள் அடங்கிய கிராம உத்தியோகத்தர் பிரிவுகளின் இலக்கம், பெயர்கள் முதலியவற்றையும் கீழுள்ள அட்டவணையில் காணலாம்.[3]

வட்டாரங்கள் கிராம உத்தியோகத்தர் பிரிவுகள்
இல. பெயர் இல. பெயர்
1 நெடுந்தீவு ஒன்று J01 நெடுந்தீவு மேற்கு
2 நெடுந்தீவு இரண்டு J03 நெடுந்தீவு மத்தி மேற்கு (பகுதி)
3 நெடுந்தீவு மூன்று J02 நெடுந்தீவு தெற்கு
4 நெடுந்தீவு நான்கு J03 நெடுந்தீவு மத்தி மேற்கு (பகுதி)
5 நெடுந்தீவு ஐந்து J03 நெடுந்தீவு மத்தி மேற்கு (பகுதி)
6 நெடுந்தீவு ஆறு J04 நெடுந்தீவு மத்தி
7 நெடுந்தீவு ஏழு J05 நெடுந்தீவு மத்தி கிழக்கு
8 நெடுந்தீவு எட்டு J06 நெடுந்தீவு கிழக்கு

தேர்தல் முடிவுகள்[தொகு]

1998 உள்ளூராட்சித் தேர்தல்[தொகு]

29 சனவரி 1998 இல் இடம்பெற்ற உள்ளூராட்சித் தேர்தல் முடிவுகள்:[4][5]

கூட்டணிகளும் கட்சிகளும் வாக்குகள் % இடங்கள்
  ஈழ மக்கள் சனநாயகக் கட்சி 1,484 82.44% 8
  சனநாயக மக்கள் விடுதலை முன்னணி (புளொட்) 293 16.28% 1
  ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி 13 0.72% 0
  தமிழீழ விடுதலை இயக்கம் 10 0.56% 0
செல்லுபடியான வாக்குகள் 1,800 100.00% 9
செல்லாத வாக்குகள் 125
மொத்த வாக்குகள் 1,925
பதிவில் உள்ள வாக்காளர்கள் 4,209
வாக்களித்தோர் 45.74%

2011 உள்ளூராட்சித் தேர்தல்[தொகு]

23 யூலை 2011 இல் இடம்பெற்ற உள்ளூராட்சித் தேர்தல் முடிவுகள்:[6]

கூட்டணிகளும் கட்சிகளும் வாக்குகள் % இடங்கள்
  ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி ** 1,609 84.33% 8
  தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு * 216 11.32% 1
  ஐக்கிய தேசியக் கட்சி 83 4.35% 0
செல்லுபடியான வாக்குகள் 1,908 100.00% 9
செல்லாத வாக்குகள் 102
மொத்த வாக்குகள் 2,010
பதிவில் உள்ள வாக்காளர்கள் 3,085
வாக்களித்தோர் 65.15%
* ஈபிஆர்எல்எஃப் (சு), இதக, புளொட், டெலோ, தவிகூ ஆகிய கட்சிகளை உள்ளடக்கியது.
** ஈபிடிபி, இசுக ஆகிய கட்சிகளை உள்ளடக்கியது.

2018 உள்ளூராட்சித் தேர்தல்கள்[தொகு]

2018 பெப்ரவரி 10 இல் நடைபெற்ற உள்ளூராட்சித் தேர்தல்களில் முதல் தடவையாகக் கலப்பு முறைத் தேர்தல் அறிமுகப்படுத்தப்பட்டது. இம்முறைப்படி, 8 உறுப்பினர்கள் வட்டாரங்களில் இருந்து நேரடியாகவும், 5 உறுப்பினர்கள் விகிதாசாரப் பிரதிநிதித்துவத் தேர்தல் முறையிலும் மொத்தம் 31 உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.[1][2] தேர்தல் முடிவுகள் வருமாறு:[7]

கூட்டணிகளும்
கட்சிகளும்
வாக்குகள் % பெற்ற
வாக்குகளுக்குரிய
உறுப்பினர்கள்
வட்டாரங்களில்
இருந்து தேர்வு
மொத்தம்
  ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி 1,246 49.70% 6 6 6
  தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு * 808 32.23% 4 2 4
சுயேச்சைக் குழு 292 11.65% 2 0 2
  ஐக்கிய தேசியக் கட்சி 97 3.87% 1 0 1
  அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் 39 1.56% 0 0 0
  தமிழர் விடுதலைக் கூட்டணி ** 156 2.68% 0 0 0
  சிறீ லங்கா சுதந்திரக் கட்சி 25 1.00% 0 0 0
செல்லுபடியான வாக்குகள் 2,507 100.00% 13
செல்லாத வாக்குகள் 17
பதிவான மொத்த வாக்குகள் 2,524
பதிவில் உள்ள வாக்காளர்கள் 3,174
வாக்களித்தோர் 79.52%
* இதக, புளொட், டெலோ ஆகிய கட்சிகளை உள்ளடக்கியது.
** தவிகூ, ஈபிஆர்எல்எஃப் (சு) ஆகிய கட்சிகளை உள்ளடக்கியது.
நெடுந்தீவு பிரதேச சபையில் ஐதேக, மற்றும் சுயேட்சைக் குழுவின் ஆதரவுடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆட்சி அமைத்தது.[8]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 "LG polls cost to hit Rs. 4 b". Daily FT. 5-12-2017. http://www.ft.lk/front-page/LG-polls-cost-to-hit-Rs--4-b/44-644557. பார்த்த நாள்: 23-12-2017. 
  2. 2.0 2.1 "Amended Local Government Elections Bill approved in Parliament". டெய்லி நியூசு. 25-08-2017. 
  3. Ward Map of Delft Pradeshiya Sabha – Jaffna District[தொடர்பிழந்த இணைப்பு]
  4. "Election commissioner releases results". TamilNet (30 January 1998).
  5. D.B.S. Jeyaraj (15 February 1998). "The Jaffna Elections". Tamil Times XVII (2): 12–15. பன்னாட்டுத் தர தொடர் எண்:0266-4488. http://www.noolaham.org/wiki/index.php?title=Tamil_Times_1998.02&uselang=en. பார்த்த நாள்: 21 மார்ச் 2017. 
  6. "Local Authorities Election - 23.07.2011 Jaffna District Delft Pradeshiya Sabha". Department of Elections, Sri Lanka. மூல முகவரியிலிருந்து 2012-08-05 அன்று பரணிடப்பட்டது.
  7. "Local Authorities Election - 10.02.2018 Jaffna District Chavakachcheri Pradeshiya Sabha". இலங்கை தேர்தல் திணைக்களம்.[தொடர்பிழந்த இணைப்பு]
  8. "நெடுந்தீவில் ஆட்சியமைத்தது கூட்டமைப்பு". Global Tamil News (6-04-2018). பார்த்த நாள் 28-04-2018.