வடமராட்சி தென்மேற்கு பிரதேச சபை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
வடமராட்சி தென்மேற்கு பிரதேச சபை
வகை
வகை
உள்ளூராட்சி
தலைமை
தவிசாளர்
ஐங்கரன் தங்கவேலாயுதம், த. தே. கூ
2018
துணைத் தலைவர்
பொன்னையா, த. தே. கூ
2018
உறுப்பினர்கள்31
தேர்தல்கள்
அண்மைய தேர்தல்
இலங்கை உள்ளூராட்சித் தேர்தல்கள், 2011

வடமராட்சி தென்மேற்கு பிரதேச சபை (Vadamarachchi South West Divisional Council) இலங்கையின் யாழ்ப்பாண மாவட்டத்தில் அமைந்துள்ள உள்ளூராட்சி அமைப்புக்களுள் ஒன்று ஆகும். வடமராட்சி தென்மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் அடங்கும் பகுதிகள் இப்பிரதேச சபைக்குள் அடங்குகின்றன. இதன் வடக்கில் வல்வெட்டித்துறை நகரசபை, பருத்தித்துறை பிரதேச சபை என்பனவும்; கிழக்கில் பருத்தித்துறை, வடமராட்சி கிழக்கு ஆகிய பிரதேச சபைகளும்; தெற்கில் சாவகச்சேரி பிரதேச சபையும்; மேற்கில் பருத்தித்துறை பிரதேச சபை, வல்வெட்டித்துறை நகரசபை, வலிகாமம் கிழக்கு பிரதேச சபை என்பனவும் எல்லைகளாக உள்ளன. இச்சபைக்கான உறுப்பினர்களும், சபையின் தலைவரும் நேரடியாக மக்களால் தெரிவுசெய்யப்படுகின்றனர். வடமராட்சி தென்மேற்கு பிரதேச சபையில் 19 உறுப்பினர்கள் உள்ளனர். இந்த 19 உறுப்பினர்களும் விகிதாசார பிரதிநிதித்துவ முறையில் இடம்பெறும் தேர்தல் ஊடாகத் தெரிவு செய்யப்படுகின்றனர்.

வட்டாரங்கள்[தொகு]

வடமராட்சி தென்மேற்கு பிரதேச சபைப் பகுதி 19 வட்டாரங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இவ்வட்டாரங்களின் இலக்கம், பெயர், அவற்றில் அடங்கியுள்ள கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் பற்றிய விபரங்களைக் கீழேயுள்ள அட்டவணையில் காணலாம்.[1]

வட்டாரங்கள் கிராம உத்தியோகத்தர் பிரிவுகள்
இல. பெயர் இல. பெயர்
1 உடுப்பிட்டி வடக்கு J353 உடுப்பிட்டி வடக்கு
2 வல்வெட்டி J355 வல்வெட்டி (பகுதி)
J356 வல்வெட்டி மத்தி
3 சமரபாகு J357 சமரபாகு
J361 கரணவாய் வடமேற்கு
4 நவிண்டில் J360 கரணவாய் வடக்கு
5 வதிரி J375 நெல்லியடி வடக்கு
J379 அல்வாய் தெற்கு
6 அல்வாய் J378 அல்வாய்
J380 அல்வாய் கிழக்கு
7 ஆத்தை J377 நெல்லியடி கிழக்கு
J381 ஆத்தை
8 நெல்லியடி நகரம் J362 கரணவாய் மத்தி
J376 நெல்லியடி
9 இமையாணன் J358 இமையாணன்
10 இமையாணன் மேற்கு J359 இமையாணன் மேற்கு
11 உடுப்பிட்டி J352 உடுப்பிட்டி
J354 உடுப்பிட்டி தெற்கு
12 கரணவாய் J349 கரணவாய் மேற்கு
13 வீரபத்திராயன் J348 கரணவாய் தெற்கு
J350 கரணவாய்
14 உச்சில் J351 கரணவாய் கிழக்கு
J365 கரவெட்டி தெற்கு
J382 கப்பூது
15 கரவெட்டி வடக்கும் மேற்கும் J363 கரவெட்டி மேற்கு
J364 கரவெட்டி வடக்கு
16 கரவெட்டி J366 மாத்தோணி
J367 கரவெட்டி மத்தி
17 துன்னாலை J372 துன்னாலை
J373 துன்னாலை மத்தி
J374 துன்னாலை மேற்கு
18 கட்டைவேலி J368 கட்டைவேலி கிழக்கு
J369 கட்டைவேலி
19 துன்னாலை தெற்கும் கிழக்கும் J370 துன்னாலை தெற்கு
J371 துன்னாலை கிழக்கு

தேர்தல் முடிவுகள்[தொகு]

1998 உள்ளூராட்சித் தேர்தல்[தொகு]

29 சனவரி 1998 இல் இடம்பெற்ற உள்ளூராட்சித் தேர்தல் முடிவுகள்:[2][3]

கூட்டணிகளும் கட்சிகளும் வாக்குகள் % இடங்கள்
  ஈழ மக்கள் சனநாயகக் கட்சி 3,888 45.11% 9
  சனநாயக மக்கள் விடுதலை முன்னணி (புளொட்) 2,940 34.11% 6
  தமிழீழ விடுதலை இயக்கம் 1,236 14.34% 2
  ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி 554 6.43% 0
செல்லுபடியான வாக்குகள் 8,618 100.00% 17
செல்லாத வாக்குகள் 1,868
மொத்த வாக்குகள் 10,486
பதிவில் உள்ள வாக்காளர்கள் 45,214
வாக்களித்தோர் 23.19%

2011 உள்ளூராட்சித் தேர்தல்[தொகு]

23 யூலை 2011 இல் இடம்பெற்ற உள்ளூராட்சித் தேர்தல் முடிவுகள்::[4]

கூட்டணிகளும் கட்சிகளும் வாக்குகள் % இடங்கள்
  தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு * 12,454 81.46% 15
  ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி ** 2,522 16.50% 3
  ஐக்கிய தேசியக் கட்சி 290 1.90% 0
சுயேச்சை 22 0.14% 0
செல்லுபடியான வாக்குகள் 15,288 100.00% 18
செல்லாத வாக்குகள் 1,386
மொத்த வாக்குகள் 16,674
பதிவில் உள்ள வாக்காளர்கள் 32,539
வாக்களித்தோர் 51.24%
* ஈபிஆர்எல்எஃப் (சு), இதக, புளொட், டெலோ, தவிகூ ஆகிய கட்சிகளை உள்ளடக்கியது.
** ஈபிடிபி, இசுக ஆகிய கட்சிகளை உள்ளடக்கியது.

மேற்கோள்கள்[தொகு]

  1. Ward Map for Vadamarachchi South West Pradeshiya Sabha – Jaffna District[தொடர்பிழந்த இணைப்பு]
  2. "Election commissioner releases results". TamilNet. 30 January 1998.
  3. D.B.S. Jeyaraj (15 February 1998). "The Jaffna Elections". Tamil Times XVII (2): 12–15. பன்னாட்டுத் தர தொடர் எண்:0266-4488. http://www.noolaham.org/wiki/index.php?title=Tamil_Times_1998.02&uselang=en. பார்த்த நாள்: 21 மார்ச் 2017. 
  4. "Local Authorities Election - 23.07.2011 Jaffna District Vadamaradchi South West Pradeshiya Sabha". Department of Elections, Sri Lanka.[தொடர்பிழந்த இணைப்பு]