முசலி பிரதேச சபை
முசலி பிரதேச சபை (Musali Divisional Council) இலங்கையின் மன்னார் மாவட்டத்தில் அமைந்துள்ள உள்ளூராட்சி அமைப்புக்களுள் ஒன்று ஆகும். முசலி பிரதேச செயலாளர் பிரிவில் அடங்கும் பகுதிகள் இப்பிரதேச சபைக்குள் அடங்குகின்றன. இதன் மொத்தப் பரப்பளவு 458.25 சதுர மைல்கள். இதன் வடக்கில் நானாட்டான் பிரதேச சபையும்; கிழக்கில் நானாட்டான் பிரதேச சபை, அனுராதபுரம் மாவட்டம் என்பனவும்; தெற்கில் புத்தளம் மாவட்டமும், மேற்கில் கடலும் எல்லைகளாக உள்ளன. இச்சபைக்கான உறுப்பினர்களும், சபையின் தலைவரும் நேரடியாக மக்களால் தெரிவுசெய்யப்படுகின்றனர். முசலி பிரதேச சபையில் 9 உறுப்பினர்கள் உள்ளனர். இந்த 9 உறுப்பினர்களும் விகிதாசார பிரதிநிதித்துவ முறையில் இடம்பெறும் தேர்தல் ஊடாகத் தெரிவு செய்யப்படுகின்றனர்.
வட்டாரங்கள்[தொகு]
முசலி பிரதேச சபைப் பகுதி 10 வட்டாரங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இவ்வட்டாரங்களின் இலக்கம், பெயர், அவற்றில் அடங்கியுள்ள கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் பற்றிய விபரங்களைக் கீழேயுள்ள அட்டவணையில் காணலாம்.[1]
வட்டாரங்கள் | கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் | ||
---|---|---|---|
இல. | பெயர் | இல. | பெயர் |
1 | அரிப்பு | MN134 | அரிப்பு கிழக்கு |
KN135 | அரிப்பு மேற்கு | ||
2 | பண்டாரவெளி | MN137 | பண்டாரவெளி |
MN138 | பூநொச்சிக்குளம் | ||
3 | புதுவெளி | MN136 | மேதன்வெளி |
MN146 | புதுவெளி | ||
4 | சிலாவத்துறை | MN144 | சிலாவத்துறை |
MN145 | சவேரியார்புரம் | ||
5 | பொற்கேணி | MN141 | பெரியபுல்லச்சி பொற்கேணி |
MN142 | சின்னப்புல்லச்சி பொற்கேணி | ||
6 | மருதமடு வேப்பங்குளம் | MN139 | மருதமடு |
MN140 | வேப்பங்குளம் | ||
7 | பாலைக்குழி | MN151 | மறிச்சுக்கட்டி |
MN152 | பாலைக்குழி | ||
8 | கரடிக்குழி | MN150 | கரடிக்குழி |
MN153 | முள்ளிக்குளம் | ||
9 | கொண்டச்சி | MN148 | கொக்குப்பிடயன் |
MN149 | கொண்டச்சி | ||
10 | முசலி | MN143 | ஆத்திமுறிப்பு |
MN147 | கூளங்குளம் |