இணுவில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
இணுவில்
Gislanka locator.svg
Red pog.svg
இணுவில்
மாகாணம்
 - மாவட்டம்
வட மாகாணம்
 - யாழ்ப்பாணம்
அமைவிடம் 9°43′48″N 80°01′18″E / 9.729960°N 80.021744°E / 9.729960; 80.021744
கால வலயம் SST (ஒ.ச.நே.+5:30)

இணுவில் (Inuvil), இலங்கையின் வடமாகாணத்தில், யாழ்ப்பாண நகரத்துக்கு வடக்கில் சுமார் 5 மைல்கள் தொலைவில் அமைந்துள்ள ஒர் ஊர் ஆகும். இது யாழ்ப்பாணம் - காங்கேசன்துறை வீதியில் அமைந்துள்ளது. இவ்வீதி இந்த ஊரைக் கிழக்கு இணுவில், மேற்கு இணுவில் என இரு பகுதிகளாகப் பிரிக்கின்றது. இணுவிலுக்கு வடக்கில் உடுவிலும், கிழக்கில் உரும்பிராயும், தெற்கில் கோண்டாவிலும், மேற்குத் திசையில் சுதுமலையும் அமைந்துள்ளன. வேளாண்மைச் செய்கைக்கான சிறு தோட்டங்கள் நிறைந்துள்ள இவ்வூர் புகையிலைச் செய்கைக்குப் பெயர் பெற்றது.

அமெரிக்க மிஷனால் நிறுவப்பட்ட மகப்பேற்று மருத்துவமனையான மக்லியொட் மருத்துவமனை மிகவும் புகழ் பெற்றது. சில பத்தாண்டுகளுக்கு முன்பு வரை குடாநாட்டின் பல பகுதிகளிலிருந்தும் மக்கள் இம் மருத்துவ மனைக்குப் பெருமளவில் வந்தார்கள்.

இணுவிலில் அமைந்த புகழ்பெற்ற கல்வி நிறுவனங்கள்[தொகு]

இணுவில் தந்த புகழ் பூத்தோர்[தொகு]

கலைஞர்கள்[தொகு]

 • விஸ்வலிங்கம் தவில்
 • வி. உருத்திராபதி - வய்ப்பட்டு, நாதஸ்வரம், புல்லாங்குழல், ஹார்மோனியும்
 • வி. கோதண்டபாணி - நாதஸ்வரம்
 • வி. தெட்சணாமூர்த்தி - தவில் கலைஞர்
 • உ. இராதாகிருஷ்ணன் - வயலின், வாய்ப்பாட்டு
 • கே. ஆர். சுந்தரமூர்த்தி - நாதஸ்வரம்
 • கே. ஆர். புண்ணியமூர்த்தி - தவில்
 • இணுவில் சின்னராசா - தவில் கலைஞர்
 • இணுவில் கணேசன் - தவில் கலைஞர்
 • இயல் இசை வாரிதி என். வீரமணி ஐயர் - இசைக், நடனக் கலைஞர்
 • க. சண்முகம்பிள்ளை, மிருதங்கக் கலைஞர்
 • கலைச்செல்வன் ஏரம்பு சுப்பையா

இணுவிலில் அமைந்துள்ள கோயில்கள்[தொகு]

புகழ் பெற்ற, பழமை வாய்ந்த இந்துக் கோயில்கள் பல இவ்வூரில் அமைந்துள்ளன. இவற்றுள் சிறப்பு வாய்ந்தவை வருமாறு:

வெளி இணைப்புக்கள்[தொகு]

9°43′47.86″N 80°1′18.28″E / 9.7299611°N 80.0217444°E / 9.7299611; 80.0217444

"https://ta.wikipedia.org/w/index.php?title=இணுவில்&oldid=1933429" இருந்து மீள்விக்கப்பட்டது