உள்ளடக்கத்துக்குச் செல்

கரைச்சி பிரதேச சபை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கரைச்சி பிரதேச சபை
வகை
வகை
உள்ளூராட்சி
தலைமை
தலைவர்
வைத்திலிங்கம் குகராசா, த. தே. கூ
யூலை 2011 முதல்
துணைத் தலைவர்
வடிவேல் நகுலேஸ்வரன், த. தே. கூ
யூலை 2011 முதல்
உறுப்பினர்கள்19
தேர்தல்கள்
அண்மைய தேர்தல்
இலங்கை உள்ளாட்சித் தேர்தல்கள், 2011

கரைச்சி பிரதேச சபை (Karachchi Divisional Council) இலங்கையின் கிளிநொச்சி மாவட்டத்தில் அமைந்துள்ள உள்ளூராட்சி அமைப்புக்களுள் ஒன்று ஆகும். கரைச்சி பிரதேச செயலாளர் பிரிவில் அடங்கும் பகுதிகள் இப்பிரதேச சபைக்குள் அடங்குகின்றன. இதன் மொத்தப் பரப்பளவு 620.66 சதுர மைல்கள். இதன் வடக்கில் பச்சிலைப்பள்ளி பிரதேச சபை, யாழ்ப்பாண மாவட்டம் என்பனவும்; கிழக்கில் முல்லைத்தீவு மாவட்டமும்; தெற்கில் முல்லைத்தீவு மாவட்டம், மன்னார் மாவட்டம் என்பனவும்; மேற்கில் பூநகரி பிரதேச சபையும் எல்லைகளாக உள்ளன. இச்சபைக்கான உறுப்பினர்களும், சபையின் தலைவரும் நேரடியாக மக்களால் தெரிவுசெய்யப்படுகின்றனர். கரைச்சி பிரதேச சபையில் 19 உறுப்பினர்கள் உள்ளனர். இந்த 19 உறுப்பினர்களும் விகிதாசார பிரதிநிதித்துவ முறையில் இடம்பெறும் தேர்தல் ஊடாகத் தெரிவு செய்யப்படுகின்றனர்.

வட்டாரங்கள்

[தொகு]

கரைச்சி பிரதேச சபைப் பகுதி 20 வட்டாரங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இவ்வட்டாரங்களின் இலக்கம், பெயர், அவற்றில் அடங்கியுள்ள கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் பற்றிய விபரங்களைக் கீழேயுள்ள அட்டவணையில் காணலாம்.[1]

வட்டாரங்கள் கிராம உத்தியோகத்தர் பிரிவுகள்
இல. பெயர் இல. பெயர்
1 பரந்தன் KN43 குமாரபுரம்
KN44 பரந்தன்
KN45 உமையாள்புரம்
KN46 ஆனையிறவு
2 முரசுமோட்டை KN47 தட்டுவான்கொட்டி
KN48 குரக்கன்கட்டு
KN49 ஊரியான்
KN50 முரசுமோட்டை
3 கண்டாவளை KN51 கண்டாவளை
KN54 தர்மபுரம் மேற்கு
KN56 புளியம்பொக்கணை
4 புன்னைநீராவி KN51 புன்னைநீராவி
5 பிரமந்தனாறு KN51 பிரமந்தனாறு
6 கல்மடுநகர் KN53 கல்மடுநகர்
KN55 தர்மபுரம் கிழக்கு
7 இராமநாதபுரம் KN41 இராமநாதபுரம்
KN42 மாவடியம்மன்
8 வட்டக்கச்சி KN38 வட்டக்கச்சி
KN39 சனசமூக நிலையம்
KN40 மாயவனூர்
9 கனகாம்பிகைக்குளம் KN17 தொண்டைமான்நகர்
KN18 கனகாம்பிகைக்குளம்
KN19 அம்பாள்நகர்
10 திருவையாறு KN20 திருவையாறு
KN21 திருவையாறு மேற்கு
KN24 மருதநகர்
KN25 பண்ணன்கண்டி
11 கிளிநொச்சி நகரம் KN16 ஆனந்தபுரம்
KN22 இரத்தினபுரம்
KN23 கிளிநொச்சி நகரம்
12 கணேசபுரம் KN27 திருநகர் தெற்கு
KN28 திருநகர் வடக்கு
KN29 கணேசபுரம்
KN30 ஜெயந்திநகர்
13 உதயநகர் KN10 விவேகானந்தநகர்
KN12 உதயநகர் கிழக்கு
KN13 உதயநகர் மேற்கு
KN26 கனகபுரம்
14 கிருஷ்ணபுரம் KN11 கிருஷ்ணபுரம்
KN14 அம்பாள்குளம்
KN16 ஆனந்தபுரம்
15 பாரதிபுரம் KN07 பொன்னகர்
KN08 பாரதிபுரம்
KN09 மலையாளபுரம்
16 கோணாவில் KN06 கோணாவில்
KN36 ஊத்துப்புலம்
17 அக்கராயன் KN03 கண்ணகைபுரம்
KN04 கந்தபுரம்
KN05 அக்கராயன்குளம்
18 வன்னேரிக்குளம் KN01 வன்னேரிக்குளம்
KN02 ஆனைவிழுந்தான்குளம்
19 உருத்திரபுரம் KN33 உருத்திரபுரம் கிழக்கு
KN34 உருத்திரபுரம் மேற்கு
KN35 சிவநகர்
KN37 புதுமுறிப்பு
20 பெரியபரந்தன் KN31 பெரியபரந்தன்
KN32 உருத்திரபுரம் வடக்கு

தேர்தல் முடிவுகள்

[தொகு]

2011 உள்ளாட்சித் தேர்தல்

[தொகு]

23 யூலை 2011 உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள்:[2]

கூட்டணியும் கட்சிகளும் வாக்குகள் % இடங்கள்
  தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு * 18,609 74.80% 15
  ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணி ** 6,097 24.51% 4
  ஐக்கிய தேசியக் கட்சி 133 0.53% 0
  மக்கள் விடுதலை முன்னணி 39 0.16% 0
செல்லுபடியான வாக்குகள் 24,878 100.00% 19
செல்லாத வாக்குகள் 3,190
மொத்த வாக்குகள் 28,068
பதிவில் உள்ள வாக்காளர்கள் 42,800
வாக்களித்தோர் 65.58%
* ஈபிஆர்எல்எஃப் (சு), இதக, புளொட், டெலோ, தவிகூ ஆகிய கட்சிகளை உள்ளடக்கியது.
** ஈபிடிபி, இசுக ஆகிய கட்சிகளை உள்ளடக்கியது.

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Ward Map for Karachchi Pradeshiya Sabha – Jaffna District" (PDF). Archived from the original (PDF) on 2017-12-15. பார்க்கப்பட்ட நாள் 2017-03-26.
  2. "Local Authorities Election - 23.07.2011 Kilinochchi District Karachchi Pradeshiya Sabha". Department of Elections, Sri Lanka.[தொடர்பிழந்த இணைப்பு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=கரைச்சி_பிரதேச_சபை&oldid=3548217" இலிருந்து மீள்விக்கப்பட்டது