வலிகாமம் தெற்கு பிரதேச சபை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
வலிகாமம் தெற்கு பிரதேச சபை
வகை
வகை
உள்ளாட்சி
தலைமை
தலைவர்
தியாகராசா பிரகாஷ், த. தே. கூ
யூலை 2011
துணைத் தலைவர்
இராசையா பரமேஸ்வரலிங்கம், த. தே. கூ
யூலை 2011
உறுப்பினர்கள்16
தேர்தல்கள்
அண்மைய தேர்தல்
இலங்கை உள்ளூராட்சித் தேர்தல்கள், 2011

வலிகாமம் தெற்கு பிரதேச சபை (Valikamam South Divisional Council) இலங்கையின் யாழ்ப்பாண மாவட்டத்தில் அமைந்துள்ள உள்ளூராட்சி அமைப்புக்களுள் ஒன்று ஆகும். வலிகாமம் தெற்கு பிரதேச செயலாளர் பிரிவில் அடங்கும் பகுதிகள் இப்பிரதேச சபைக்குள் அடங்குகின்றன. இதன் மொத்தப் பரப்பளவு 55.24 சதுர மைல்கள். இதன் வடக்கில் வலிகாமம் வடக்கு பிரதேச சபையும்; கிழக்கில் வலிகாமம் கிழக்கு பிரதேச சபையும்; தெற்கில் நல்லூர் பிரதேச சபையும்; மேற்கில் வலிகாமம் தென்மேற்கு பிரதேச சபையும் எல்லைகளாக உள்ளன. இச்சபைக்கான உறுப்பினர்களும், சபையின் தலைவரும் நேரடியாக மக்களால் தெரிவுசெய்யப்படுகின்றனர். வலிகாமம் வடக்கு பிரதேச சபையில் 16 உறுப்பினர்கள் உள்ளனர். இந்த 16 உறுப்பினர்களும் விகிதாசார பிரதிநிதித்துவ முறையில் இடம்பெறும் தேர்தல் ஊடாகத் தெரிவு செய்யப்படுகின்றனர்.

வட்டாரங்கள்[தொகு]

வலிகாமம் தெற்கு பிரதேச சபைப் பகுதி 18 வட்டாரங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இவ்வட்டாரங்களின் இலக்கம், பெயர், அவற்றில் அடங்கியுள்ள கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் பற்றிய விபரங்களைக் கீழேயுள்ள அட்டவணையில் காணலாம்.[1]

வட்டாரங்கள் கிராம உத்தியோகத்தர் பிரிவுகள்
இல. பெயர் இல. பெயர்
1 ஏழாலை வடகிழக்கு J204 ஏழாலை கிழக்கு (பகுதி)
J205 ஏழாலை வடக்கு
2 ஏழாலை மேற்கு J201 ஏழாலை மேற்கு
J202 ஏழாலை தென்மேற்கு (பகுதி)
3 ஏழாலை மத்தி J204 ஏழாலை கிழக்கு (பகுதி)
J206 ஏழாலை மத்தி
4 குப்பிளான் J210 குப்பிளான் தெற்கு
J211 குப்பிளான் வடக்கு
5 புன்னாலைக்கட்டுவன் J207 புன்னாலைக்கட்டுவன் தெற்கு
J208 புன்னாலைக்கட்டுவன் வடக்கு
6 ஏழாலை தெற்கு J203 ஏழாலை தெற்கு (பகுதி)
7 சுன்னாகம் கிழக்கு J195 சுன்னாகம் நகரம் வடக்கு
J197 சுன்னாகம் நகரம் கிழக்கு
8 சுன்னாகம் மேற்கு J198 சுன்னாகம் நகரம் மத்தி
J199 சுன்னாகம் நகரம் மேற்கு
9 கந்தரோடை J186 உடுவில் வடக்கு (பகுதி)
J200 கந்தரோடை
10 சங்குவேலி J187 சங்குவேலி
11 உடுவில் வடக்கு J185 உடுவில் மத்தி வடக்கு
J186 உடுவில் வடக்கு (பகுதி)
12 சுன்னாகம் தெற்கு J196 சுன்னாகம் நகரம் தெற்கு
13 இணுவில் கிழக்கு J189 இணுவில் கிழக்கு
J190 இணுவில் வடகிழக்கு
14 உடுவில் தெற்கு J182 உடுவில் தென்மேற்கு
J184 உடுவில் மத்தி (பகுதி)
15 உடுவில் தென்கிழக்கு J183 உடுவில் தென்கிழக்கு
J184 உடுவில் மத்தி (பகுதி)
16 இணுவில் மேற்கு J188 இணுவில் தென்மேற்கு
J191 இணுவில் மேற்கு
17 தாவடி வடக்கு J193 தாவடி கிழக்கு
J194 தாவடி வடக்கு
18 தாவடி தெற்கு J192 தாவடி தெற்கு

தேர்தல் முடிவுகள்[தொகு]

1998 உள்ளூராட்சித் தேர்தல்[தொகு]

29 சனவரி 1998 இல் இடம்பெற்ற உள்ளூராட்சித் தேர்தல் முடிவுகள்:[2][3]

கூட்டணிகளும் கட்சிகளும் வாக்குகள் % இடங்கள்
  ஈழ மக்கள் சனநாயகக் கட்சி 3,542 45.31% 8
  சனநாயக மக்கள் விடுதலை முன்னணி (புளொட்) 2,659 34.01% 5
  ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி 1,121 14.34% 2
  தமிழீழ விடுதலை இயக்கம் 496 6.34% 1
செல்லுபடியான வாக்குகள் 7,818 100.00% 16
செல்லாத வாக்குகள் 939
மொத்த வாக்குகள் 8,757
பதிவில் உள்ள வாக்காளர்கள் 41,444
வாக்களித்தோர் 21.13%

2011 உள்ளாட்சித் தேர்தல்கள்[தொகு]

23 யூலை 2011 இல் இடம்பெற்ற உள்ளூராட்சித் தேர்தல் முடிவுகள்:[4]

கூட்டணிகளும் கட்சிகளும் வாக்குகள் % இடங்கள்
  தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு * 12,895 74.29% 13
  ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணி ** 4,027 23.20% 3
  ஐக்கிய தேசியக் கட்சி 435 2.51% 0
செல்லுபடியான வாக்குகள் 17,357 100.00% 16
செல்லாத வாக்குகள் 1,674
மொத்த வாக்குகள் 19,031
பதிவில் உள்ள வாக்காளர்கள் 32,857
வாக்களித்தோர் 57.92%
* ஈபிஆர்எல்எஃப் (சு), இதக, புளொட், டெலோ, தவிகூ ஆகிய கட்சிகளை உள்ளடக்கியது.
** ஈபிடிபி, இசுக ஆகிய கட்சிகளை உள்ளடக்கியது.

மேற்கோள்கள்[தொகு]