நானாட்டான் பிரதேச சபை
Jump to navigation
Jump to search
நானாட்டான் பிரதேச சபை (Nanattan Divisional Council) இலங்கையின் மன்னார் மாவட்டத்தில் அமைந்துள்ள உள்ளூராட்சி அமைப்புக்களுள் ஒன்று ஆகும். நானாட்டான் மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் அடங்கும் பகுதிகள் இப்பிரதேச சபைக்குள் அடங்குகின்றன. இதன் மொத்தப் பரப்பளவு 271.28 சதுர மைல்கள். இதன் வடக்கில் மன்னார் பிரதேச சபையும்; கிழக்கில் மாந்தை மேற்கு பிரதேச சபை, வவுனியா மாவட்டம் என்பனவும்; தெற்கில் அனுராதபுர மாவட்டமும், மேற்கில் முசலி பிரதேச சபை, கடல் என்பனவும் எல்லைகளாக உள்ளன. இச்சபைக்கான உறுப்பினர்களும், சபையின் தலைவரும் நேரடியாக மக்களால் தெரிவுசெய்யப்படுகின்றனர். நானாட்டான் பிரதேச சபையில் 12 உறுப்பினர்கள் உள்ளனர். இந்த 12 உறுப்பினர்களும் விகிதாசார பிரதிநிதித்துவ முறையில் இடம்பெறும் தேர்தல் ஊடாகத் தெரிவு செய்யப்படுகின்றனர்.